மோனோபியூட்டைல் தாலேட்டு

வேதிச் சேர்மம்

மோனோபியூட்டைல் தாலேட்டு (Monobutyl phthalate) என்பது C12H14O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதன் கட்டமைப்பு வாய்ப்பாட்டை CH3(CH2)3OOCC6H4COOH. என்று எழுதுவார்கள். வெண்மை நிறத்துடன் ஒரு திண்மமாகக் காணப்படும் இதில் ஒரு பியூட்டைல் எசுத்தர் குழு, ஒரு கார்பாக்சிலிக் அமிலக்குழு இரண்டும் உள்ளன. டைபியூட்டைல் தாலேட்டின் வளர்சிதை மாற்றத்தில் மோனோபியூட்டைல் தாலேட்டு ஒரு முக்கியமான விளைபொருளாகும். மற்ற தாலேட்டுகளைப் போலவே இதுவும் நாளமில்லா சுரப்பிகளைப் பாதிக்கிறது. [3]

மோனோபியூட்டைல் தாலேட்டு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-பியூட்டாக்சைடுகார்பனைல்பென்சாயிக் அமிலம்[1]
வேறு பெயர்கள்
1,2-பென்சீன் டைகார்பாக்சிலிக் அமிலம், மோனோபியூட்டைல் எசுத்தர்[1]
2-(பியூட்டாக்சிகார்பனைல்)பென்சாயிக் அமிலம்[1]
பியூட்டைலைதரசன் தாலேட்டு[1]
மோனோ-என்-பியூட்டைல் தாலேட்டு[1]
தாலிக் அமில மோனோபியூட்டைல் எசுத்தர்[1]
இனங்காட்டிகள்
131-70-4
ChEBI CHEBI:88522
ChEMBL ChEMBL2447930
ChemSpider 8257
EC number 205-036-2
InChI
  • InChI=1S/C12H14O4/c1-2-3-8-16-12(15)10-7-5-4-6-9(10)11(13)14/h4-7H,2-3,8H2,1H3,(H,13,14)
    Key: YZBOVSFWWNVKRJ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8575
SMILES
  • CCCCOC(=O)C1=CC=CC=C1C(=O)O
UNII ZI46LWZ45G
பண்புகள்
C12H14O4
வாய்ப்பாட்டு எடை 222.24 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 73.5 °C (164.3 °F; 346.6 K)
தீங்குகள்
GHS pictograms The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H360
P201, P202, P281, P308+313, P405, P501
Lethal dose or concentration (LD, LC):
1,000 மி.கி கி.கி−1 (சுண்டெலி, உடல் உள்ளுறை மூலம்)[1][2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மோனோபென்சைல் தாலேட்டைக்காட்டிலும் குறைந்த அளவில் மோனோபியூட்டைல் தாலேட்டு இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றப்பொருளாக பியூட்டைல் பென்சைல் தாலேட்டின் வளர்சிதை மாற்றத்திலும் உருவாகிறது. இதை நீராற்பகுப்புக்கு உட்படுத்தினால் தாலிக் அமிலமும் 1-பியூட்டனாலும் உருவாகின்றன. [4]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Monobutyl phthalate". PubChem. National Center for Biotechnology Information, U.S. National Library of Medicine. January 4, 2020. பார்க்கப்பட்ட நாள் January 10, 2020.
  2. Pierre Chambon; Riotte, Maurice; Daudon, Marc; Chambon-Mougenot, Renée; Bringuier, Janine (1971). "Etude du métabolisme des phtalates de dibutyle et de diéthyle chez le Rat" (in French). Comptes Rendus Hebdomadaires des Séances de l'Académie des Sciences, Série D: Sciences Naturelles 273 (22): 2165-2168. பப்மெட்:5003086. https://gallica.bnf.fr/ark:/12148/bpt6k57535548/f743.image. 
  3. "Effects of monobutyl phthalate on steroidogenesis through steroidogenic acute regulatory protein regulated by transcription factors in mouse Leydig tumor cells". Journal of Endocrinological Investigation 38 (8): 875–884. doi:10.1007/s40618-015-0279-6. 
  4. Huang, Jingyu; Nkrumah, Philip N.; Li, Yi; Appiah-Sefah, Gloria (2013). "Chemical Behavior of Phthalates Under Abiotic Conditions in Landfills". Reviews of Environmental Contamination and Toxicology. 224. New York, NY: இசுபிரிங்கர் பதிப்பகம். பக். 39–52. doi:10.1007/978-1-4614-5882-1_2. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781461458814.