வானியல் கடிகாரம்

வானியல் கடிகாரம் (Astronomical clock) என்பது சூரியன், சந்திரன், விண்மீன் குழாம்கள், மற்றும் சில சமயங்களில் முக்கிய கோள்கள் போன்ற வானியல் பொருள்களின் தொடர்பு நிலைகளை தகவலாக தன்னுடைய முகப்பில் காண்பிக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒரு கடிகாரமாகும்.

முகப்பு - பிராகா நகர் வானியல் கடிகாரம்

எல்லா கடிகாரங்களிலும் கடிகாரம் என்ற சொல் ஒரு நாளின் நேரத்தைக் காண்பிப்பதற்கு உபயோகமாதல் போலவேதான் வானியல் கடிகாரத்திலும் உபயோகமாகிறது. ஆனால், சற்றுக் கூடுதலாக நேரம மட்டுமின்றி சில வானியல் தகவல்களையும் காண்பிக்கிறது. வானில் சூரியன் மற்றும் சந்திரனின் இருப்பிடத்தைக் இக்கடிகாரம் காட்டுகிறது. மேலும் நிலவின் வயது, பிறைகளின் வளர்ச்சிக் கட்டங்கள், இராசி நட்சத்திரத்தில் சூரியனின் தற்போதைய நிலை, விண்ணக நேரம் மற்றும் பிற வானியல் தரவுகளான கிரகணத் தோற்றங்கள் அல்லது ஒரு சுழலும் நட்சத்திர வரைபடம் ஆகிய அம்சங்களை இக்கடிகாரம் உள்ளடிக்கியுள்ளது. வானாய்வகத்தில் சாதாரணமாக துல்லியக் கணக்கீட்டிற்குப் பயன்படுத்தப்படும் இந்த ஊசல் கடிகாரத்தை கால வானியல் சீராக்கியுடன் இணைத்து குழப்பிக் கொள்ளக்கூடாது.

வானியல் கடிகாரங்கள் பொதுவாக புவிமைய மாதிரியை பயன்படுத்தி சூரியக்குடும்பத்தை முன்னிலைப்படுத்தின. அதாவது இக்கடிகாரத்தின் சுழல் மையத்தில் உள்ள வட்டு அல்லது கோளம் சூரியக் குடும்பத்தின் மையம் பூமியென குறிப்பிடும். ஆண்டிகைதெரா இயங்கு முறையில் உள்ளது போல, சூரியன் பூமியைச் சுற்றி இயங்கும் ஒரு தங்கக் கோளமாகவே இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை நம்பப்பட்டது. கோப்பர்நிக்கஸ் காலத்துக்கு முந்தைய ஐரோப்பாவின் தத்துவப்பார்வை வானியல் கடிகாரத்தின் சுழல் மையதில் உள்ள 24 மணி நேரத்திற்கு ஒருமுறை சூரியன் பூமியைச் சுற்றிவரும் என்ற நம்பிக்கையை ஒத்திருந்தது.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வானியல்_கடிகாரம்&oldid=3571350" இலிருந்து மீள்விக்கப்பட்டது