யூரோப்பியம்(III) அயோடைடு

வேதிச் சேர்மம்

யூரோப்பியம்(III) அயோடைடு (Europium(III) iodide) என்ற கனிம வேதியியல் சேர்மம் EuI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. யூரோப்பியமும் அயோடினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1]

யூரோப்பியம்(III) அயோடைடு
Europium(III) iodide[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
யூரோப்பியம்(III) அயோடைடு
வேறு பெயர்கள்
யூரோப்பியம் மூவயோடைடு
இனங்காட்டிகள்
13759-90-5
ChemSpider 23349674
EC number 244-721-0
InChI
  • InChI=1S/Eu.3HI/h;3*1H/q+3;;;/p-3
    Key: OEGMUYNEEQNVBV-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [I-].[I-].[I-].[Eu+3]
பண்புகள்
EuI
3
வாய்ப்பாட்டு எடை 532.677 கி மோல்−1
தோற்றம் நிறமற்ற படிகங்கள்[2]
உருகுநிலை சிதையும் [1]
கட்டமைப்பு
படிக அமைப்பு BiI3
ஒருங்கிணைவு
வடிவியல்
octahedral
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் EuF3, EuCl3, EuBr3
ஏனைய நேர் மின்அயனிகள் SmI3, GdI3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

யூரோப்பியம் உலோகம் நேரடியாக அயோடினுடன் வினையில் ஈடுபட்டு யூரோப்பியம்(III) அயோடைடு உண்டாகிறது. [3]

2 Eu + 3 I2 → 2 EuI3

யூரோப்பியம்(III) ஆக்சைடு அல்லது யூரோப்பியம்(III) கார்பனேட்டை ஐதரயோடிக் அமிலத்தில் கரைத்து யூரோப்பியம்(III) அயோடைடின் நீரேற்று வடிவத்தைப் பெறலாம்.:[1][4]

Eu2O3 + 6 HI + 6 H2O → 2 EuI3·9H2O

யூரோபியத் தூள் டெட்ரா ஐதரோ பியூரானில் உள்ள அயோடினுடன் வினைபுரிந்து யூரோபியம்(III) அயோடைடின் டெட்ரா ஐதரோ பியூரான் கூட்டுவிளைபொருளைக் கொடுக்கிறது:[5][6]

2 Eu + 3 I2 + 7 THF → [EuI2(THF)5][EuI4(THF)2]

இக்கூட்டு விளைபொருளை இன்னும் எளிமையாக EuI3(THF)3.5 என எழுதலாம்.

கட்டமைப்பு தொகு

பிசுமத்(III) அயோடைடின் கட்டமைப்பில் உள்ளது போல [1][7][8] ஒவ்வொரு Eu3+ அயனியும் 6 அயோடைடு அயனிகளுடன் எண்முக ஒருங்கிணைப்பு கொண்டிருக்கும் கட்டமைப்பை யூரோப்பியம்(III) அயோடைடு ஏற்றுக்கொள்கிறது[1].

வினைகள் தொகு

யூரோபியம்(II) அயோடைடை தயாரிப்பதற்கான இரண்டு முக்கிய வினைகளுக்கு யூரோபியம்(III) அயோடைடு ஒரு தொடக்கப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது:[9]

ஐதரசன் வாயுவுடன் சேர்த்து 350 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கினால் EuI2 கிடைக்கிறது:

2 EuI3 + H2 → 2 EuI2 + 2 HI

200 பாகை செல்சியசு வெப்பநிலையில் விகிதாச்சாரமற்ற வெப்பச்சிதைவுக்கு உட்படுகிறது.[1]:

2 EuI3 → 2 EuI2 + 2 I2

நீரேற்றான யூரோப்பியம் நோனா ஐதரேட்டு (EuI3·9H2O) வெப்பச்சிதைவுக்கு உட்பட்டு யூரோப்பியம்(II) அயோடைடு இர்ருநீரேற்றாக மாற்றமடைகிறது. [10]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth–Heinemann. pp. 1240–1241. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
  2. William M. Haynes, ed. (2014). CRC Handbook of Chemistry and Physics (95th ed.). CRC Press. p. 4-63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1482208689.
  3. Holleman, A. F.; Wiberg, E. (2001). Inorganic Chemistry. San Diego: Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5.
  4. Emel'yanov, V. I.; Kuznetsova, L. I.; Abramova, L. V.; Ezhov, A. I. (1997). "Systems Eu2O3-HI-H2O and EuI3-HI-H2O at 25°C". Zh. Neorg. Khim. 42 (8): 1394–1396. https://core.ac.uk/display/289558963. 
  5. Ortu, Fabrizio (2022). "Rare Earth Starting Materials and Methodologies for Synthetic Chemistry". Chem. Rev. 122: 6040–6116. doi:10.1021/acs.chemrev.1c00842. 
  6. Gompa, Thaige P.; Rice, Natalie T.; Russo, Dominic R.; Aguirre Quintana, Luis M.; Yik, Brandon J.; Basca, John; La Pierre, Henry S. (2019). "Diethyl ether adducts of trivalent lanthanide iodides". Dalton Trans. 48: 8030–8033. doi:10.1039/C9DT00775J. 
  7. Wells, A. F. (1984). Structural Inorganic Chemistry (5th ed.). Oxford University Press. p. 421. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-965763-6.
  8. Asprey, L. B.; Keenan, T. K.; Kruse, F. H. (1964). "Preparation and Crystal Data for Lanthanide and Actinide Triiodides". Inorg. Chem. 3 (8): 1137–1141. doi:10.1021/ic50018a015. https://digital.library.unt.edu/ark:/67531/metadc867868/. 
  9. Brauer, Georg (1975). Handbook of Preparative Inorganic Chemistry. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-432-02328-6.
  10. Jenden, Charles M.; Lyle, Samuel J. (1982). "A Mössbauer spectroscopic study of the lodides of europium". J. Chem. Soc., Dalton Trans. (12): 2409-2414. doi:10.1039/DT9820002409. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரோப்பியம்(III)_அயோடைடு&oldid=3580556" இலிருந்து மீள்விக்கப்பட்டது