சக்லேஷ்பூர்

சக்லேஷ்பூர் (Sakleshpur) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் அமைந்துள்ள மலை வாழிடமாகும். இது சக்லேஷ்பூர் வட்டத்தின் தலைமையகமாகவும் இருக்கிறது.

சக்லேஷ்பூர்
சக்லேஷ்பூரின் பசுமைக் காட்சிகள்
சக்லேஷ்பூரின் பசுமைக் காட்சிகள்
அடைபெயர்(கள்): கர்நாடகாவின் சுவிட்சர்லாந்து.[1][2]
சக்லேஷ்பூர் is located in கருநாடகம்
சக்லேஷ்பூர்
சக்லேஷ்பூர்
கர்நாடகாவில் ச்க்லேஷ்பூரின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 12°53′35″N 75°43′30″E / 12.893°N 75.725°E / 12.893; 75.725
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்ஹாசன்
பிராந்தியம்மலைநாடு
ஏற்றம்
956 m (3,136 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்23,352[3]
இனம்மொழிகள்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
573134
தொலைபேசி இணைப்பு எண்+91–8173
வாகனப் பதிவுகேஏ-46
பாலின விகிதம்100:80 /

பொருளாதாரம்

தொகு

இந்த நகரம் மேற்குத் தொடர்ச்சி மலையின் பல்லுயிர் வெப்பப்பகுதியின் மலைப்பகுதியான மலைநாடு பகுதியில் அமைந்துள்ளது. காப்பி, ஏலக்காய், மிளகு, பாக்குத் தோட்டங்கள் நிறைந்த உயரமான பச்சை மலைகளால் சூழப்பட்ட மிதமான காலநிலையில் அமைந்துள்ளது. வட்டத்தின் பொருளாதாரத்திற்கு முக்கியமாக பங்களிக்கும் இந்தப் பயிர்கள் சுற்றியுள்ள கிராமங்களில் வளர்க்கப்படுகின்றன. துறைமுக நகரமான மங்களூரை (128 கி.மீ.) இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 75இல் (என்.எச் 75) இந்த நகரம் அமைந்துள்ளது). [4] தலைநகரான பெங்களூருக்கு 224 கி.மீ அருகிலுள்ளது. [5] மங்களூரு பன்னாட்டு வானூர்தி நிலையம் 129 கிமீ (80 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.[6]

நிலவியல்

தொகு

சகலேஷ்பூர் 12.893 ° வடக்கிலும் 75.725 ° கிழக்கிலும் அமைந்துள்ளது. [7] இது சராசரி கடல் மட்டத்திலிருந்து 956 மீ (3,136 அடி) உயரத்தில் உள்ளது. [8]

மேற்குத் தொடர்ச்சி மலைகள் இதன் மேற்கு விளிம்பில் விரிவடைந்து, சக்லேஷ்பூரை தெற்கு கன்னட மாவட்டத்திலிருந்து பிரிக்கின்றன. மாவட்டத்தின் எஞ்சிய பகுதி தக்காணப் பீடபூமியில் அமைந்துள்ளது. [9] காவேரியின் துணை நதியான ஹேமாவதி ஆறு, மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் பாய்கிறது. இது, சிக்மகளூரு மாவட்டத்தில் தோன்றி சகலேஷ்பூர் நகரம் வழியாக பாய்கிறது. [10]

இரண்டு நதிகள் இங்கு தோன்றி மலைத்தொடர் வழியாக மேற்கு நோக்கி செல்கின்றன. [11] கெம்புஹோல் நதி மஞ்சராபாத் கோட்டைக்கு அருகே உருவாகி மேற்கு நோக்கி பாயும் நேத்ராவதி ஆற்றில் சேர்கிறது. இது மங்களூரில் அரபிக் கடலில் கலக்கிறது. நேத்ராவதியின் மற்றொரு துணை ஆறான குமாரதாரா ஆறு இதன் தென்மேற்கு பகுதியில் பாய்கிறது.

பல்லுயிர்

தொகு

கேரளாவிலிருந்து குசராத்து வரை பரவியிருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையில் சக்லேஷ்பூர் அமைந்துள்ளது. பிஸ்ல் காடுகளை உள்ளடக்கிய சக்லேஷ்பூரைச் சுற்றியுள்ள தெற்கு மலைச் சிகரம், உலகின் 18 உயிர்-பன்முகத்தன்மை கொண்ட முக்கிய இடங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளது. [12] [13] ஈரமான பருவத்தில் துணை வெப்பமண்டல காலநிலையையும், கனமழை காலத்தில் பல தனித்துவமான தாவர மற்றும் விலங்கு இனங்கள் செழித்து வளரும் சூழலை உருவாக்குகின்றன.

சக்லேஷ்பூரின் உள்ளூர் தாவரங்களில் சிவப்பு-ஆரஞ்சு பகோடா மலரும் அடங்கும், இது உள்நாட்டில் "இரக்தா புஷ்பம்" (இரத்த மலர்) என்று அழைக்கப்படுகிறது. [14]

கோப்பன்-கீகர் வகைப்பாட்டின் படி, சக்லேஷ்பூரில் காலநிலை உள்ளது.

புள்ளிவிவரங்கள்

தொகு

2011, இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி,[15] சக்லேஷ்பூரில் 23,352 என்ற அளவில் மக்கள் தொகை உள்ளது. இதில், 11,558 ஆண்களும், 11,794 பெண்களும் இருக்கின்றனர். சக்லேஷ்பூரின் சராசரி கல்வியறிவு விகிதம் 88.47%: ஆண் கல்வியறிவு 92.72%, மற்றும் பெண் கல்வியறிவு 84.31%. சக்லேஷ்பூரில், 11% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.

மஞ்சராபாத் கோட்டை

தொகு
 
சகலேஷ்பூர் தொடர் வண்டி

திப்பு சுல்தான் இந்நகரைக் கைப்பற்றி இங்கு ஒரு கோட்டையைக் கட்டினான். இது ஒரு சிறைச்சாலையாகக் கட்டப்பட்டது. [16] இது ஒரு நட்சத்திர வடிவ கோட்டை அமைப்பைக் கொண்டுள்ளது, மையத்தில் ஒரு குன்றும் ஒன்பது மூலைகளும் உள்ளன. மையத்தில் உள்ள மலையில் ஏறுவது கடினம், ஆனால் பரந்த காட்சிகளை வழங்குகிறது. கோட்டையை அடைய மொத்தம் 250 படிகள் உள்ளன. [17] மையத்தில் ஒரு வெற்று நுழைவாயில் உள்ளது. இது ஸ்ரீரங்கப்பட்டணத்துக்குச் செல்லும் ஒரு சுரங்கப்பாதையின் நுழைவாயில் என்று கூறப்படுகிறது. [18] நுழைவாயிலில் கோட்டையின் வரைபடத்துடன் ஒரு சுவரோவியமும் உள்ளது. இது சிறந்த நிலையில் உள்ளது. இந்த கோட்டையை இந்தியத் தொல்லியல் ஆய்வகம் பராமரிக்கிறது. [19]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Sunday story: Misty Manjarabad – Where Glinting swords clashed for a slice of glory". Deccan Chronicle. 23 July 2017. http://www.deccanchronicle.com/lifestyle/pets-and-environment/230717/sunday-story-misty-manjarabad-where-glinting-swords-clashed-for-a-slice-of-glory.html. 
  2. "Cardamom, coffee & more". Deccan Herald. 9 September 2014. http://www.deccanherald.com/content/429804/cardamom-coffee-amp-more.html. 
  3. "Sakleshpur Population Census 2011". census2011.co.in. http://www.census2011.co.in/data/town/803171-sakleshpur.html. 
  4. "Distance between Mangalore and Sakleshpur". All Distance Between. பார்க்கப்பட்ட நாள் 17 June 2018.
  5. "Distance between Bangalore and Sakleshpur". All Distance Between. பார்க்கப்பட்ட நாள் 17 June 2018.
  6. "Distance between Sakleshpur and Mangalore International Airport". Distance Calculator. பார்க்கப்பட்ட நாள் 12 December 2019.
  7. Falling Rain Genomics, Inc – Sakleshpur
  8. "Topographic map Sakleshpur".
  9. Peasant Moorings: Village Ties and Mobility Rationales in South India. 17 June 1997.
  10. "After a lull, rains lash Malnad region". The Hindu. 5 September 2019. https://www.thehindu.com/news/national/karnataka/after-a-lull-rains-lash-malnad-region/article29344056.ece. 
  11. "Rivers, lifelines of the land". Deccan Herald. 21 September 2018. https://www.deccanherald.com/rivers-lifelines-land-693883.html. 
  12. Rupa Sriram (9 August 2017). "Monsoon in Sakleshpur". Deccan Herald. https://www.deccanherald.com/content/627282/monsoon-sakleshpur.html. 
  13. "Bisle Ghat road awaits repair". Deccan Herald. 3 July 2014. https://www.deccanherald.com/content/417546/bisle-ghat-road-awaits-repair.html. 
  14. "Cardamom, coffee & more". http://www.deccanherald.com/content/429804/cardamom-coffee-more.html. 
  15. "The Census 2011 is the 15th National census survey conducted by the Census Organization of India". Census Commission of India.
  16. "Tourists to Sakleshpur increasing post rains". The Hindu. 22 June 2018. https://www.thehindu.com/news/national/karnataka/tourists-to-sakleshpur-increasing-post-rains/article24224003.ece. 
  17. "Beltangady: Tipu Sultan's Manjrabad Fort Lies in Shambles". Daijiworld. 20 August 2011 இம் மூலத்தில் இருந்து 12 டிசம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191212144658/https://www.daijiworld.com/printArticles.aspx?sectionID=112635&sectionName=news. 
  18. "Past turns perfect in Bisle Ghat". Deccan Herald. 17 January 2018. https://www.deccanherald.com/content/654297/past-turns-perfect-bisle-ghat.html. 
  19. "Cardamom, coffee & more". 9 September 2014. http://www.deccanherald.com/content/429804/cardamom-coffee-more.html. Rao, Bindu Gopal (9 September 2014).


"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்லேஷ்பூர்&oldid=3242598" இலிருந்து மீள்விக்கப்பட்டது