யஷ்வர்தன் குமார் சின்ஹா
யஷ்வர்தன் குமார் சின்ஹா (Yashvardhan Kumar Sinha) (அக்டோபர் 4, 1958 ) [7] இந்திய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த ஒரு இந்தியத் தூதர் ஆவார். இவர் ஐக்கிய இராச்சியத்திற்கான முன்னாள் [9] இந்திய உயர் ஆணையராக இருந்தார். ஜனவரி 1, 2019 அன்று மத்திய தகவல் ஆணையராக பதவியேற்றார். மேலும், 3 அக்டோபர் 2023 வரை பணியாற்றினார்.
யஷ்வர்தன் குமார் சின்ஹா | |
---|---|
இந்தியத் தலைமை தகவல் ஆணையர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 நவம்பர் 2020 | |
முன்னையவர் | பிமல் ஜுல்கா[1] |
ஐக்கிய இராச்சியத்திற்கான இந்திய உயர் ஆணையர் | |
பதவியில் 7 டிசம்பர் 2016 – அக்டோபர் 2018[2][3] | |
முன்னையவர் | நவநீத் சர்னா |
பின்னவர் | உருசி ஞானஷ்யம் |
இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் | |
பதவியில் ஜூன் 2013[4][5] – டிசம்பர் 2016[4][5] | |
முன்னையவர் | அசோக் காந்தா |
பின்னவர் | தரண்ஜித் சிங் சந்து[6] |
வெனிசுவேலாவிற்காக இந்தியத் தூதர்[4] | |
பதவியில் ஜனவரி 2007[4] – ஆகஸ்ட் 2009[4] | |
துபாய்க்கான இந்தியத் தூதர் | |
பதவியில் ஆகஸ்ட் 2003 – திசம்பர் 2006 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 அக்டோபர் 1958[7] |
தேசியம் | இந்தியர் |
துணைவர் | கிரிஜா[8] |
பிள்ளைகள் | 2 மகன்கள் |
முன்னாள் கல்லூரி | புனித மைக்கேல் உயர்நிலைப் பள்ளி, பாட்னா; புனித இசுடீவன் கல்லூரி, புது தில்லி & தில்லி பல்கலைக்கழகம்[4] |
வேலை | ராஜதந்திரி இந்திய வெளியுறவுப் பணி |
சொந்த வாழ்க்கை
தொகுயஷ்வர்தன் குமார் சின்ஹா பீகாரைச் சேர்ந்தவர். பாட்னாவின் காயஸ்தர் குடும்பத்தில் பிறந்த இவர், சேஷாமிலும், பாட்னாவிலுள்ள புனித மைக்கேல் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். தில்லியில் உள்ள புனித இசுடீபன் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலை பட்டமும், தில்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். கெய்ரோவில் உள்ள அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் அரபியில் மேம்பட்ட சான்றிதழ் பட்டமும் பெற்றுள்ளார். இவர் கிரிஜா என்பவரை மணந்தார், இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். பரம் விசிட்ட சேவா பதக்கம் பெற்றவரும் இந்திய இராணுவத்தின் முன்னாள் துணைத் தளபதியும், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் அசாமின் முன்னாள் ஆளுநராகவும் நேபாளத்திற்கான முன்னாள் இந்திய தூதராக இருந்த ஸ்ரீனிவாஸ் குமார் சின்ஹா என்பவரின் மகனாவார். [10]
தொழில்
தொகுஇந்திய வெளியுறவுப் பணி அதிகாரியாக பணியில் சேர்ந்து பணியாற்றினார். [7] பின்னர், 1 ஜனவரி 2019 அன்று மத்திய தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டார். பின்னர் 7 நவம்பர் 2020 அன்று இந்தியாவின் தலைமை தகவல் ஆணையராக பதவியேற்றார். மேலும், அக்டோபர் 3, 2023 வரை அங்கு பணியாற்றினார்
சான்றுகள்
தொகு- ↑ "Yashvardhan Kumar Sinha takes oath as Chief Information Commissioner". The Hindu. 7 November 2020. https://www.thehindu.com/news/national/yashvardhan-kumar-sinha-takes-oath-as-chief-information-commissioner/article33046064.ece#:~:text=Photo%20Credit%3A%20AP-,President%20Ram%20Nath%20Kovind%20has%20administers%20the%20oath%20of%20office,to%20a%20Rashtrapati%20Bhavan%20statement..
- ↑ "Some distrust in Indo-UK relations, says envoy YK Sinha". 22 October 2018. Archived from the original on 23 December 2018.
- ↑ "Welcome to High Commission of India, London, UK". www.hcilondon.gov.in. Archived from the original on 23 December 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 "Welcome to High Commission of India, London, UK". 3 September 2018. Archived from the original on 3 September 2018.
- ↑ 5.0 5.1 "Welcome to High Commission of India, Colombo, Sri Lanka". 3 September 2018. Archived from the original on 3 September 2018.
- ↑ "Seasoned Sri Lanka hand Taranjit Sandhu to be India's next envoy- The New Indian Express". 3 September 2018. Archived from the original on 3 September 2018.
- ↑ 7.0 7.1 7.2 "Civil List of the Indian Foreign Service" (PDF). 1 April 2013. Archived from the original (PDF) on 22 April 2018. பார்க்கப்பட்ட நாள் 2023-03-25.
- ↑ "Indian high commissioner to UK presents credentials to Queen - PTI feed News". 3 September 2018. Archived from the original on 3 September 2018.
- ↑ "Welcome to High Commission of India, London, UK". www.hcilondon.gov.in. Archived from the original on 23 December 2018. பார்க்கப்பட்ட நாள் 12 January 2022.
- ↑ "J&K ex-Guv Lt Gen Sinha passes away".