யாழ்ப்பாண இராச்சியப் போர்கள்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இக்கட்டுரையின் நோக்கத்துக்காக யாழ்ப்பாண இராச்சியப் போர்கள், என்பது குடியேற்றவாதக் காலத்துக்கு முன்னர் யாழ்ப்பாண மன்னர் காலத்திலும், குடியேற்றவாதக் காலத்தில் பிரித்தானியர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் வரையில் இடம்பெற்ற போர்கள் பற்றியது ஆகும். யாழ்ப்பாண மன்னர் காலத்தில், தென்பகுதி இராச்சியமான கோட்டேயில் இருந்தும், பின்னர் இந்தியாவின் சில பகுதிகளில் காலூன்றியிருந்த போர்த்துக்கேயர் தரப்பில் இருந்தும் படையெடுப்புக்கள் நிகழ்ந்துள்ளன. போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர், அவர்களை வெளியேற்றும் நோக்குடன் தஞ்சாவூரில் இருந்தும், கண்டி இராச்சியத்தில் இருந்து படையெடுப்புக்கள் நிகழ்ந்தன. இறுதியில் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தின்மீது படையெடுத்து போர்த்துக்கேயரை வெளியேற்றினர். இதன் பின்னர் 140 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரித்தானியர் யாழ்ப்பாணத்தைத் தாக்கி அதனைக் கைப்பற்றினர்.
போர்களின் பட்டியல்
தொகு- கோட்டை இராச்சியத்தின் யாழ்ப்பாணப் படையெடுப்பு - 1449-50, 1453-54[1]
- கனகசூரிய சிங்கையாரியனின் யாழ்ப்பாண மீட்புப் போர் - 1467
- போர்த்துக்கேயரின் யாழ்ப்பாணப் படையெடுப்பு முயற்சி (1544)
- போர்த்துக்கேயரின் முதலாவது யாழ்ப்பாணப் படையெடுப்பு - 1560
- போர்த்துக்கேயரின் இரண்டாவது யாழ்ப்பாணப் படையெடுப்பு - 1590[2]
- போர்த்துக்கேயரின் மூன்றாவது யாழ்ப்பாணப் படையெடுப்பு - 1619[3]
- போர்த்துக்கேயரை வெளியேற்றுவதற்கான தஞ்சாவூர்ப் படையெடுப்புக்கள் - 1619
- போர்த்துக்கேய யாழ்ப்பாணத்தின் மீதான கண்டியரசின் படையெடுப்பு -
- யாழ்ப்பாணத்தின் மீதான ஒல்லாந்தர் படையெடுப்பு - 1658
- யாழ்ப்பாணத்தைப் பிரித்தானியர் கைப்பற்றல் - 1796
இவற்றையும் பார்க்கவும்
தொகுஉசாத்துணை
தொகு- ↑ Humphrey William Codrington, A Short History of Ceylon Ayer Publishing, 1970; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8369-5596-X
- ↑ "Portuguese: Religious conversion and ending Tamils' Sovereignty". Asian Tribune. பார்க்கப்பட்ட நாள் 13 April 2014.
- ↑ K. M. De Silva (1 January 1981). A History of Sri Lanka. University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-04320-6.