யூதர்களின் வரலாறு
யூதர்களின் வரலாறு எனப்படுவது யூதம் எனும் மதத்தையும், அதனைப் பின்தொடரும் மனிதர்களின் கலாச்சாரத்தையும் பற்றியது ஆகும். யூதம் என்னும் மதம் முதன்முதலாக ஹெலனிய காலத்து கிரேக்கப் பதிவுகளில் காணப்படுகிறது. இதற்கு முன்பு இஸ்ரேலைப் பற்றிய குறிப்புகள் கிமு 1213–1203 ஐச் சேர்ந்த மெனப்தா கல்வெட்டுகளில் காணப்படுகிறது. மத இலக்கியங்களில் கிமு 1500 இலிருந்து இஸ்ரேலியர்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. யூதர்கள் புலம்பெயர் தொடங்கியது அசீரிய நாடு கடத்தலில் இருந்து ஆரம்பிக்கிறது. பாபிலோனியர்களின் நாடு கடத்தலின்போது யூதர்கள் அதிக அளவில் புலம்பெயரத் தொடங்கினர். மத்திய மற்றும் கீழை நடுநிலைக் கடல் பகுதிகளை பைசாட்டின் அரசு ஆண்டு வந்தபோது யூதர்கள் உரோமாபுரி முழுவதும் பரவி இருந்தனர். பைசாட்டின் அரசு தனது ஆதிக்கத்தை கிபி 638 வாக்கில் இழக்கத் தொடங்கியது. அப்போது எகிப்து, பாலஸ்தீனம், சிரியா, மெசப்படோமியா ஆகிய பகுதிகளை இஸ்லாமிய கிலாஃபத்தின் மூன்றாம் கலீஃபா உமறு இப்னு அல்-கத்தாப் ஆட்சி செய்ய தொடங்கினார். யூதர்களின் பொற்காலத்தின் போது ஐபீரிய மூவலந்தீவு நிலப் பகுதி முழுவதும் இஸ்லாமியர்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது யூத மதத்தை மற்ற சமூகப் பிரிவுகள் ஏற்றனர். யூதர்களின் மொழி, கலாச்சாரம், வாழ்க்கை முறை மேம்பட தொடங்கியது. பதினேழாம் நூற்றாண்டில் மேற்கு ஐரோப்பாவில் யூதர்களின் மக்கள்தொகை குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக இருந்தது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலத்தில் யூதர்களின் மத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்தன. பதினெட்டாம் நூற்றாண்டில் யூதர்கள் ஐரோப்பியாவின் சட்ட திட்டங்களில் இருந்து யூதர்களுக்கு விலக்கு வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். 1870 முதல் 1880 காலகட்டத்தில் ஐரோப்பாவில் இருந்த யூதர்கள் மீண்டும் இஸ்ரேல் பகுதிகளுக்கு புலம் பெயர்வது பற்றி யோசிக்கத் தொடங்கினர். அங்கு புலம்பெயர்ந்து யூதர்களுக்கான புதிய தேசத்தை உருவாக்க வேண்டும் என்ற அனைத்து ஐரோப்பிய யூதர்களும் பேசத் தொடங்கினர். யூதர்கள் அதிகாரப்பூர்வமாக 1897 இல் புலம்பெயர் தொடங்கி இருந்தனர். அந்த நேரத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வாழும் யூதர்கள் கலை, அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கினர். நோபல் பரிசு வெற்றியாளர்களில் பலர் யூதர்களாக இருந்தனர். உதாரணத்திற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.[1]
இனவழிப்பு
தொகு1933 இல் ஹிட்லர் தலைதூக்கத் தொடங்கினார். நாஜிக் கொள்கையை வலுப்பெறச் செய்தார். அதனால் அப்பகுதிகளில் இருந்த யூதர்களின் நிலை கவலைக்கிடமாக மாறியது. பொருளாதார மந்த நிலை, போர் ஆகியவற்றால் அச்சமுற்ற யூதர்கள் ஐரோப்பிய கண்டத்தில் இருந்து பாலஸ்தீன், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியன் ஆகிய நாடுகளை நோக்கி புலம் பெயரத் தொடங்கினர். இரண்டாம் உலகப்போர் 1939 இல் ஆரம்பித்து 1945 முடிந்தது. அந்தக் காலத்தில் அடால்ப் ஹிட்லர் ஏறத்தாழ ஐரோப்பியாவின் அனைத்து நாடுகளையும் கைப்பற்றியிருந்தார். அதில் முக்கியமாக யூதர்கள் அதிக அளவில் வசித்த பகுதிகளான போலந்து மற்றும் பிரான்சும் ஹிட்லரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 1941 இல் ஹிட்லர் அனைத்து யூத மக்களையும் அழிக்க வேண்டும் என்று எண்ணத்தொடங்கினார். அடோல்ப் ஹிட்லர் 1941இல் இனவழிப்பை ஆரம்பித்தார். ஆறு மில்லியன் யூத மக்களைக் கொன்றார். இது பெரும் இனவழிப்பு என்று வரலாற்று அறிஞர்களால் கூறப்படுகிறது. ஹிட்லர் மூன்று மில்லியன் மக்களை வதைமுகாம்களில் நச்சு வாயு செலுத்திக் கொன்றார். அதில் ஆஸ்விஷ்டிஷ் வதை முகாமில் மட்டும் ஒரு மில்லியன் யூத மக்களை கொன்றிருந்தார்.
யூதர்களுக்கான தனிநாடு
தொகு1949 உலக போர் முடிவுற்ற பிறகு உலகம் முழுவதும் இருந்த யூதர்களை அழைத்து, இஸ்ரேல் என்னும் ஒரு புதிய யூதர்களுக்கான நாட்டை உருவாக்கினர். தற்போது இஸ்ரேல் ஒரு குடியரசு நாடாகும் அதில் எட்டு மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். அதில் 6 மில்லியன் மக்கள் யூதர்கள் ஆவர். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவில் மிகப் பெருமளவில் யூதர்கள் வசித்து வருகின்றனர். இங்கு மட்டுமல்லாது யூத மக்கள் பெரும்பான்மை இனமாக பிரான்ஸ், அர்ஜென்டினா, ரஷ்யா, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களில் வசித்து வருகின்றனர்.
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Jewish Nobel Prize Winners". jinfo.org.