மோனிகா பேடி
மோனிகா பேடி (Monica Bedi)(பிறப்பு 18 சனவரி 1975) என்பவர் இந்திய நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆவார். இவர் 1990களின் நடுப்பகுதியில் இந்தித் திரைப்படங்களில் அறிமுகமானார். மோனிகாவின் குறிப்பிடத்தக்கப் படைப்புகளில் பியார் இஷ்க் அவுர் மொஹபத் மற்றும் ஜோடி நம்பர் 1 ஆகியவை அடங்கும். இவர் பிக் பாஸ் 2 மற்றும் ஜலக் திக்லா ஜா 2 ஆகியவற்றில் பங்கேற்பதற்காகவும், ஸ்டார் பிளஸ் நிகழ்ச்சியான சரஸ்வதிச்சந்திராவில் குமான் கவுர் வியாசாகவும் நடித்துள்ளார் .
மோனிகா பேடி Monica Bedi | |
---|---|
8வது ஆப் கி ஆவாசு ஊட்க சிறப்புஅ விருதுகள், 2013ல் பேடி | |
பிறப்பு | 18 சனவரி 1975[1][2] சப்பேவால், ஹோஷியார்பூர், பஞ்சாப், இந்தியா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1994–2017 |
துணைவர் | அபு சலீம் (1999–2007)[3] |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுபேடி பஞ்சாபி ஆவார். இவர் பஞ்சாப்பின் ஹோஷியார்பூர் மாவட்டத்தில் உள்ள சபேவால் கிராமத்தில் பிரேம் குமார் பேடி மற்றும் சகுந்தலா பேடி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது பெற்றோர் 1979-ல் நோர்வேயின் டிராம்மனுக்கு குடிபெயர்ந்தனர். பேடி, 1995-ல் தில்லி பல்கலைக்கழகத்தில் தனது கல்வியை முடித்தார்
சிறைத்தண்டனை
தொகுசெப்டம்பர் 2002-ல், பேடி மற்றும் அபு சலேம், ஓர் இந்தியக் கும்பல் கைது செய்யப்பட்டு, பின்னர் போர்ச்சுகலில் போலி ஆவணங்கள் மூலம் நாட்டிற்குள் நுழைந்ததற்காகச் சிறைத்தண்டனை அனுபவித்தனர்.[4] 2006ஆம் ஆண்டில், கற்பனையான பெயரில் கடவுச்சீட்டு வாங்கியதற்காக பேடியை இந்திய நீதிமன்றம் தண்டித்தது.[5] நவம்பர் 2010-ல், இந்திய உச்ச நீதிமன்றம் இவரது தண்டனையை உறுதிசெய்தது. ஆனால் சிறைத் தண்டனையைப் பேடி ஏற்கனவே அனுபவித்த காலத்திற்குக் குறைத்தது.[6][7] பாலிவுட்டில் மோனிகா பேடிக்காக அபு தனது குற்றவியல் தொடர்பினைப் பயன்படுத்தி நடித்ததாகப் பத்திரிகைகள் உட்பட பல்வேறு செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டன.
தொழில்
தொகுடி. ராமா நாயுடு தயாரித்த தெலுங்கு மொழித் திரைப்படமான தாஜ்மகாலில் (1995) பேடிக்கு முதல் பாத்திரம் கிடைத்தது. ராமா நாயுடு இவரை சிவய்யா மற்றும் ஸ்பீட் டான்சர் படங்களிலும் நடிக்க வைத்தார்.[8] 1995ஆம் ஆண்டு சுரக்ஷா மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
பேடி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் 2-ல் பங்கேற்றார்.[9] ஜலக் திக்லா ஜா 3 மற்றும் தேசி கேர்ள் ஆகிய தொடர்களிலும் கலந்துகொண்ட போட்டியாளர்களில் இவரும் ஒருவர்.
யுனிவர்சல் மியூசிக்கில் ஒரு ஆன்மீக இசைத் தொகுப்பிற்காக "ஏகோன்கர்" பாடல்களைப் பாடினார்.[10]
ஹர்ஜித் சிங் ரிக்கி இயக்கிய பஞ்சாபி திரைப்படமான சிர்பியர் (2012)-ல் பேடி நடித்தார்.
2013 முதல் 2014 வரை, ஸ்டார் பிளஸ் நிகழ்ச்சியான சரஸ்வதிச்சந்திராவில் பேடி கும்மானாக எதிர்மறையான பாத்திரத்தில் நடித்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "The tale of Monica Bedi". The Times of India. Archived from the original on 16 July 2013. பார்க்கப்பட்ட நாள் 13 February 2013.
- ↑ "जेलर पर लगा था इस एक्ट्रेस के बाथरूम में कैमरे लगाने के आरोप, अंडरवर्ल्ड डॉन से भी जुड़ा नाम" (in hi). Rajasthan Patrika. 19 January 2020. https://www.patrika.com/bollywood-news/birthday-special-know-unknown-facts-about-monica-bedi-5665318/.
- ↑ Bedi, Aneesha (3 July 2015). "I am happy for him, says Abu Salem's ex-partner Monica Bedi on his impending marriage" (in en). Hindustan Times இம் மூலத்தில் இருந்து 13 பிப்ரவரி 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210213021347/https://www.hindustantimes.com/india/i-am-happy-for-him-says-abu-salem-s-ex-partner-monica-bedi-on-his-impending-marriage/story-IXPuSOnhBwVKQqu069TSsM.html.
- ↑ "The tale of Monica Bedi". The Times of India. 10 August 2005. பார்க்கப்பட்ட நாள் 27 September 2016.
- ↑ "Top 10 Celebrities and Their Run-ins With the Law". The New Indian Express. 25 February 2016. Archived from the original on 25 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 27 September 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Fake Passport Case: SC Upholds Bedi's Conviction". Outlook. 9 November 2010. Archived from the original on 2 February 2014. பார்க்கப்பட்ட நாள் 5 October 2012.
- ↑ "Supreme Court upholds Monica Bedi's conviction in fake passport case". Daily News and Analysis. 9 November 2010. பார்க்கப்பட்ட நாள் 27 September 2016.
- ↑ "Monica Bedi makes Telugu producers wary". The Times of India. Archived from the original on 11 April 2013. பார்க்கப்பட்ட நாள் 13 February 2013.
- ↑ IANS (6 September 2008). "Monica Bedi bids adieu to Bigg Boss". Sify. Archived from the original on 22 October 2012. பார்க்கப்பட்ட நாள் 20 September 2011.
- ↑ "Monica Bedi turns singer!". The Times of India. Archived from the original on 11 April 2013. பார்க்கப்பட்ட நாள் 13 February 2013.