யூரோப்பியம்(III) ஆர்சனேட்டு

வேதிச் சேர்மம்

யூரோப்பியம்(III) ஆர்சனேட்டு (Europium(III) arsenate) என்பது EuAsO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யூரோப்பியத்தின் ஆர்சனேட்டு உப்பாக இது வகைப்படுத்தப்படுகிறது. 22.53±0.03 என்ற pKsp,c மதிப்புள்ள வெப்ப நிலைப்புத் தன்மையை யூரோப்பியம்(III) ஆர்சனேட்டு கொண்டுள்ளது.[1] செனோடைம் கட்டமைப்புடன் நிறமற்ற படிகங்களாக இச்சேர்மம் காணப்படுகிறது.[2]

யூரோப்பியம்(III) ஆர்சனேட்டு
Europium(III) arsenate
பெயர்கள்
வேறு பெயர்கள்
யூரோப்பியம் ஆர்சனேட்டு
இனங்காட்டிகள்
22816-52-0 Y
InChI
  • InChI=1S/AsH3O4.Eu/c2-1(3,4)5;/h(H3,2,3,4,5);/q;+3/p-3
    Key: LTLQVFNGOCEORU-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
  • [O-][As](=O)([O-])[O-].[Eu+3]
பண்புகள்
EuAsO4
தோற்றம் திண்மம்
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

யூரோப்பியம்(III) குளோரைடு (EuCl3) கரைசலில் சோடியம் ஆர்சனேட்டை (Na3AsO4) சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் யூரோப்பியம்(III) ஆர்சனேட்டைத் தயாரிக்கலாம்:[3]

Na3AsO4 + EuCl3 → 3 NaCl + EuAsO4

யூரோப்பியம்(III) ஆக்சைடை (Eu2O3) ஆர்சனிக் பெண்டாக்சைடு (As2O5) உடன் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் யூரோபியம்(III) ஆர்சனேட்டைப் பெறலாம்.[2]

Eu2O3 + As2O5 → 2EuAsO4

மேற்கோள்கள்

தொகு
  1. Firsching, F. Henry (October 1992). "Solubility products of the trivalent rare-earth arsenates". Journal of Chemical & Engineering Data 37 (4): 497–499. doi:10.1021/je00008a028. 
  2. 2.0 2.1 Golbs, Sylvia; Cardoso-Gil, Raul; Schmidt, Marcus (2009). "Crystal structure of europium arsenate, EuAsO4". Zeitschrift für Kristallographie - New Crystal Structures 224 (2): 169–170. doi:10.1524/ncrs.2009.0076. பன்னாட்டுத் தர தொடர் எண்:2197-4578. 
  3. Gabisoniya, Ts. D.; Nanobashvili, E. M.. Synthesis of rare earth metal arsenates. Soobshcheniya Akademii Nauk Gruzinskoi SSR (1980), 97(2), 345-8. பன்னாட்டுத் தர தொடர் எண் 0002-3167