யாளி வாகனம்
இந்து கடவுள் வாகனம்
யாளி வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ இந்துக் கடவுள்கள் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். இந்து சமய புராணங்களிபடி யாளி துர்க்கைக்கு உரிய வாகனம் ஆகும். எனினும் சிவபெருமான், திருமால் ஆகியோருக்கு வாகனமாக கோயில்களில் பயன்படுத்தப்படுகின்றன. வாகன தத்துவம்தொகுஆளி என்றும் யாளி என்றும் அழைக்கப்படும் உயிரினம் யானையைக் கொல்லும் அளவிற்கு வலிமையானதாக சித்தரிக்கப்படுகிறது. சிம்ம யாளி, மகர யாளி, யானை யாளி என்று மூன்று வகைகள் இருந்தாலும் யானை யாளியே வாகனமாக பயன்படுத்தப்படுகின்றன. சிவபெருமானை ஆளியின் மீது அமர்த்தி விழா காண்பவர் அரச போகத்தை அடைந்து சுகமாக இருப்பதுடன் அனைவரையும் அடக்கி ஆளும் வல்லமையைப் பெறுவர் என்று நம்புகின்றனர். [1] கோயில்களில் உலா நாட்கள்தொகு
மேற்கோள்கள்தொகு
இவற்றையும் காண்கதொகு |