யி சிங்
யி சிங் (Yi Xing, சீனம்: 一行; பின்யின்: Yī Xíng; 683–727) ஒரு சீன வானியலாளரும், கணிதவியலாளரும், எந்திரப் பொறியாளரும், பௌத்த மதகுருவும் ஆவார். இவர் தாங் பேரரசு காலத்தவர் (618-907). அவரது விண்கோளம் ஒரு விடுவிப்பு இயங்கமைப்பு உள்ள கடிகாரத்தைக் கொண்டிருந்தது. இதுவே முதல் சீன மரபு வானியல் கடிகாரமாகும்.
அறிவியல் தொழில்நுட்பம்
தொகுநில-வான் அளவையியல்
தொகுகிபி எட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தாங் பேரரசு அரசவை யி சிங்குக்கு நில-வான் அளவைத் துறையின் பொறுப்பைத் தந்தது.[1] இந்த அளக்கைக்குப் பல நோக்கங்கள் இருந்தன. ஒரு நோக்கம் சூரிய ஒளி மறைப்புகளை முன்கணிக்கத் தேவையான புதிய வானியல் தரவுகளைப் பெறுதலாகும்.[1] மேலும் பழைய சீனக் காலந்தரலமைப்பில் உள்ள குறைகளை நீக்கி அண்மைப்படுத்தி அதனிடத்தில் புதிய காலந்தரலமைப்பை நிறுவுதல் ஆகும்.[1] இந்த அளக்கை வான்கோள நெடுவரை வில்லின் நீளத்தை அளந்து தீர்மானிக்கவும் தேவைப்பட்டது.[1] மேலும் புவி நெட்டாங்கில் உள்ள இரண்டு இடங்களின் தொலைவை அவ்விடங்களில் ஒரே நேரத்தில் விழும் சூரிய நிழல்களின் நீளவேறுபாட்டால் காணும் முந்தைய நடைமுறையில் நிலவிய குழப்பத்தைத் தீர்க்கவும் இந்த அளக்கை உதவியது.[1] இது பண்டைய கிரேக்கரான எராட்டோதெனீசு பயன்படுத்திய அதே வழிமுறையே ஆகும். (கிமு 276-196).[1]
யி சிங் வியட்நாமில் உள்ள யாவோழௌ, அகலாங்கு (17°வ) இலிருந்து அதற்குச் சற்றே தெற்கில் இருந்த பைக்கால் ஏரி, அகலாங்கு (50°வ) வரை பேரரசின் 13 இடங்களைத் தேர்ந்தெடுத்தார்.[2] ஒவ்வோரிடத்திலும் மூன்று நோக்கீடுகள் எடுக்கப்பட்டன. இதில் ஒன்று போலாரிசு உயரத்துக்காகவும் மற்றொன்று கோடை நிழல்களின் நீளங்களுக்காகவும் அடுத்தது குளிர்கால நிழல்களின் நீளங்களுக்காகவும் எடுக்கப்பட்டது.[2] இந்தத் தரவுகளில் இருந்து அகலாங்குகள் கண்டறியப்பட்டன. அவரது நெடுவரை (நெட்டாங்கு) வில்லின் ஒரு பாகைக்கான தொலைவு இக்கால அளவு மதிப்புக்கு மிக நெருக்கமாக இருந்தது.[2] யி சிங் ஒரு பாகை நெட்டாங்கின் நீளங்கள் வேறுபடும் என்பதை நன்கு உணர்ந்திருந்தார். சூரிய நிழல் அளவுகளும் ஒராண்டு முழுவதும் வேறுபடும் என்றார். எனவே அம்மதிப்புகளை மாறாத ஒரே அளவாகக் கருதிய முந்தைய சீன அறிஞர்களைக் கண்டித்தார்.[2]
புத்தவியற் புலமை
தொகுமகாவைரோசன தந்திரா என்ற நூலுக்கு யி சிங் உரையொன்றை எழுதியுள்ளார். இந்நூல் சப்பானிய பிக்குவான கூகை என்பவர் மீது பெரும் தாக்கம் செலுத்தி ஷிங்கான் பௌத்தம் எனும் பிரிவை நிறுவிட வழிவகுத்தது.[3]
அவர் நினைவாக
தொகுசேசியாங் மாநிலத்தில் உள்ள தியாந்தை மலை புத்த குவோகிங் கோயிலுக்கு வெளியே சீன விகாரை ஒன்று, யி சிங் பிக்கு விகாரை என இவரது நினைவாக நிறுவப்பட்டுள்ளது. மேலும் தியாந்தை மலையில் இவரது கல்லறை ஒன்றும் உள்ளது.
குறிப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- Hsu, Mei-ling. "The Qin Maps: A Clue to Later Chinese Cartographic Development," Imago Mundi (Volume 45, 1993): 90-100.
- Ju, Zan, "Yixing" பரணிடப்பட்டது 2007-09-29 at the வந்தவழி இயந்திரம். Encyclopedia of China (Religion Edition), 1st ed.
- Needham, Joseph (1986). Science and Civilization in China: Volume 3. Taipei: Caves Books, Ltd.
- Needham, Joseph (1986). Science and Civilization in China: Volume 4, Part 2. Taipei: Caves Books, Ltd.
- Boscaro, Adriana (2003) Rethinking Japan: Social Sciences, Ideology and Thought. Routledge. 0-904404-79-x p. 330
வெளி இணைப்புகள்
தொகு- Yi Xing at Chinaculture.org பரணிடப்பட்டது 2007-04-15 at the வந்தவழி இயந்திரம்
- Yi Xing's Tomb Tiantai Mountain பரணிடப்பட்டது 2007-09-28 at the வந்தவழி இயந்திரம்
- Yi Xing at the University of Maine பரணிடப்பட்டது 2009-04-19 at the வந்தவழி இயந்திரம்