மௌலா அலி மலை

ஆந்திராவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஓர் இசுலாமிய வழிபாட்டுத் தளம்

மௌலா அலி மலை (Moula Ali hill) இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள மௌலா அலி என்ற இடத்தில் குடை வடிவத்தில் அமைந்துள்ள ஓர் மலையாகும். மலையுச்சியில் அமைந்துள்ள மௌலா அலி தர்கா மற்றும் பள்ளிவாசல் ஆகியவற்றிற்கு இந்த இடம் நன்கு அறியப்பட்டதாகும். இப்பகுதியில் சியா இசுலாமியர்கள் அதிகளவில் வசிக்கின்றனர்.

மௌலா அலி மலை.
கி.பி.1875இல் மலையின் ஓர் காட்சி
கி.பி.1875இல் எடுக்கப்பட்ட மலையின் ஓர் காட்சி
உயர்ந்த புள்ளி
உயரம்614.7 m (2,017 அடி)
ஆள்கூறு17°15′57″N 78°35′48″E / 17.26583°N 78.59667°E / 17.26583; 78.59667
புவியியல்
மௌலா அலி மலை. is located in இந்தியா
மௌலா அலி மலை.
மௌலா அலி மலை.
ஐதராபாத்துக்கு வடகிழக்கில் அமைந்துள் மௌலா அலி மலை
அமைவிடம்மௌலா அலி, ஐதராபாத்து, இந்தியா
ஏறுதல்
முதல் மலையேற்றம்மௌலா அலி
எளிய வழி484 படிகள்

கண்ணோட்டம்

தொகு
 
மௌலா அலி மலையின் காட்சி, 1793
 
மாலை நேரத்தில் மலையிலிருந்து ஒரு காட்சி

மௌலா அலி மலை தோராயமாக 614 மீட்டர்கள் (2,014 அடி) உயரம் கொண்டது.[1] இது தர்காவிலிருந்து மலையின் அடிப்பகுதி வரை 484 படிகளைக் கொண்டுள்ளது. மேலும், இதைச் சுற்றி சுமார் 600 கல்லறைகள் உள்ளன.[2]

மௌலா அலி மலைக்கு அருகில் "கதாம்-இ-ரசூல்" என்று அழைக்கப்படும் மற்றொரு குன்றும் உள்ளது. அதில் தீர்க்கதரிசியின் புனித நினைவுச்சின்னங்கள் அசப் சாகியின் ஊழியரான முகமது சக்ருல்லா ரகானால் இங்கு வைக்கப்பட்டன.[1]

வரலாறு

தொகு

மலைக்கு அருகில் உள்ள பகுதியில் புதிய கற்காலம் முதல் மனிதர்கள் வசித்ததற்கு அடையாளமாக அகழ்வாராய்ச்சியில் மண்பாண்டங்கள், இரும்பு கருவிகள் மற்றும் மனித எலும்புக்கூட்டின் துண்டுகள் தளத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[2]

பிரிட்டிசு வரலாற்றாசிரியர் வில்லியம் தால்ரிம்பில் என்பவரின் கணக்குகளின்படி, கி.பி. 1578 ஆம் ஆண்டில், குதுப் ஷாஹிகளின் அரசவையின் யாகுத் என்ற திருநங்கை ஒருவர் நோய்வாய்ப்பட்டார். அலி ( முகமது நபியின் மகள் பாத்திமாவின் கணவர்) மலை உச்சியில் தனக்காகக் காத்திருப்பதாகவும், பச்சை நிற ஆடை அணிந்த ஒருவர் மலையில் வந்துப் பார்க்கச் சொன்னதாக அவர் கனவு கண்டார். அவரது கனவில் யாகுத் அந்த மனிதனுடன் மலைக்குச் செல்கிறார். அலி மலையின் மேல் அமர்ந்து ஒரு கல்லில் கையை ஊன்றிக் கொண்டிருப்பதைக் கண்டார். மறுநாள் காலை, யாகுத்தின் நோய் குணமானது. மலையில் அதில் அலீயின் கை அடையாளங்கள் இருந்ததாகக் கூறப்படும் ஒரு கல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்ட சுல்தான் அந்த மலையைப் பார்வையிட்டு, மலையின் மேல் ஒரு தர்காவைக் கட்ட உத்தரவிட்டார். கிடைத்த கல் மலை உச்சியில் உள்ள சன்னதியில் உள்ளது.[1][3][4][5]

இச்சம்பவத்தின் பின்னர் அந்த மலைக்கு 'மௌலா அலி' என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த கல் சூபிகள், துறவிகள் மற்றும் ஆன்மீகவாதிகளுக்கு பிரபலமானது. ஏனெனில் கல்லுக்கு குணப்படுத்தும் சக்தி உள்ளது என்ற நம்பிக்கையை அவர்கள் கொண்டுள்ளனர். [4]

 
1895 ஆம் ஆண்டு மௌலா அலியில் இருந்து யானை மீது ஏறிச் செல்லும் நிசாம்.

குதுப் ஷாஹி சுல்தான்கள் 17 ரிஜாப் அன்று கோல்கொண்டாவிலிருந்து மலைக்கு வருடாந்திர யாத்திரையைத் தொடங்கினார்கள். ஆனால் 1687 இல் சன்னி இசுலாமியர்கள் ஐதராபாத்தைக் கைப்பற்றிய பிறகு, திருவிழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ஐதராபாத் நிசாம்களின் ஆட்சியில், இந்த விழா இரண்டு முக்கிய தேசிய விழாக்களில் ஒன்றாக மாறியது. [4]

மௌலா அலி தர்கா

தொகு

மலையின் உச்சியில் மௌலா அலி தர்கா அமைந்துள்ளது. இது சுல்தான் இப்ராகிம் குதுப் சாவால் கட்டப்பட்டது [1] மேலும் இது முகமது நபியின் மருமகன் அலிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரே தர்காவாகும். [6] [7] அதன் உட்புறம் ஆயிரக்கணக்கான கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. [3] மேலும் இது ஐதராபாத்தில் உள்ள 11 பாரம்பரிய தளங்களில் ஒன்றாகும். இது ஐதராபாத்து நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் "பழங்காலப் பொருட்களின் பாதுகாப்புக் குழு"வால் அடையாளம் காணப்பட்டுள்ளது.[8] மௌலா அலி மலையில் இசுலாத்தின் நான்காவது கலிபாவான அலி இப்னு தாலிபின் கை பொறிப்பு உள்ளது என நம்புகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Syed Ali Asgar Bilgrami (1927). Landmarks of the Deccan: A Comprehensive Guide to the Archaeological Remains. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120605435.
  2. 2.0 2.1 Hyderabad (India). Dept. of Information and Public Relations (1953). History and legend in Hyderabad.
  3. 3.0 3.1 Sarina Singh; Lindsay Brown; Paul Harding; Trent Holden; Amy Karafin; Kate Morgan; John Noble (2013-09-01). Lonely Planet South India & Kerala. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781743217948.
  4. 4.0 4.1 4.2 William Dalrymple (2004-04-27). White Mughals: Love and Betrayal in Eighteenth-Century India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781101098127.
  5. Syeda Imam (2008-05-14). The Untold Charminar. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788184759716.
  6. Harriet Ronken Lynton (1987). Days Of The Beloved. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780863112690.
  7. Director of Print. and Stationery at the Government Secretariat Press; [copies can be from: Government Publication Bureau, Andhra Pradesh], 2000 (2000). Andhra Pradesh District Gazetteers: Ranga Reddy.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  8. Madhu Vottery (2012-12-11). A Guide to the Heritage of Hyderabad. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788129125842.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌலா_அலி_மலை&oldid=3843355" இலிருந்து மீள்விக்கப்பட்டது