யூரோப்பியம்(II) தெலூரைடு

வேதிச் சேர்மம்


யூரோப்பியம்(II) தெலூரைடு (Europium(II) telluride) என்பது EuTe என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யூரோப்பியமும் தெலூரியமும் சேர்ந்து வினைபுரிவதால் இச்சேர்மம் உருவாகிறது.

யூரோப்பியம்(II) தெலூரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
  • யூரோப்பியம் இருதெலூரைடு, யூரோப்பியம் டைதெலூரைடு
இனங்காட்டிகள்
12020-69-8
ChemSpider 74729
EC number 234-663-4
InChI
  • InChI=1S/Eu.Te
    Key: OSSGWZIRURPXNK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82811
  • [Te]=[Eu]
பண்புகள்
EuTe
வாய்ப்பாட்டு எடை 279.56 கி/மோல்
அடர்த்தி 6.48 கி/செ.மீ3[1]
உருகுநிலை 1526 °C[1]
தீங்குகள்
GHS pictograms The skull-and-crossbones pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H301, H332
P261, P301+310, P304+340, P312, P405, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

500-1000 பாகை செல்சியசு வெப்பநிலையில் யூரோப்பியம் மற்றும் தெலூரியம் தனிமங்களை வினைபுரியச் செய்து யூரோப்பியம்(II) தெலூரைடு தயாரிக்கப்படுகிறது.[2]

Eu + Te -> EuTe

600 முதல் 850 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஐதரசன் வாயு ஓட்டத்தில் யூரோப்பியம்(II) ஐதரைடுடன் தெலூரியத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தாலும் யூரோப்பியம்(II) தெலூரைடு உருவாகும்.[2]

EuH2 + Te -> EuTe + H2

பண்புகள்

தொகு

யூரோப்பியம்(II) தெலூரைடு கருப்பு நிறத்தில் எதிர்பெர்ரோகாந்தப் பண்புடன் காணப்படுகிறது.[3] திண்மமாகக் காணப்படும் இச்சேர்மம் கனசதுரப் படிக வடிவத்தில் படிகமாகிறது.[1] மேலும், இப்படிகம் சோடியம் குளோரைடு படிகவடிவத்தை ஒத்து உள்ளது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Haynes, William M.; Lide, David R.; Bruno, Thomas J. (2012). CRC handbook of chemistry and physics: a ready reference book of chemical and physical data (93rd ed.). Boca Raton: CRC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-8049-4.
  2. 2.0 2.1 Handbuch der präparativen anorganischen Chemie. 1 (3., umgearb. Aufl ed.). Stuttgart: Enke. 1975. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-432-02328-1.
  3. Coey, J. M. D. (2010-03-25). Magnetism and Magnetic Materials (in ஆங்கிலம்). Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-139-48692-7.
  4. Szytula, Andrej; Leciejewicz, Janusz (1994-03-08). Handbook of Crystal Structures and Magnetic Properties of Rare Earth Intermetallics (in ஆங்கிலம்). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-4261-5.
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரோப்பியம்(II)_தெலூரைடு&oldid=4003388" இலிருந்து மீள்விக்கப்பட்டது