யோகா பாலச்சந்திரன்

யோகா பாலச்சந்திரன் (1938 - 18 மே 2023), ஈழத்துப் பெண் எழுத்தாளரும் பத்திரிகையாளரும், வானொலி ஒலிபரப்பாளரும் ஆவார். ஈழத்து இதழ்களில் சிறுகதை, விமர்சனம், தொடர்கதை முதலியவற்றை எழுதியவர். புலம்பெயர்ந்து கனடாவில் வசித்து வந்தார்.

யோகா பாலச்சந்திரன்
பிறப்புயோகாம்பிகை வல்லிபுரம்
1938
கரவெட்டி, யாழ்ப்பாணம்
இறப்புமே 18, 2023 (அகவை 84–85)
கால்கரி, கனடா
இருப்பிடம்கனடா
பணிஎழுத்தாளர், ஊடகவியலாளர்
வாழ்க்கைத்
துணை
கே. பாலச்சந்திரன்

யாழ்ப்பாணம், கரவெட்டியைச்சேர்ந்த எம். வல்லிபுரம் (காவல்துறை அதிகாரி), செல்லம்மா ஆகியோரின் மூத்த மகளான யோகாம்பிகை யாழ்ப்பாணம் கல்வியங்காடு, திருநெல்வேலி கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணம் திருக்குடும்பக் கன்னியர் மடப் பாடசாலையில் கல்வி கற்றார்.

வீரகேசரி பத்திரிகையிலும் பின்னர் தினபதியிலும் ஆசிரியர் குழுவில்[1] பணியாற்றி இலங்கை குடும்பத் திட்டச் சங்கத்தில் 31 ஆண்டுகள் பணியாற்றிப் பணிப்பாளராக ஓய்வு பெற்றார்.[2] அத்துடன் இலங்கை வானொலியில் கல்விச்சேவை உட்பட பல நிகழ்ச்சிகளில் பங்காற்றினார். யுகமலர் என்ற இவரது சிறுகதைத் தொகுப்பு நூலாக வெளிவந்தது.

நடிகர் காமினி பொன்சேகாவின் "சருங்கலே" சிங்களத் திரைப்படத்தின் தமிழ் வசனங்களை எழுதியதோடு,[3] அதன் படப்பிடிப்பு கரவெட்டியில் இடம்பெறக் காரணமாக இருந்தவர். Never mind Silva, bye bye Raju, Broken Promise போன்ற ஆங்கில நாடகங்களை எழுதினார்.[4] இவரது கணவரான கே. பாலச்சந்திரன் "ரைம்ஸ்" பத்திரிகையில் பணியாற்றிய காலத்தில், கொழும்புக் கலைச்சங்கத்தின் தலைவராக இருந்து ஏராளமான தமிழ் நாடகங்களை மேடையேற்றியதோடு, கலைஞர்களைக் கெளரவித்து ஆதரவு நல்கியவர்.[4] யோகா எழுதிய நாடகங்களை பாலச்சந்திரன் மேடையேற்றினார்.

எழுதிய நூல்கள்

தொகு
  • மாவீரன் செண்பகராமன்
  • யுகமலர் (சிறுகதைகள்)

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோகா_பாலச்சந்திரன்&oldid=4043638" இலிருந்து மீள்விக்கப்பட்டது