மோத்தம்மா

இந்திய அரசியல்வாதி

சி. மோத்தம்மா (C. Motamma)[1] (பிறப்பு 20 மார்ச் 1951) கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியாவார்.[2][3] இவர் 2010 முதல் 2012 வரை கருநாடக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றினார்.[4] இந்தப் பதவியை வகித்த முதல் பெண்மணி இவர்தான்.[5] சோ. ம. கிருசுணா அமைச்சகத்தின் ஒரு பகுதியாக கருநாடக அரசாங்கத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சராகவும் பணியாற்றினார்.[6][7]

மோத்தம்மா
கருநாடக மாநில இந்திய தேசிய காங்கிரசு]] கடியின் துணைத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
14 ஜூலை 2017
தலைவர்கி. பரமேசுவரா
கருநாடக சட்ட மேலவையின் எதிர்கட்சித் தலைவர்
பதவியில்
9 ஜனவரி 2010 – 17 ஜூன் 2012
முன்னையவர்உக்ரப்பா
பின்னவர்எஸ். ஆர். பாட்டீல்
பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர்
பதவியில்
11 அக்டோபர் 1999 – 28 மே 2004
முதலமைச்சர்சோ. ம. கிருசுணா
முன்னையவர்விமலாபாய் தேஷ்முக்
பின்னவர்பாகிரதி எம். கௌடா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு20 மார்ச்சு 1951 (1951-03-20) (அகவை 73)
அச்சாரடி, அனபால், சக்லேஷ்பூர், ஹாசன், மைசூர் மாநிலம் (தற்போதைய கருநாடகம்)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு ( 1978; 46 ஆண்டுகளுக்கு முன்னர் (1978) முதல்)
துணைவர்எஸ். வெங்கட்ராமன்
பிள்ளைகள்நயனா உட்பட மூவர்
முன்னாள் கல்லூரிபெங்களூர்ப் பல்கலைக்கழகம் profession =
  • அரசியல்வாதி
  • வேளாண்மை

இளமை வாழ்க்கை

தொகு

மோத்தம்மா, தனது பெற்றோருக்கு நான்காவது குழந்தையாகவும் மற்றும் மூன்றாவது மகளாகவும் பிறந்தார். மூடிகெரே அருகே உள்ள மகலமக்கி தொடக்கப்பள்ளியில் சேரும் வரை இவருக்கு பெயர் வைக்கப்படவில்லை. அனைவரும் இவரை மோட்டு என அழைத்ததால் அந்தப் புனைப்பெயரே இவருக்கு பெயராக மாறியது. அவர் தனது உயர்நிலைப் பள்ளியை சிக்மகளூரில் முடித்தார். தனது இளங்கலைப் பட்டத்தை பெங்களூர் மகாராணி கல்லூரியிலும், முதுகலையை பெங்களூர்ப் பல்கலைக்கழகத்திலும் முடித்தார்.[8]

அரசியல் வாழ்க்கை

தொகு

மோத்தம்மா 1978,1989 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் மூடிகெரே சட்டப்பேரவைத் தொகுதியிலிருந்து கர்நாடக சட்டப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்தெடுக்கப்பட்டார்.[9] இவர் 2006 முதல் 2012 வரை சட்ட மேலவையின் உறுப்பினராக இருந்தார்.[10] மீண்டும் ஜூன் 18,2012 அன்று சட்டமன்ற உறுப்பினராக அதே தொகுதியிலிருந்துத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சொந்த வாழ்க்கை

தொகு

மோத்தம்மா வெங்கடராமன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மகள் நயனாவும் மூடிகெரே சட்டமன்ற உறுப்பினராவார்.[11]

மேற்கோள்கள்

தொகு
  1. "Dr". kla.kar.nic.in. Archived from the original on 28 April 2008. பார்க்கப்பட்ட நாள் 3 September 2017.
  2. "LEADER OF OPPOSITION KARNATAKA LEGISLATIVE COUNCIL SINCE FROM 1969". Karnataka Legislative Assembly. Govt. of Karnataka. Archived from the original on 3 September 2017. பார்க்கப்பட்ட நாள் 3 September 2017.
  3. "Motamma may step down as leader of opposition in Karnataka, SR Patil to take over | Latest News & Updates at Daily News & Analysis" (in en-US). dna. 5 March 2011. http://www.dnaindia.com/bangalore/report-motamma-may-step-down-as-leader-of-opposition-in-karnataka-sr-patil-to-take-over-1515707. 
  4. "LEADER OF OPPOSITION KARNATAKA LEGISLATIVE COUNCIL SINCE FROM 1969". Karnataka Legislative Assembly. Govt. of Karnataka. Archived from the original on 3 September 2017. பார்க்கப்பட்ட நாள் 3 September 2017.
  5. "Motamma will be first woman Opposition leader in Council". Deccan Herald. 9 January 2010. https://www.deccanherald.com/content/45960/motamma-first-woman-opposition-leader.html. 
  6. "Position of women in governance still weak" (in en). The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/Position-of-women-in-governance-still-weak/article16474381.ece. 
  7. "SM Krishna's Ministers and their Portfolio in 2004 | 2004 Karnataka Cabinet" (in en-US). Karnataka.com. 30 September 2007. https://www.karnataka.com/govt/ministers-smk/. 
  8. Public TV | ಪಬ್ಲಿಕ್ ಟಿವಿ (1 September 2014), NANU NAN STYLE MOTAMMA ನಾನು ನನ್ನ ಸ್ಟೈಲ್ ಮೋಟಮ್ಮ SEG 01 30, பார்க்கப்பட்ட நாள் 27 September 2017
  9. "Mudigere Elections Results 2014, Current MLA, Candidate List of Assembly Elections in Mudigere, Karnataka". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 28 September 2017.
  10. "Motamma : Indian National Congress, MLC, Karnataka (MLC) Constituency". Janpratinidhi. பார்க்கப்பட்ட நாள் 28 September 2017.
  11. "Nayana Motamma: why this first-time Dalit MLA switched from corporate law to politics". The Hindu. 22 June 2023. பார்க்கப்பட்ட நாள் 2 May 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோத்தம்மா&oldid=4124612" இலிருந்து மீள்விக்கப்பட்டது