யூரோபெல்டோய்டியா

யூரோபெல்டோய்டியா
யூரோபெல்டிசு மாகுலேட்டா (யூரோபெல்டிடே)
சிலிண்ட்ரோபிலசு ரூபசு (சிலிண்ட்ரோபிடே)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்
  • யூரோபெல்டிடே
  • சிலிண்ட்ரோபிடே
  • அனோமோசிலிடே

யூரோபெல்டாய்டு பாம்புகள் (Uropeltoidea) என்று அழைக்கப்படும் யூரோபெல்டோய்டியா, யூரோபெல்டிட் பெருங்குடும்பம் ஆகும். இந்த பெருங்குடும்பத்தில் யூரோபெல்டிடே மற்றும் ஆசியக் குழாய் பாம்பு குடும்பங்களான சிலிண்ட்ரோபிடே மற்றும் அனோமோசிலிடே குடும்பங்கள் உள்ளன.

2018ஆம் ஆண்டு நிலவரப்படி, யூரோபெல்டோய்டியாவில் 71 சிற்றினங்கள் உள்ளன. பெயரிடப்பட்ட கேடய வால் பாம்புகள் (23 சிற்றினங்களைக் கொண்ட யூரோபெல்டிசு பேரினம்) மற்றும் இவற்றின் சகோதர குழுக்கள் (6 பிற பேரினத்தினைச் சார்ந்த 32 சிற்றினங்கள்),[1] 13 வகையான ஆசியக் குழாய் பாம்புகள் (சிலிண்ட்ரோபிசு பேரினம்), மற்றும் 3 குள்ள குழாய் பாம்பு சிற்றினங்கள் (அனோமோகிலசு பேரினம்.[2]

போவாசு, மலைப்பாம்புகள் மற்றும் பிற கெனோபிடியன் பாம்புகளின் வகைப்பாட்டியல் நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இறுதியில் ஒரு குறிப்பிட்ட உட்கோட்டினை லின்னேயன் தரத்திற்கு (ஒரு பெருங்குடும்பம், குடும்பம் அல்லது துணைக்குடும்பம் போன்றவை) ஒதுக்குவது என்பது தன்னிச்சையானது. யூரோபெல்டாயிடே என்ற உட்கோட்டின் பெயர், இந்த 71 சிற்றினங்களுக்கிடையில் ஒப்பீட்டளவில் நெருக்கமான பரிணாம உறவை வலியுறுத்துகிறது. இது 48 [CI:36-60] மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பொதுவான மூதாதையரைக் கடைசியாகப் பகிர்ந்து கொண்டது. யூரோபெல்டாய்டுகளுக்கும் அவற்றின் அடுத்த நெருங்கிய உறவினர்களான பைத்தானாய்டுகளுக்கும் (மலைப்பாம்பு) இடையே உள்ள பரிணாம உறவுக்கு மாறாக. (யூரோபெல்டாய்டுகள் மற்றும் பைத்தானாய்டுகளுக்கு இடையே உள்ள மிகச் சமீபத்திய பொதுவான மூதாதையர் ~73 [CI:59–87] மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தன.[3]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரோபெல்டோய்டியா&oldid=4125701" இலிருந்து மீள்விக்கப்பட்டது