ம. முத்துசாமி

ம. முத்துசாமி (M. Muthuswamy) கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகாவிற்குட்பட்ட சங்கரன்புதூரில் 1908 வைகாசி 8 ஆம் தியதி பிறந்தவர் ஆவார். இவரது பெற்றோர் மகாராசன் மற்றும் தாணம்மாள் ஆவர்.

ம. முத்துசாமி
M. Muthuswamy
தனிநபர் தகவல்
பிறப்பு சங்கரன்புதூர், அகஸ்தீஸ்வரம், திருவிதாங்கூர்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) முத்தம்மாள்
கல்வி ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரி
தொழில் நிலக்கிழார்
சமயம் இந்து

இளமைக்காலம்தொகு

தனது ஆரம்பப்பள்ளியை தேரூர் ஆரம்பப்பள்ளியிலும், உயர்நிலைக்கல்வியை கோட்டாறு உயர்நிலைப்பள்ளியிலும் பயின்றார். கல்லூரிப்படிப்பை ஸ்காட் கிறிஸ்துவக் கல்லூரியில் பயின்றார்.

அரசியல் செயல்பாடுதொகு

இந்தியா விடுதலை பெற்ற பின்னரும் திருவிதாங்கூர் சமத்தானத்துடன் (கேரளா) இருந்த குமரி மாவட்டத்தைத் தமிழ்நாட்டுடன் இணைக்க 'திருவிதாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' கட்சியில் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டார்[1]. மேலும் அரிசன முன்னேற்றத்திற்காகவும் உழைத்தவர் ஆவார்.

மேற்கோள்கள்தொகு

  1. நாஞ்சில் ஏடு (1961 வெளியீடு). பக்கம் 139
"https://ta.wikipedia.org/w/index.php?title=ம._முத்துசாமி&oldid=3192408" இருந்து மீள்விக்கப்பட்டது