யூரோப்பியம்(III) பாசுபைடு

வேதிச் சேர்மம்

யூரோப்பியம்(III) பாசுபைடு (Europium(III) phosphide) என்பது EuP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். யூரோப்பியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[2][3][4] யூரோப்பியத்தின் இதர பாசுபைடுகளும் அறியப்படுகின்றன.[5]

யூரோப்பியம்(III) பாசுபைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பாசுபேனைலிடின்யூரோப்பியம், யூரோப்பியம் பாசுபைடு[1]
இனங்காட்டிகள்
120069
ChemSpider 107191
EC number 249-274-5
InChI
  • InChI=1S/Eu.P
    Key: UXXSRDYSXZIJEN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 120069
SMILES
  • P#[Eu]
பண்புகள்
EuP
வாய்ப்பாட்டு எடை 182.94
தோற்றம் அடர் நிற படிகங்கள்
அடர்த்தி கி/செ.மீ3
உருகுநிலை 2,200 °C (3,990 °F; 2,470 K)
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

தூளாக்கப்பட்ட யூரோப்பியத்துடன் சிவப்பு பாசுபரசை சேர்த்து வெற்ரிடம் அல்லது மந்தவாயுச் சூழலில் சூடுபடுத்தினால் யூரோப்பியம்(III) பாசுபைடு தோன்றுகிறது.

Eu + P → EuP

நீர்ம அமோனியாவில் கரைந்த யூரோப்பியத்தின் வழியாக பாசுபீனை செலுத்தினாலும் யூரோப்பியம்(III) பாசுபைடு கிடைக்கும்.:[6]

Eu + 2PH3 → Eu(PH2)2 + H2

பாசுபீனைட்டை சூடுபடுத்தி தேவையான அளவுக்கு சிதைவுக்கு உட்படுத்தினால் யூரோப்பியம்(III) பாசுபைடு உருவாகிறது.

2Eu(PH2)2 → 2EuP + 2PH3 + H2</sub

இயற்பியற் பண்புகள் தொகு

யூரோப்பியம்(III) பாசுபைடு அடர் நிறத்தில் Fm3m என்ற இடக்குழுவுடன் கனசதுரப் படிகங்களாக உருவாகிறது. காற்றில் நிலைப்புத்தன்மை கொண்டதாகவும் தண்ணீரில் கரையாத உப்பாகவும் உள்ளது.

பயன்கள் தொகு

உயர் அதிர்வெண் பயன்பாடுகள் மற்றும் உயர் சக்தி பயன்பாடுகள் மற்றும் சிரொளி இருமுனையங்களில் ஒரு குறைக்கடத்தியாகப் பயன்படுகிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. "Europium phosphide". European Chemical Agency. பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  2. 2.0 2.1 "Europium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 15 December 2021.
  3. Pankratz, L. B. (1995). Bulletin 696. U.S. Government Printing Office. பக். 279. https://www.google.ru/books/edition/Bulletin/8hg4ic7fA7AC?hl=en&gbpv=1. 
  4. (in en) Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory. Cumulative Supplement to the Initial Inventory: User Guide and Indices. United States Environmental Protection Agency. 1980. பக். 172. https://www.google.ru/books/edition/Toxic_Substances_Control_Act_TSCA_Chemic/fkkJPwbY93gC?hl=en&gbpv=1&dq=Europium+phosphide+EuP&pg=RA3-PA145&printsec=frontcover. பார்த்த நாள்: 15 December 2021. 
  5. Mironov, K.E.; Brygalina, G.P.; Vikorskii, V. N. (1974). "Magnetism of Europium phosphides" (in en). Proceedings of the Rare Earth Research Conference. Plenum Press. பக். 105. https://www.google.ru/books/edition/Proceedings_of_the_Rare_Earth_Research_C/yKAaAQAAMAAJ?hl=en&gbpv=1&bsq=Europium(III)+phosphide+EuP&dq=Europium(III)+phosphide+EuP&printsec=frontcover. பார்த்த நாள்: 15 December 2021. 
  6. Pytlewski, L. L.; Howell, J. K. (1 January 1967). "Preparation of Europium and ytterbium phosphides in liquid ammonia" (in en). Chemical Communications (London) (24): 1280. doi:10.1039/C19670001280. https://pubs.rsc.org/en/content/articlelanding/1967/C1/c19670001280. பார்த்த நாள்: 15 December 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=யூரோப்பியம்(III)_பாசுபைடு&oldid=3378341" இலிருந்து மீள்விக்கப்பட்டது