யமுனா கிருஷ்ணன்
யமுனா கிருஷ்ணன் (Yamuna Krishnan)(பிறப்பு 25 மே 1974) என்பவர் சிக்காகோ பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் பேராசிரியராக உள்ளார். இவர் இப்பல்கலைக்கழகத்தில் ஆகத்து 2014 முதல் பணியாற்றி வருகின்றார். கிருஷ்ணன் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள பரப்பனங்கடியில் பிறந்தார். இவருடைய தந்தை பி. டி. கிருட்டிணன் தாயார் மினி. முன்னதாக இந்தியாவில் தேசிய உயிரியல் அறிவியல் மையம், டாடா அடிப்படை ஆராய்ச்சி கழகம், பெங்களூர் பணியாற்றினார். கிருஷ்ணன் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதினை பெற்றார். இவருக்கு இந்த விருதினை 2013ஆம் ஆண்டில் வேதியியல் பிரிவில் இந்திய அரசு வழங்கியது.[1]
யமுனா கிருஷ்ணன் | |
---|---|
பிறப்பு | 25 மே 1974 |
வாழிடம் | சிக்காகோ |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியர் |
துறை | கரிம வேதியியல் |
பணியிடங்கள் | இந்திய அறிவியல் நிறுவனம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தேசிய உயிரியல் அறிவியல் மையம் சிக்காகோ பல்கலைக்கழகம் |
கல்வி | சென்னைப் பல்கலைக்கழகம், பி. எஸ்சி., 1993 இந்திய அறிவியல் நிறுவனம், எம். எஸ்., 1997, முனைவர் பட்டம், 2002 |
விருதுகள் | சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது, இன்போசிசு பரிசு |
கல்வி
தொகுகிருஷ்ணன் 1993ஆம் ஆண்டில் சென்னை, பெண்கள் கிறித்தவக் கல்லூரியில் பயின்று வேதியியலில் இளம் அறிவியலில் சென்னைப் பல்கலைக்கழகத்தில், பட்டம் பெற்றார்[2] பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் சேர்ந்து 1997இல் வேதியியலில் முதுகலைப் பட்டமும் 2002இல் கரிம வேதியியலில் முனைவர் பட்டமும் பெற்றார்.[3]இங்கிலாந்தின் கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறையில் 2001 முதல் 2004 வரை முனைவர் பட்ட பிந்தைய ஆய்வாளராகவும் 1851 ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றினார்.
தொழில்சார் அனுபவம்
தொகுகிருஷ்ணன் இந்தியாவில் பெங்களூரில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய உயிரியல் அறிவியல் மையத்தில் ஆராய்ச்சி சகாவாக “ஈ” தர நிலையில் 2005 முதல் 2009 வரையும் பின்னர் அடுத்த நிலையான “எப்”க்கு 2009ல் பணி உயர்வு பெற்றார். 2013ல் இணைப் பேராசிரியர் தகுதி நிலையான “ஜீ”க்கு பதவி உயர்வு பெற்றார். பின்னர் ஆகஸ்ட் 2014இல் வேதியியல் பேராசிரியராக சிக்காகோ பல்கலைக்கழகத்திற்குச் சென்றார்.
முன்னதாக, 2010இல் வெல்கம் அறக்கட்டளை-உயிர்த்தொழில்நுட்பவியல் துறை-அலையன்ஸ் மூத்த ஆராய்ச்சியாளர் நிதியுதவியினை 2010ல் பெற்றார். 2007இல் இந்திய தேசிய அறிவியல் கழகத்தின் இளம் விஞ்ஞானி பதக்கமும், 2006ல் உயிர்த்தொழில்நுட்ப துறையின் புதுமையான இளம் உயிர்தொழில்நுட்பவியலார் விருதினையும் பெற்றார். இன்போசிஸ் பரிசு 2017 இயற்பியல் அறிவியல் பிரிவில் கிருஷ்ணன் பெற்றார்.[3][4]
ஆராய்ச்சி
தொகுகிருஷ்ணனின் தற்போதைய ஆராய்ச்சி ஆர்வங்கள், கருவமிலங்கள், நானோ தொழில்நுட்பம், உயிரணு மற்றும் துணைத் உயிரணு அமைப்பு மற்றும் இயக்கவியல் தொடர்பானதாக உள்ளன.[3] இவரது ஆய்வகத்தில் டி.என்.ஏ. மரபுப் பொருள் என்பதைத் தவிரப் பிற பணிகளைக் கண்டறிவதில் ஈடுபட்டுள்ளனர். கட்சித் தொழில்நுட்பத்தை உருவாக்கி மீச்சிறு நுண் கட்டமைப்புகளைப் பயன்படுத்தி இரண்டாவது வேதித் தூதர்களை உயிருள்ள உயிரணுக்கள் மற்றும் மரபணு மாதிரிகளைச் செயலாக்கும் நேரத்தில் உயிரினங்களில் படம்பிடித்தலாகும்.[5]
விருதுகள்
தொகுகிருஷ்ணன், தனது ஆய்விற்காக, வேந்திய ஆணையத்தின் 1851 ஆராய்ச்சி நிதியுதவியும், வூல்ஃப்சன் கல்லூரியின் ஆய்வு நிதியுதவி (கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், இங்கிலாந்து), புதுமையான இளம் உயிர்த்தொழில்நுட்பவியலாளர் விருதினை இந்திய அரசின் உயிர்த்தொழில்நுட்பவியல் துறையிடமிருந்தும், இந்தியத் தேசிய அறிவியல் கழகத்தின் இளம் அறிவியலாளர் பதக்கமும் இந்திய அறிவியல் கழக சகாவாகவும், பாஸ்டன் இளம் விஞ்ஞானி விருதினை 2012ல் பெற்றார். மேலும் இந்திய அரசின் உயிர்த்தொழில்நுட்ப துறை- வெல்கம் அறக்கட்டளை இந்தியா அலையன்ஸ் மூத்தோர் ஆய்வு நிதி விருதினையும் பெற்றுள்ளார். இந்திய அறிவியல் அறிஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதினை, வேதியியல் அறிவியல் சேவைக்காப் பெற்றார். ஏவிஆர்ஏ இளம் விஞ்ஞானி விருதினை 2014ஆம் ஆண்டு பெற்றார். இதே ஆண்டில் 1000, வேதியியல் உயிரியல் கல்வியாளர் விருதினையும் பெற்றதோடு வேதியியல் அறிவியலில் வளர்ந்து வரும் ஆய்வாளர் விருதினை, வேதியியலுக்கான வேந்திய சங்கத்திடமிருந்து பெற்றதோடு, 2017ஆம் ஆண்டு இன்போசிஸ் பரிசினை இயற்பியல் அறிவியல் ஆய்வுகளுக்காகப் பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Dr. Samir K. Bramhachari Announces Shanti Swarup Bhatnagar Award 2013". Press Information Bureau, Government of India. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013.
- ↑ "Yamuna Krishnan - Professor | University of Chicago Department of Chemistry". chemistry.uchicago.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-16.
- ↑ 3.0 3.1 3.2 "Curriculum Vitae of Yamuna Krishnan" (PDF). NCBS. பார்க்கப்பட்ட நாள் 2 January 2014.
- ↑ "Infosys Prize - Laureates 2017 -Prof. Yamuna Krishnan". www.infosys-science-foundation.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-12-01.
- ↑ https://chemistry.uchicago.edu/faculty/yamuna-krishnan
வெளி இணைப்புகள்
தொகு- வேதியியலில் பெண்கள் - யமுனா கிருஷ்ணனுடன் நேர்காணல்
- நீங்கள் பெற்ற அனைத்தையும் கொடுங்கள் [1]
- http://www.natureasia.com/en/nindia/article/10.1038/nindia.2013.6
- http://www.nature.com/nnano/reshigh/2011/0611/full/nnano.2011.91.html
- https://chemistry.uchicago.edu/faculty/yamuna-krishnan-professor
- http://krishnanlab.uchicago.edu/