யானா ஆறு (Yana), உருசியா நாட்டின் கிழக்கு சைபீரியாவில் அமைந்த சகா மாகாணத்தின் சர்தாங் ஆறு மற்றும் துல்கலாக் ஆறுகளின் கூடுமிடமான யானா-ஒய்மயாகோன் மேட்டு நிலப்பகுதியில்[1] உற்பத்தியாகி, வடக்கில் உள்ள லாப்டேவ் கடலில் கலக்கிறது. இதன் மேற்கில் லேனா ஆறும், கிழக்கில் இண்டிகிர்கா ஆறும் பாய்கிறது. இந்த ஆறு ஒய்மயாகோன் கிராமம் வழியாகப் பாய்கிறது.

யானா ஆறு
Яна / Дьааҥы
யானா ஆறு
யானா ஆற்றின் வடிநிலம்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Russia Sakha Republic" does not exist.
அமைவு
நாடுஉருசியா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுசர்தாங் ஆறு மற்றும் துல்கலாக் ஆறுகளின் கூடுமிடம்
 ⁃ ஆள்கூறுகள்67°27′48″N 133°15′06″E / 67.4634°N 133.2517°E / 67.4634; 133.2517
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
லாப்டேவ் கடல்
 ⁃ ஆள்கூறுகள்
71°32′14″N 136°39′11″E / 71.53722°N 136.65306°E / 71.53722; 136.65306
 ⁃ உயர ஏற்றம்
0 m (0 அடி)
நீளம்872 km (542 mi)
வடிநில அளவு238,000 km2 (92,000 sq mi)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி1,110 m3/s (39,000 cu ft/s)
உருசியாவின் வடக்கில் லாப்டேவ் கடலில் கலக்கும் யானா ஆற்றின் வரைபடம்

872 கிலோமீட்டர்கள் (542 mi) நீளம் கொண்ட யானா ஆற்றின் வடிநிலம் 238,000 சதுர கிலோமீட்டர்கள் (92,000 sq mi) பரப்பளவு கொண்டது. யானா ஆறு ஆண்டிற்கு சராசரியாக 1,110 m3/s (39,000 cu ft/s) அளவு நீரை வெளியேற்றுகிறது. யானா ஆற்றில் குறிப்பாக மே மற்றும் சூன் மாதங்களில் மட்டும் (ஆற்றின் பனிக்கட்டிகள் உடைவதால்) நீர் பாய்கிறது. அக்டோபர் மாதம் முதல் மே மாதம் துவக்கம் வரை யானா ஆற்று நீரின் மேற்புரம் உறைநிலைக்கு சென்று, பனிக்கட்டியாக மாறிவிடுகிறது.

யானா ஆற்றின் வடிநிலத்தில் ஏறத்தாழ 40,000 ஏரிகள் உள்ளது. யானா ஆற்றின் வடிநிலப்பகுதிகள் நிலத்தடி உறைபனிகள் கொண்டதாகவும்; தூந்திரப் பகுதியாகவும், கூம்பு வடிவ குட்டை மரங்கள் கொண்டதாகவும் உள்ளது.

யானா ஆற்று வடிநிலப் பகுதிகளில் துருவப் பனிக்கட்டி கொண்டுள்ளது. குளிர்காலத்தில் இப்பகுதியின் வெப்பம் −51 °C (−60 °F) முதல் −71 °C (−96 °F) வரை தாழ்ந்து விடுகிறது.

துணை ஆறுகள்

தொகு

யானா ஆற்றின் துணை ஆறுகளாக வலது புறத்தில் அடைச்சா ஆரு, ஒல்டுசோ ஆறு, சர்தாங் ஆறு, மற்றும் அபிராபைட் ஆறுகளும், இடது புறத்தில் துல்கலலாக் ஆறு, பைதான்தாய் ஆறு, டைகாச் ஆறு மற்றும் பக்கி ஆறுகள் உள்ளது.[2]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு

பொது மேற்கோள்கள்

தொகு
  • William Barr, Baron Eduard Von Toll's Last Expedition. Arctic, Sept 1980.
  • Alexander von Bunge & Baron Eduard Von Toll, The Expedition to the New Siberian Islands and the Jana country, equipped by the Imperial Academy of Sciences. 1887.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யானா_ஆறு&oldid=4183677" இலிருந்து மீள்விக்கப்பட்டது