யானை போலோ விளையாட்டு
யானைப் போலோ(Elephant polo) என்பது யானை மீது சவாரி செய்து விளையாடும் ஒரு வகை ஆட்டமாகும். இது நேபாளம், (இந்தியா)வில் ராஜஸ்தான் , மற்றும் தாய்லாந்து இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக விளையாடி வருகிறார்கள். இதில் ஒரு போலோ பந்து மற்றும் ஆறு முதல் பத்து வரையிலான மூங்கில் போன்ற கரும்புகளைக் கொண்ட குச்சிகளை வைத்து விளையாடுவார்கள். போலோ ஆடுகளத்தில் யானைகளின் குறைந்த வேகம் காரணமாக, ஒரு நிலையான போலோ ஆடுகளத்தின் நீளத்தில் மூன்றில் ஒரு பங்கிலேயே விளையாடுவார்கள். ஒவ்வொரு யானை மீதும் இரண்டு பேர் வீதம் செல்வார்கள், யானைகள் பாகன்கள் மூலம் இயக்கப்படுகின்றன, அதே நேரத்தில் பந்து செல்லும் திசையிலே சென்று பந்தை அடிக்க பாகன்களுக்கு போலோ வீரர் கட்டளையிடுவார். யானைப் போலோ நேபாளத்தில் உள்ள மேகாவ்ளி என்ற இடத்தில் தோன்றியது. நேபாளத்தின் டைகர் டாப்ஸ் என்னும் இடம் யானை போலோவின் தலைமையகமாக இன்றும் திகழ்கிறது. மேலும் யானைப் போலோ உலகக்கோப்பைக்கான தளமாகவும் விளங்குகின்றது.[1]
நேபாளத்திலும், தாய்லாந்திலும் யானைப் போலோ உலக யானை போலோ சங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் விளையாடப்படுகிறது. உலக யானை போலோ சங்கம், இவ்விளையாட்டில் யானைகளின் நலன் மற்றும் விளையாட்டிற்கான விதிகளை கடுமையாக வலியுறுத்துகிறது. இந்தியா மற்றும் ஸ்ரீலங்காவில் விளையாடும் போட்டிகள், இரு நாடுகளில் தனித்தனியேவாகவும் உலக யானை போலோ சங்கம் ஆகியவற்றின் மூலமாகவும் சுதந்திரமாக நிர்வகிக்கப்படுகின்றன.இலங்கையின் யானை போலோ சங்கம், உலக யானை போலோ சங்கத்தின் வழிநடத்துதலின் பேரில் காலே என்ற இடத்தில் வருடாந்தர போட்டியை நடத்துகிறது. 2007 ஆம் ஆண்டில் நடந்த ஒரு யானை போலோ விளையாட்டில் யானைகள் மோதிக் கொண்டதில், இதில் இரு அமெரிக்க வீரர்கள் காயமுற்றனர். மேலும் ஸ்பெயின் நாட்டின் "மினிபஸ்" என்ற போலோ அணி யானைகளால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டது .அந்த அணி மோசமான விளைவைச் சந்தித்தது.[2]
இவ்விளையாட்டில் யானைகள் கொடூரமாக நடத்தப் படுவதும்,பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவது தொடர்பாக புகார்கள் பெறப்பட்டதையடுத்து உலக சாதனைகளை பதிவு செய்யும் கின்னஸ் புத்தகம் என்ற நிறுவனம் யானை போலோ பதிவுகள் தொடர்பான குறிப்புகளை நீக்கவும், விளையாட்டிற்கான உதவிகளை திரும்பப் பெறவும் நடவடிக்கை மேற்கொண்டது.[3][4][5][6] தாய்லாந்து நாட்டில் உள்ள மைனர் விடுதிகளுக்கு சொந்தமான பாங்காக் அனந்தாரா விடுதி என்ற இடத்தில் ஆண்டுதோறும் இவ்விளையாட்டு நடைபெற்று வந்தது. இதன் பின்னர் தாய்லாந்து நாட்டின் யானை போலோ சங்கம் அக்டோபர் 2018 முதல் தாய்லாந்தில் யானை போலோ போட்டிகள் இனி நடைபெறாது என்று அறிவித்தது..[7]
மேலும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Bushell at elephant polo World Cup". BBC News. 5 December 2008. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7768225.stm. பார்த்த நாள்: 27 April 2009. "A team from England have become the new world champions of elephant polo. Air Tuskers beat Scotland's Chivas, on Friday in Southern Nepal."
- ↑ "Why you should never make an elephant angry". Adelaide Now via Daily Mail. February 16, 2007 இம் மூலத்தில் இருந்து 2012-06-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120616080755/http://www.adelaidenow.com.au/news/why-you-should-never-make-an-elephant-angry/story-e6freo8c-1111113010144. பார்த்த நாள்: 2011-03-21. "The four-tonne, 2.8m pachyderm threw off his mahout and U.S. rider as the island's sixth annual elephant polo tournament got under way, rampaging off the pitch and attacking the Spanish team's minibus."
- ↑ Shukla, Richa (3 February 2011). "For the record: No elephant polo". Times Of India. Archived from the original on 11 ஆகஸ்ட் 2011. பார்க்கப்பட்ட நாள் 17 October 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "'Cruel' elephant polo match cancelled in Jaipur". The Daily Telegraph. 21 August 2011. https://www.telegraph.co.uk/news/worldnews/asia/india/8714257/Cruel-elephant-polo-match-cancelled-in-Jaipur.html. பார்த்த நாள்: 17 October 2013.
- ↑ "Elephant Polo Tournament Canceled in India Over Cruelty Concerns". The Jakarta Globe இம் மூலத்தில் இருந்து 27 September 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110927021732/http://www.thejakartaglobe.com/sports/elephant-polo-tournament-canceled-in-india-over-cruelty-concerns/460605. பார்த்த நாள்: 17 October 2013.
- ↑ Baker, Jason (4 October 2018). "On World Animal Day, it's time to end elephant polo" (Opinion). The Nation இம் மூலத்தில் இருந்து 3 அக்டோபர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181003223757/http://www.nationmultimedia.com/detail/opinion/30355759. பார்த்த நாள்: 4 October 2018.
- ↑ William Heinecke (8 October 2018). "Like PETA, Minor Hotels is serious about elephant welfare in Thailand" (Opinion). The Nation இம் மூலத்தில் இருந்து 7 அக்டோபர் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181007213340/http://www.nationmultimedia.com/detail/opinion/30356000. பார்த்த நாள்: 8 October 2018.
வெளிப்புற இணைப்புகள்
தொகு- Press Release from World Elephant Polo Association பரணிடப்பட்டது 2011-01-12 at the வந்தவழி இயந்திரம்
- World Elephant Polo Association
- The Pukka Chukkas - Playing Elephant Polo to raise money for Tiger Conservation and Multiple Sclerosis charities பரணிடப்பட்டது 2017-12-27 at the வந்தவழி இயந்திரம்
- Financial Times January 13, 2012 Elephant polo by James Crabtree