யூரோப்பியம்(III) ஆக்சலேட்டு
யூரோப்பியம்(III) ஆக்சலேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
யூரோப்பியம்(III) ஆக்சலேட்டு
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
3269-12-3 | |
ChemSpider | 144739 |
EC number | 221-885-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 165097 |
| |
பண்புகள் | |
Eu2(C2O4)3 | |
வாய்ப்பாட்டு எடை | 567.985 கி·மோல்−1 (நீரிலி) 640.046 கி·மோல்−1 (நான்கு நீரேற்று) 676.077 கி·மோல்−1 (அறுநீரேற்று) 748.138 கி·மோல்−1 (பத்து நீரேற்று) |
தோற்றம் | நிறமற்ற திண்மம்[1] |
1,38 மி.கி·l−1[2] | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H314, H335 | |
P261, P280, P305+351+338, P304+340, P405, P501 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
யூரோப்பியம்(III) ஆக்சலேட்டு (Europium(III) oxalate) என்பது Eu2(C2O4)3 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யூரோப்பியமும் ஆக்சாலிக் அமிலமும் வினைபுரிவதால் இச்சேர்மம் உருவாகிறது. பத்துநீரேற்று , அறுநீரேற்று மற்றும் நான்குநீரேற்று உள்ளிட்ட பல்வேறு நீரேற்றுகள் அறியப்படுகின்றன.[1] யூரோபியம்(II) ஆக்சலேட் என்றும் அறியப்படுகிறது. யூரோப்பியம்(II) ஆக்சலேட்டும் இருப்பதாக அறியப்படுகிறது.[3]
தயாரிப்பு
தொகுEu3+ நேர்மின் அயனியுடன் சூடான கரைசலில் அதிகப்படியான ஆக்சலேட்டு சேர்க்கப்பட்டால் Eu2(C2O4)3 ⋅ 10H2O வீழ்படிவாக கிடைக்கிறது, இது ஓர் ஈரமுலர்த்தியில் உலர்த்தப்படுகிறது.[4]
பண்புகள்
தொகுயூரோப்பியம்(III) ஆக்சலேட்டை சுண்ணாம்புக் காளவாயில் இட்டு சூடேற்றினால் யூரோபியம்(III) ஆக்சைடை சேர்மத்தை தயாரிக்கலாம்.[5]
யூரோப்பியம்(III) ஆக்சலேட்டு பத்துநீரேற்று 200 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு கீழான வெப்பநிலையில் நீர்நீக்கமடைகிறது.:
இந்த சேர்மத்தின் சிதைவு இரண்டு நிலைகளில் நடைபெறுகிறது. முதலாவது 350 °செல்சியசு வெப்பநிலையிலும் இரண்டாவது சுமார் 620 °செல்சியசு வெப்பநிலையிலும் நிகழ்கின்றன.[6]
மௌசுபௌர் அலைமாலையில் Eu2(C2O4)3 · 10H2O ஆனது EuF3 சேற்மத்தைக் குறிக்கும் வகையில் 2,38 மிமீ/வி வரி அகலத்துடன் +0,26 மிமீ/வி மாற்றிய மாற்றத்தைக் காட்டுகிறது.[4][7] Eu2(C2O4)3 சேர்மத்தின் மின்னிருமுனையித் திருப்புத்திறன் வெப்பநிலை 166±15 கெல்வின் ஆகும்.[8]
கட்டமைப்பு
தொகுயூரோப்பியம்(III) ஆக்சலேட்டு பத்து நீரேற்று P21/c (எண். 14) என்ற இடக்குழுவில் குழுவில் a = 1098, b = 961, c = 1004 pm மற்றும் β = 114.2° என்ற அளவுருக்களுடன் ஓர் அலகு செல்லுக்கு நான்கு வாய்பாட்டு அலகுகளுடன் ஒற்றைச் சரிவச்சு படிகத் திட்டத்தில் படிகமாகிறது.[9]
பயன்
தொகுநானோ துகள்கள் 393 நானோமீட்டர் ஒளி மூலத்தால் கிளர்த்தப்படும் போது ஒரு வரி உமிழ்வைக் காட்டுகின்றன, 592 நானோமீட்டரில் 5D0→7F1 மாற்றமும் 616 நானோமீட்டரில் 5D0→7F2 மாற்றமும் காணப்படுகிறது. வெள்ளை ஒளி உமிழ் இருமுனையங்களில் ஒளிர் பொருளாக இதை பயன்படுத்தலாம்.[10]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 John K. Gibson, Nathan A. Stum (1993-10-26). "Spectroscopic investigation of the thermal decomposition of europium oxalate". Thermochimica Acta 226: 301–310. doi:10.1016/0040-6031(93)80231-X.
- ↑ S. S. Berdonosov, D. G. Berdonosova, M. A. Prokofev, V. Ya. Lebedev (1976). "Study of europium oxalate decahydrate". Zh. Neorg. Khim.: 1184–1189.
- ↑ H. Pink (1967-09-01). "Europium(II)-oxalat". Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 353 (5–6): 247–249. doi:10.1002/zaac.19673530505.
- ↑ 4.0 4.1 Wynter, C. I.; Oliver, F. R.; Hill, Dana; Spijkerman, J. J.; Boyd-Bartlett, Y. P. (1991-08-01). "Short Communication: Mössbauer Effect 151Eu of in Europium Chelates". Radiochimica Acta 55 (2): 111–112. doi:10.1524/ract.1991.55.2.111.
- ↑ Ginya Adachi, Nobuhito Imanaka, Zhen Chuan Kang (2004). Binary rare earth oxides. Springer Netherlands. p. 138. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-2568-6.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ A. Glasner, E. Levy, M. Steinberg (1965). "Thermogravimetric and Differentialthermoanalyse of europium(III)oxalat and unite europium(II)salzen". Chemisches Zentralblatt (17): 05296.
- ↑ Wynter, C.I.; Oliver, F.W.; Davis, Alfred; Spijkerman, J.J.; Stadelmaier, H.; Wolfe, E.A. (1993). "Mössbauer effect of 151Eu in europium oxalate and fluorides". Nuclear Instruments and Methods in Physics Research Section B: Beam Interactions with Materials and Atoms 76 (1–4): 352–353. doi:10.1016/0168-583X(93)95235-W. Bibcode: 1993NIMPB..76..352W.
- ↑ C. I. Wynter, D. H. Ryan, S. P. Taneja, L. May, F. W. Oliver, D. E. Brown, M. Iwunzie (November 2005). "Mössbauer studies of 151Eu in europium oxalate,europium bissalen ammonium and europium benzoate". Hyperfine Interactions 166 (1–4): 499–503. doi:10.1007/s10751-006-9315-4. Bibcode: 2005HyInt.166..499W.
- ↑ A. Dinu, Th. Kukku, J. Monu, P. R. Biju, N. V. Unnikrishnanaand, J. Cyriac (2019). "Structural and spectroscopic investigations on thequenching free luminescence of europium oxalatenanocrystals". Acta Crystallographica Section C 75 (5): 589–597. doi:10.1107/S2053229619005059. பப்மெட்:31062717.
- ↑ Wei Zhu, You-jin Zhang, Hong-mei He, Zhi-yong Fang (2011). "Synthesis and Luminescence Property of Hierarchical Europium Oxalate Micropaticles". Chinese Journal of Chemical Physics 24 (1): 65–69. doi:10.1088/1674-0068/24/01/65-69. Bibcode: 2011ChJCP..24...65Z.