யங் மங் சங்


யங் மங் சங் (Yung Mung Sung) என்பது தற்போது தமிழில் தயாராகி வரக்கூடிய நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும்.எம். எஸ். அர்சுன் என்பவர் இதற்கு திரைக்கதை எழுதி தயாரித்துள்ளார்.பிரபு தேவா மற்றும் லெட்சுமி மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.தங்கர் பச்சான் மற்றும் ஆர். ஜே. பாலாஜி ஆகியோர் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.பிப்ரவரி 2017 ஆம் ஆண்டில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பு தொடங்கப்பட்டது.[1][2] பிரபு தேவா இந்த திரைப்படத்தில் தற்காப்புக் கலை நிபுணராக நடித்துள்ளார், 1970-80களில் இந்த கதை நடக்கிறது. [3]

யங் மங் சங்
இசை அம்ரேசு கணேசு
ஒளிப்பதிவு ஆர். பி. குருதேவ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

தயாரிப்புதொகு

பிரபு தேவா சினிமா துறைக்கு புதிதாக வந்த அர்ஜுன் என்பவருடன் இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்ட பின்னர், அர்ஜுன், சனவரி 2017 ஆம் ஆண்டில் “யங் மங் சங்” என்ற நகைச்சுவை திரைப்படமான இந்த திரைப்படத்தை வாசன் விசுவல் வென்ச்சர்சு என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரித்து வருகிறார்.தங்கர் பச்சான் மற்றும் ஆர்.ஜே.பாலாஜீ ஆகியோர் இத்திரைப்படத்தில் துணை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.தேவா, தேவாவின் தந்தை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.[4][5] முன்னணி நடிகையான காத்ரீன் திரீசாவைத் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக படக்குழு முடிவு செய்தது. ஆனால் காத்ரீன் திரீசா நடிக்க கால அவகாசம் கிடைக்காததால், லெட்சுமி மேனனை கதாநாயகியாக படக்குழு தேர்வு செய்தது.[6][7] பிரபு தேவா இந்த திரைப்படத்தில் தற்காப்புக் கலை கற்றுக் கொடுக்கும் ஆசானாக நடித்துள்ளார். 1970 மற்றும் 80களில் இந்த கதை பயணிக்கிறது.[8]

பிப்ரவரி 9, 2017 ஆம் ஆண்டில் சென்னையில் இந்த திரைப்படத்தின் தயாரிப்பு விருந்து நிகழ்வுடன் தொடங்கியது.[9] அம்ரீசு இந்த திரைப்படப் பாடலைப் பதிவு செய்தார். சங்கர் மகாதேவன் பாடலைப் பாடியுள்ளார். பிரபு தேவா இந்தப் பாடலை எழுதியுள்ளார்.[10]

மேற்கோள்கள்தொகு

  1. "PrabhuDeva's Yung Mung Sung Movie Pooja". YouTube. 2017-02-09. 2017-02-09 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Look who's teaming up again!". The New Indian Express. 2017-02-06. 2017-02-16 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Prabhu Deva can handle both comedy and action convincingly, says MS Arjun, director of Yung Mung Sung". Firstpost. 2018-02-28. 2018-03-29 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Prabhu Deva to once again team up with RJ Balaji". Sify.com. 2017-02-16 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Prabhu Deva's next film titled as Yung Mung Sung". Behindwoods.com. 2017-01-28. 2017-02-16 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Lakshmi Menon to romance Prabhu Deva?". Sify.com. 2017-02-16 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Catherine Tresa in talks for Prabhu Deva's next project". The New Indian Express. 2017-02-04. 2017-02-16 அன்று பார்க்கப்பட்டது.
  8. "Prabhudeva's next is a period film". Deccanchronicle.com. 2017-02-16 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Prabhu Deva's Yung Mung Sung shooting begins today". Behindwoods.com. 2017-02-09. 2017-02-16 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Prabhu Deva’s special surprise with Yang Mang Chang" (in en-US). Top 10 Cinema. 2017-07-26. Archived from the original on 2017-07-30. https://web.archive.org/web/20170730105927/https://top10cinema.com/article/43406/prabhu-devas-special-surprise-with-yang-mang-chang. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=யங்_மங்_சங்&oldid=3371687" இருந்து மீள்விக்கப்பட்டது