மௌன வழி (Silent Way) என்பது மொழி-கற்பிக்கும் நுட்பங்களுள் ஒன்றாகும். கலேப் கத்தேக்னோவால் உருவாக்கப்பட்ட இந்த நுட்பமானது மௌனத்தையே அதிகளவில் பயன்படுத்தும் கற்பித்தல் முறையாகவுள்ளது. 1963 இல் கத்தேக்னோ, இக் கற்பிக்கும் வழியை "அயல்மொழிகளைப் பள்ளிகளில் கற்பிக்கும் முறை: மௌன வழி" (Teaching Foreign Languages in Schools: The Silent Way) என்ற புத்தகத்தில் வெளியிட்டார்.[1] அன்றைய காலகட்டத்திலிருந்த மொழிக் கல்வியைக் கற்பிக்கும்முறை குறித்த அதிருப்தியினால் அவர் புதிய மாற்று நுட்பங்களைக் கண்டறிந்தார். இவரது கற்பிக்கும் முறையானது "மொழி-கற்பிக்கும் மாற்றுமுறை"யாகக் கருதப்பட்டது. குக் என்பார் இவரது முறையை "இதர பாணிகள்" என்ற தலைப்பின்கீழ் சேர்க்கிறார்;[2] ரிச்சர்ட்சு, "மாற்று அணுகல்களும் முறைகளும்" என்பதன் கீழ் சேர்க்கிறார்;[3] ஜின்& கோர்ட்டாசி "மனிதநேய அல்லது மாற்று அணுகல்கள்" என அழைக்கிறார்.[4]

A teacher and student sit opposite one another in a small language classroom
மௌன வழிக் கல்வியறை. ஆசிரியரும் மாணவர்களும் ஆங்கிலம் பயிலல்

இந்தக் கற்றல் வழியானது, தன்னிசையாகவும் அதீத ஈடுபாட்டுடனும் கூடிய பங்களிப்பை மாணவர்களிடம் வலியுறுத்துகிறது. இக் குறிக்கோளை அடைவதற்கு மௌனம் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. மாணவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தல், பதில்களை வரவழைத்தல், மாணவர்களது பிழைகளை அவர்களே திருத்திக்கொள்ளல் போன்றவற்றுக்கு, ஆசிரியர் மௌனத்தையும் சைகைகளையும் பயன்படுத்துகிறார். இக்கற்றல் முறைக்கு உச்சரிப்பு அடிப்படையாக அமைகிறது; ஒவ்வொரு பாடத்திற்கும் அதிகப்படியான நேரம் செலவிடப்படுகிறது; முறையான பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது; செயற்பாட்டிலுள்ள பல்துறையிலான குறைந்த வார்த்தைகளைச் சொல்லித்தருவதில் கவனம் செலுத்துகிறது; மொழிபெயர்ப்பும் வெறுமனே மனப்பாடம் செய்வதும் தவிர்க்கப்படுகின்றன. வார்த்தைகளை அவை பயன்படுத்தப்படும் சூழலுடனும் பொருளுடனும் பழக்கப்படுத்தப்படுகின்றன. மாணவர்களைக் கவனித்தல் மூலமே மதிப்பாய்வுகள் செய்யப்படுகின்றன; ஆசிரியர்கள் எந்தவொரு முறைசார் தேர்வும் நடத்துவதில்லை.

படத்தொகுப்பு

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Gattegno 1963, available as Gattegno 1972.
  2. Cook 2008, ப. 266–270.
  3. Richards 1986, ப. 81–89.
  4. Jin & Cortazzi 2011, ப. 568–569.

மேற்கோள்கள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
The Silent Way
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌன_வழி&oldid=3849288" இலிருந்து மீள்விக்கப்பட்டது