ம. க. வேற்பிள்ளை
ம. க. வேற்பிள்ளை (சனவரி 8, 1847 - 1930) இலங்கைத் தமிழ் உரையாசிரியரும், தமிழறிஞரும், பதிப்பாசிரியரும், தமிழாசிரியரும் ஆவார்.[1][2]
ம. க. வேற்பிள்ளை | |
---|---|
பிறப்பு | சனவரி 8, 1847 மட்டுவில், யாழ்ப்பாண மாவட்டம் |
இறப்பு | 1930 (அகவை 82–83) |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அறியப்படுவது | உரையாசிரியர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | கணபதிப்பிள்ளை உடையார் |
பிள்ளைகள் | ம. வே. திருஞானசம்பந்தம், வே.மாணிக்கவாசகர், ம. வே. மகாலிங்கசிவம், நடராசா, கந்தசாமி |
உறவினர்கள் | ம. பார்வதிநாதசிவம் (பேரன்) |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுவேற்பிள்ளை யாழ்ப்பாணம், மட்டுவில் என்ற ஊரில் கணபதிப்பிள்ளை உடையார், புலோலியைச் சேர்ந்த உமாமகேசுவரி[2] ஆகியோருக்குப் பிறந்தவர். மட்டுவில் சண்முகம்பிள்ளை, நல்லூர் கார்த்திகேயப் புலவர், ஆறுமுக நாவலர் ஆகியோரிடம் கல்வி கற்றவர்.[1] சிதம்பரம் நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி கற்றார். செய்யுள் இயற்றுவதில் வல்லவராக இருந்ததால் சிதம்பரம் முத்தையா பட்டர் இவருக்கு "பிள்ளைக்கவி" என்ற பட்டத்தை அளித்தார்.[1] இவரது உரையெழுதும் திறமையை வியந்த வித்துவ சிரோமணி பொன்னம்பலப் பிள்ளை இவருக்கு "உரையாசிரியர்" என்னும் பட்டத்தை அளித்தார்.[2]
ம. வே. திருஞானசம்பந்தம், சட்ட அறிஞர் வே. மாணிக்கவாசகர், குருமணி ம. வே. மகாலிங்கசிவம், நடராசா, கந்தசாமி ஆகியோர் ம. க. வேற்பிள்ளையின் பிள்ளைகள் ஆவர்.[2] புலவர் ம. பார்வதிநாதசிவம் இவரின் பேரனாவார்.
எழுதிய நூல்கள்
தொகு- சந்திரமெளலீசர் சதகம் என்னும் ஈழமண்டல சதகம்
- ஆருயிர்க் கண்மணி மாலை
- புலோலி வைரவக் கடவுள் தோத்திரம்
உரைகள்
தொகு- திருவாதவூரடிகள் புராண விருத்தியுரை
- புலியூரந்தாதி
- அபிராமி அந்தாதி
- கெவுளிநூல் விளக்கவுரை[2]
பதிப்பித்த நூல்கள்
தொகு- வேதாரணிய புராணம்
- சிவகாமியம்மை சதகம்