ரஜ்னி பட்டேல்
ரஜ்னி படேல் (Rajni Patel) இவர் ஓர் இந்திய அரசியல்வாதியும், வழக்கறிஞருமாவார். பிரேம் அஹுஜா கொலை வழக்கில் கடற்படைத் தளபதி கவாஸ் மானேக்சா நானாவதியை ஆதரித்த உயர் வழக்கறிஞர்கள் குழுவில் உறுப்பினராக இருந்ததால் இவர் நன்கு அறியப்பட்டார்.
ரஜ்னி பட்டேல் | |
---|---|
பிறப்பு | சர்சா, ஆனந்த், குசராத்து, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 9 சனவரி 1915
இறப்பு | 3 மே 1982 |
பணி | பார் அட் லா |
வாழ்க்கைத் துணை | பாகுத் படேல்[1] |
வாழ்க்கை
தொகுஇவர் 1915 சனவரி 9 அன்று இந்தியாவின் குசராத்தில் ஆனந்திற்கு அருகிலுள்ள சர்சாவில் பிறந்தார். [2] மகாத்மா காந்தி தொடங்கிய சுதேசி இயக்கத்தில் பங்கேற்ற இவர், இளம் வயதிலேயே மதுபானக் கடைகளுக்கு வெளியே மறியல் செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டார். 1930களின் முற்பகுதியில் உயர் படிப்புகளுக்காக இங்கிலாந்து சென்றார். [3] 1939 ஆம் ஆண்டில், இவர் லண்டனில் இருந்து ஒரு வழக்கஞராக தகுதி பெற்றார். பின்னர், மும்பையில் பயிற்சி பெற்றார். [4] லண்டனில் இருந்தபடியே இவர் ஜவகர்லால் நேருவுடன் தொடர்பு கொண்டார். நேரு இந்திய சுதந்திர இயக்கத்திற்கு ஆதரவை சேகரிக்க அமெரிக்கா மற்றும் பிற இடங்களுக்கு செல்ல இவரை ஊக்குவித்தார். இவர் கப்பல் மூலம் மும்பைக்கு திரும்பியபோது, இவரை வர்வேற்க நேரு இந்தியாவின் நுழைவாயிலில் நின்றார். இருப்பினும், பிரித்தானிய அதிகாரிகள் இவரை தரையிறங்க அனுமதிக்கவில்லை. அதற்கு பதிலாக இவரை கப்பலிலேயே கைது செய்து நாசிக் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
ஒரு சட்டத்தரணியாக தனது வாழ்க்கைக்குப் பிறகு, இவர் 1960களின் பிற்பகுதியில் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார். இவர் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியுடன் நெருக்கமாக இருந்தார். 1970களின் முற்பகுதியில், இவர் மும்பை காங்கிரசு கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டார். [4]
மும்பையின் வொர்லியில் அமைந்துள்ள நேரு மையம் 1972 ஆம் ஆண்டில் இவரால் கருத்தரிக்கப்பட்டது. இந்த மையத்தில் ஒரு கோளரங்கம், ஒரு கலைக்கூடம், "இந்தியாவின் கண்டுபிடிப்பு" என்று அழைக்கப்படும் ஒரு நிரந்தர காட்சி, மேலும் மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வகம் ஆகியவை உள்ளன. [3]
இவர் பாகுல் என்பவரை மணந்தார். பின்னர் 1992 இல் மும்பையின் ஷெரிப் ஆனார். [5] பாலிவுட் நடிகை அமீஷா படேல் இவரது பேத்தியாவார். [4] இவர் 1982 மே 3 இல் இறந்தார். [3]
அங்கீகாரம்
தொகு1986 ஆம் ஆண்டில், மும்பையின் நாரிமன் பாயிண்ட் பகுதியில் மரைன் டிரைவிலிருந்து ஒரு சாலைக்கு இவரது பெயரிடப்பட்டது. [4]
இலக்கியம்
தொகுஇவரது மனைவி "ரஜ்னியின் நினைவு" என்ற தலைப்பில் ஒரு நினைவுக் குறிப்பை எழுதியுள்ளார். [6]
மேற்கோள்கள்
தொகு- ↑ India, Press Trust of (2018-09-14). "Rajni Patel staunch believer in Nehru's ideas: Former Prez". Business Standard India. https://www.business-standard.com/article/pti-stories/rajni-patel-staunch-believer-in-nehru-s-ideas-former-prez-118091401118_1.html.
- ↑ "Dinner with the Prince". mid-day (in ஆங்கிலம்). 2013-11-06. பார்க்கப்பட்ட நாள் 2019-08-17.
- ↑ 3.0 3.1 3.2 "Pranab Mukherjee to release book on Barrister Rajni Patel". The Siasat Daily (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-08-17.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "Barrister Rajni Patel Marg: Named after Cong chief close to Mrs Gandhi & who nearly became CM". The Indian Express (in Indian English). 2018-05-17. பார்க்கப்பட்ட நாள் 2019-08-17.
- ↑ "Raj Bhavan Archives (A Class Files - Permanent Record" (PDF). Archived from the original (PDF) on 12 August 2017. பார்க்கப்பட்ட நாள் 12 August 2017.
- ↑ Patel, Bakul (2018). Remembering Rajni: Rajni Patel - 9 January 1915-3 May 1982 (in ஆங்கிலம்). Rajni Patel Memorial Foundation. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789383999255.