மௌலா-அலி (Moula Ali) என்பது மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டத்தின் மல்கஜ்கிரி மண்டலத்தில் நன்கு வளர்ந்த தொழில்துறை மற்றும் நகர்ப்புற பகுதியாகும். இது பெருநகர ஐதராபாத்து மாநகராட்சியின் ஒரு பகுதியாக உள்ளது. இந்தப் பகுதி மௌலா அலி தொடர் வண்டி நிலையம் வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. [1] இது அதன் மௌலா அலி மலைக்காக குறிப்பிடத்தக்கது. அதன் உச்சியில் அலிக்கு அர்ப்பணிக்கப்பட்ட மௌலா அலி தர்காவும் மற்றும் பள்ளிவாசல் ஒன்றும் உள்ளது.

மௌலா அலி
கப்பர்குட்டா
புறநகர்ப் பகுதி
மௌலா அலி மலையின் காட்சி, சுமார் 1902
மௌலா அலி மலையின் காட்சி, சுமார் 1902
மௌலா அலி is located in தெலங்காணா
மௌலா அலி
மௌலா அலி
தெலங்காணாவில் மௌலா அலியின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 17°28′5″N 78°33′22″E / 17.46806°N 78.55611°E / 17.46806; 78.55611
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்மெட்சல்-மல்கஜ்கிரி மாவட்டம்
வட்டம் Circleமல்கஜ்கிரி மண்டலம்
மாநகரம் பெருநகர் பகுதிசிக்கந்தராபாத் ஐதராபாத்து பெருநகர வளர்ச்சி ஆணையம்
நீதிமன்றம்X நெரெட்மெட்டில் உள்ள மல்கஜ்கிரி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம்
காவல் நிலையம்மல்கஜ்கிரி [1]
நிறுவப்பட்டதுஅனோ டொமினி 1578 (447 ஆண்டுகளுக்கு முன்னர்) (1578)
தோற்றுவித்தவர்நிசாம்
பெயர்ச்சூட்டுமுகமது நபியின் மகள் பாத்திமாவின் கணவர் அலி .
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு மொழி, உருது
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
மௌலா அலி - 500040
தொலைபேசி இணைப்பு எண்+9140
மக்களவைத் தொகுதிமல்காஜ்‌கிரி
நிர்வாகம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி
மாநிலச் சட்டப் பேரவை constituencyமல்காஜ்‌கிரி

இது குதுப் ஷாஹி ஆட்சியாளர்களின் காலத்தில் கட்டப்பட்டது. ஐதராபாத்து நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தால் அடையாளம் காணப்பட்ட 11 பாரம்பரியத் தளங்களில் மௌலா அலி தர்காவும் ஒன்றாகும். இது அடிப்படையில் ஒரு பெரிய பாறைப் பகுதியாகக் காணப்படுகிறது. மௌலா அலி மலைக்கு அருகில் "கதம்-இ-ரசூல்" என்று அழைக்கப்படும் மற்றொரு குன்றும் உள்ளது. அதில் தீர்க்கதரிசியின் புனித நினைவுச்சின்னங்கள் அசப் சாகியின் ஊழியரான முகமது சக்ருல்லா ரகானால் இங்கு வைக்கப்பட்டன.

வரலாறு

தொகு

ஐதராபாத்தின் மௌலா அலி தர்கா மற்றும் மௌலா அலி வளைவு ஆகியவை குதுப் ஷாஹி வம்சத்தின் போது உருவாக்கப்பட்டது. பிரிட்டிசு வரலாற்றாசிரியர் வில்லியம் தால்ரிம்பில் என்பவரின் கணக்குகளின்படி, கி.பி. 1578 ஆம் ஆண்டில், குதுப் ஷாஹிகளின் அரசவையின் யாகுத் என்ற திருநங்கை ஒருவர் நோய்வாய்ப்பட்டார். அலி ( முகமது நபியின் மகள் பாத்திமாவின் கணவர்) மலை உச்சியில் தனக்காகக் காத்திருப்பதாகவும், பச்சை நிற ஆடை அணிந்த ஒருவர் மலையில் வந்துப் பார்க்கச் சொன்னதாக அவர் கனவு கண்டார். அவரது கனவில் யாகுத் அந்த மனிதனுடன் மலைக்குச் செல்கிறார். அலி மலையின் மேல் அமர்ந்து ஒரு கல்லில் கையை ஊன்றிக் கொண்டிருப்பதைக் கண்டார். மறுநாள் காலை, யாகுத்தின் நோய் குணமானது. மலையில் அதில் அலீயின் கை அடையாளங்கள் இருந்ததாகக் கூறப்படும் ஒரு கல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தைப் பற்றி கேள்விப்பட்ட சுல்தான் அந்த மலையைப் பார்வையிட்டு, மலையின் மேல் ஒரு தர்காவைக் கட்ட உத்தரவிட்டார். கிடைத்த கல் மலை உச்சியில் உள்ள சன்னதியில் உள்ளது.[2][3][4]

குதுப் ஷாஹி சுல்தான்கள் 17 ரிஜாப் அன்று கோல்கொண்டாவிலிருந்து மலைக்கு வருடாந்திர யாத்திரையைத் தொடங்கினார்கள். ஆனால் 1687 இல் சன்னி இசுலாமியர்கள் ஐதராபாத்தைக் கைப்பற்றிய பிறகு, திருவிழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. நிசாம்களின் ஆட்சியில், இந்த விழா இரண்டு முக்கிய தேசிய விழாக்களில் ஒன்றாக மாறியது.

மலைக்கு அருகில் உள்ள பகுதியில் புதிய கற்காலம் முதல் மனிதர்கள் வசித்ததற்கு அடையாளமாக அகழ்வாராய்ச்சியில் மண்பாண்டங்கள், இரும்பு கருவிகள் மற்றும் மனித எலும்புக்கூட்டின் துண்டுகள் தளத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[5]. நிசாம் காலத்தில், ஐதராபாத்து குதிரைப் பந்தய மைதானம் போன்ற இடங்களுடன், மௌலா-அலி மிகவும் முக்கியமான பகுதியாக இருந்தது. பின்னர் 1886 இல் ஐதராபாத்து நிசாம் ஆறாம் ஆசாப் ஜா தனது அரண்மனைக்கு அருகில் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் மௌலா அலி பகுதியில் செயல்பட்டுவந்த ஐதராபாத்து குதிரைப் பந்தய மைதனம் 1886 ஆம் ஆண்டில் இங்கு மாற்றப்பட்டது. [6] பின்னர், அவர் பந்தய மைதானத்தில் மக்பூப் மாளிகையையும் கட்டினார். [7]. 1954 இல், முதல் திறந்தவெளி சிறை மௌலா அலியில் திறக்கப்பட்டது. பின்னர் செர்லப்பள்ளிக்கு மாற்றப்பட்டது.

மேற்கோள்கள்

தொகு
  1. Geetanath, V. (9 May 2014). "For a well oiled public transport" (in en-IN). The Hindu. http://www.thehindu.com/news/cities/Hyderabad/for-a-well-oiled-public-transport/article5990065.ece. 
  2. Sarina Singh; Lindsay Brown; Paul Harding; Trent Holden; Amy Karafin; Kate Morgan; John Noble (2013-09-01). Lonely Planet South India & Kerala. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781743217948.
  3. William Dalrymple (2004-04-27). White Mughals: Love and Betrayal in Eighteenth-Century India. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781101098127.
  4. Syeda Imam (2008-05-14). The Untold Charminar. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788184759716.
  5. Hyderabad (India). Dept. of Information and Public Relations (1953). History and legend in Hyderabad.
  6. "Hyderabad Race Club". பார்க்கப்பட்ட நாள் 2018-07-30.
  7. "Hyderabad's tryst with horse racing: From a leisurely sport to a multi-crore business". பார்க்கப்பட்ட நாள் 2019-12-02.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மௌலா அலி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மௌலா_அலி&oldid=3843354" இலிருந்து மீள்விக்கப்பட்டது