உருசி ஞானஷ்யம்

இந்தியத் தூதர்

உருசி ஞானஷ்யம் (Ruchi Ghanashyam)(பிறப்பு 4 ஏப்ரல் 1960 [11]) என்பவர் இந்திய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த ஒரு இந்தியத் தூதர் ஆவார்.

உருசி ஞானஷ்யம்
ஐக்கிய இராச்சியத்திற்கான இந்திய நாட்டுப் பேராளர் உயர் ஆணையர்
பதவியில்
நவம்பர் 2018 – சூன் 2020
முன்னையவர்யஷ்வர்தன் குமார் சின்ஹா[1][2]
செயலர் (மேற்கு), இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்
பதவியில்
17 ஏப்ரல் 2017[3] – நவம்பர் 2018[4]
முன்னையவர்சுஜாதா மேத்தா[5]
பின்னவர்அ. கிதேஷ் சர்மா[6][7]
இந்திய உயர் ஆணையர்- தென்னாப்பிரிக்கா[8]
பதவியில்
28 அக்டோபர் 2013[8] – 13 ஏப்ரல் 2017[8]
முன்னையவர்வீரேந்திர குப்தா
பின்னவர்ருசிர காம்போஜ்
இந்திய உயர் ஆணையர் -கானா புர்க்கினா பாசோ, டோகோ & சியேரா லியோனி[10]
பதவியில்
2008[9]–2011[9]
முன்னையவர்இராஜேஷ் நந்தன் பிரசாத்
பின்னவர்இராஜேந்திர பகாத்
உறுப்பினர், ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர தூதுக்குழு, நியூ யார்க்கு[3]
பதவியில்
மே 2004[3] – மார்ச் 2008[3]
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு4 ஏப்ரல் 1960 (1960-04-04) (அகவை 64)
தேசியம்இந்தியர்
துணைவர்(கள்)அஜாம்புர், இரங்கையா ஞானஷ்யம்
முன்னாள் கல்லூரிபோபால் பல்கலைக்கழகம்
வேலைஇந்திய வெளியுறவுப் பணி

வாழ்க்கை

தொகு

உருசி ஞானஷ்யம் போபால் பல்கலைக்கழகத்தில் உளவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். இவர் இந்திய வெளியுறவுத் துறையைச் சேர்ந்த அஜ்ஜம்பூர் ரங்கய்யா ஞானஷ்யாமை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

ஞானஷ்யம் ஆகத்து 1982-ல் இந்திய வெளியுறவுப் பணியில் சேர்ந்தார். இவர் திமிஷ்குவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மூன்றாவது செயலாளராக இருந்தார். இங்கு இவர் அரபு மொழியைக் கற்றுக்கொண்டார்.[4] இவர் பிரசெல்சு, காத்மாண்டு, தினிஷ்கு, இஸ்லாமாபாத் பிரிட்டோரியா[12] மற்றும் அக்ரா ஆகிய இடங்களில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணியாற்றியுள்ளார். உருசி ஆகத்து 2000 முதல் மார்ச் 2004 வரை புது தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் இயக்குநராக (பாக்கித்தான்) பணியாற்றியுள்ளார்.[13] இதற்கு முன், பாக்கித்தானில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தில் ஆலோசகராக (அரசியல், பத்திரிகை மற்றும் தகவல்) இருந்தார். புது தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் துணைச் செயலாளராக, இவர் அமைச்சகத்திற்கான ஒலி ஒளி விளம்பரங்களைக் கையாண்டார்.

இந்தியத் தூதர்கள் துன்புறுத்தப்படுவது வாடிக்கையாக இருந்தபோது இசுலாமாபாத்தில் நியமிக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் தூதர் ஞானஷ்யம் ஆவார்.[14]

மேலும் பார்க்கவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Some distrust in Indo-UK relations, says envoy YK Sinha". 22 October 2018. Archived from the original on 2018-12-23.
  2. "Welcome to High Commission of India, London, UK". www.hcilondon.gov.in. Archived from the original on 23 December 2018. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
  3. 3.0 3.1 3.2 3.3 "MEA - About MEA : Profiles :Secretary (West)". 6 May 2018. Archived from the original on 2018-05-06.
  4. 4.0 4.1 "Welcome to High Commission of India, London, UK". www.hcilondon.gov.in. Archived from the original on 23 December 2018. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
  5. "Ruchi Ghanashyam appointed Secretary (West) in MEA". 28 February 2017.
  6. "Appointment of Shri A. Gitesh Sarma, as Secretary (West) MEA". Archived from the original on 2018-10-06.
  7. "A Gitesh Sarma appointed as Secretary (West) in MEA". www.uniindia.com. Archived from the original on 6 October 2018. பார்க்கப்பட்ட நாள் 13 January 2022.
  8. 8.0 8.1 8.2 Former High Commissioners High Commission of India
  9. 9.0 9.1 "High Commission of India, Accra, Ghana : Former High Commissioners". 6 May 2018. Archived from the original on 2018-05-06.
  10. "High Commission of India, Accra, Ghana : Welcome to the High Commission of India, Accra". 6 May 2018. Archived from the original on 2018-05-06.
  11. "Sorry for the inconvenience" (PDF). 22 April 2018. Archived from the original (PDF) on 2018-04-22.
  12. "India, South Africa united for centuries by umblical cord: Ruchi Ghanashyam - The Financial Express". 6 May 2018. Archived from the original on 2018-05-06.
  13. "Long Demarche Home". 2018-06-08. Archived from the original on 2018-06-08. பார்க்கப்பட்ட நாள் 2021-02-25.
  14. "Ms Uninterrupted". 2018-06-08. Archived from the original on 2018-06-08. பார்க்கப்பட்ட நாள் 2021-02-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உருசி_ஞானஷ்யம்&oldid=3674523" இலிருந்து மீள்விக்கப்பட்டது