அமீஷா பட்டேல்

இந்திய நடிகை

அமீசா பட்டேல் (Ameesha Patel: பிறப்பு 9 ஜூன் 1975) இவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் பாலிவுட் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் தோன்றுகிறார். பிலிம்பேர் விருது மற்றும் ஜீ சினி விருது போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

அமீசா பட்டேல்
2023 இல் அமீசா
பிறப்பு9 சூன் 1975 (1975-06-09) (அகவை 49)
மும்பை, மகாராட்டிரம், இந்தியா
மற்ற பெயர்கள்அமீசா பட்டேல்
படித்த கல்வி நிறுவனங்கள்டப்ஸ் பல்கலைக்கழகம்
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2000–தற்போது வரை
உறவினர்கள்ரஜ்னி பட்டேல் (தாத்தா)

அமீசா பட்டேல் 2000 ஆம் ஆண்டில் கஹோ நா... பியார் ஹை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். பெரிய வணிக வெற்றியான இது, சிறந்த பெற்று தந்தது. அதிக வசூல் செய்த பத்ரி (2000) மற்றும் கதர்: ஏக் பிரேம் கதா (2001) போன்ற படங்களிலும் நடித்தார். இரண்டாவது படம் இவருக்கு பிலிம்பேர் விருதினைப் பெற்றுத் தந்தது.[1] பின்னர், ஹம்ராஸ் (2000) மற்றும் கியா யேஹி பியார் ஹை (2000) போன்ற படங்களில் நடித்தாலும் அமீசாவின் திரைப்படங்கள் தோல்வியைத் தழுவின. ஹனிமூன் டிராவல்ஸ் பிரைவேட் லிமிடெட் (2007) பூல் பூலையா (2007) மற்றும் ரேஸ் 2 (2013) போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்தார்.

தொடர்ச்சியான ஏற்ற இறக்கங்களுக்குப் பிறகு, கதர் 2 (2023) என்ற படத்தில் நடித்தார். இது இவரது திரை வாழ்க்கையை மீட்டெடுத்தது. மேலும் அதிக வசூல் செய்த வெளியீடாகவும் உருவெடுத்தது.[2] தனது நடிப்பு வாழ்க்கையைத் தவிர, படேல் ஒரு மனிதாபிமானியாகவும் மற்றும் பல காரணங்களுக்காக பணியாற்றுகிறார்.

இளமை வாழ்க்கை

தொகு

குசராத்தி தந்தை அமித் பட்டேல் மற்றும் வெளிநாடு வாழ் சிந்தி மற்றும் பஞ்சாபியான தாய் ஆஷா ஆகியோருக்கு ஜூன் 9,1975 அன்று அமீசா பிறந்தார்.[3][4][5] தனது ஐந்து வயதிலிருந்தே பயிற்சி பெற்ற பரதநாட்டிய நடனக் கலைஞராக இருந்து வருகிறார்.[6]

இவர் மும்பையில் உள்ள கதீட்ரல் மற்றும் ஜான் கானான் பள்ளி படித்தார். பின்னர் அமெரிக்காவில் பாஸ்டனில் உள்ள டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அங்கு இரண்டு ஆண்டுகள் உயிரியல் மரபணு பொறியியல் பயின்றார்.[6]

பிறகு, கந்த்வாலா செக்யூரிட்டீஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் பொருளாதார ஆய்வாளராக சேர்ந்தார். பின்னர், மோர்கன் ஸ்டான்லியில் ஒரு வேலையைப் பெற்றார். ஆனால் பணியில் சேராமல் இந்தியா திரும்பி, சத்யதேவ் துபேவின் நாடகக் குழுவில் சேர்ந்து, தன்வீர் கான் எழுதிய நீலம் (1999) என்ற உருது மொழி நாடகம் உட்பட நாடகங்களில் நடித்தார்.[7] அதே நேரத்தில் பல வணிக நிறுவனங்களில் வடிவழகியாகத் தோன்றினார். 'பஜாஜ், பேர் அண்ட் லவ்லி, காட்பரீஸ், பெம், லக்சு போன்ற பல பிரபலமான இந்தியப் பெருட்களுக்காகவும் அமீசா பட்டேல் தோன்றினார்.

இவரது தாத்தா ரஜ்னி பட்டேல் ஒரு வழக்கறிஞரும் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதியும் ஆவார். மும்பையில் உள்ள ஒரு தெருவிற்கு 'பாரிஸ்ட்டர் ரஜனி பட்டேல் மார்ஜ்' என்று 1986 இல் இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.[8]

 
2009 இல் அமீசா பட்டேல்

மற்ற வேலைகள்.

தொகு
 
அமீசா பட்டேல் 2012 இல் ஒரு வளைவு நடைப்பயணத்தின் போது

அமீசா பட்டேல், கிருத்திக் ரோஷனுடன் இணைந்துபல இசைக்க்சேரிகளுக்காக உலகம் முழுவதும் சுற்றுப்பயணங்களில் பங்கேற்றார். த ரோஷன்ஸ்: ரித்திக் லைவ் இன் கான்செர்ட் (2001) அவரது முதல் உலகச் சுற்றுலா ஆகும். 2004 ஆம் ஆண்டில், கிருத்திக் ரோஷன், சைஃப் அலி கான் மற்றும் லாரா தத்தா ஆகியோருடன் தொடர்ச்சியான இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 2005 ஆம் ஆண்டில், அட்னன் சமியின் குச் தில் சே.. என்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது ஏப்ரல் 15 முதல் மே 15 வரை அமெரிக்கா மற்றும் கனடா முழுவதும் நிகழ்த்தப்பட்டது.[9] அக்டோபர் 2008 இல், ஹிமேஷ் ரேஷாமியாவின் கர்ஸ் மியூசிக்கல் கர்டன் ரைசர் என்ற இசைக்கச்சேரியில் நேஹா துபியா, ரியா சென் மற்றும் அமிர்தா அரோரா ஆகியோருடன் கலந்து கொண்டார்.[10] டிசம்பர் 2008 இல், அக்‌சய் குமாரின் சாந்தினி சௌக் டு ஹாங் என்ற கிறிஸ்துமஸ் தின நிகழ்ச்சியில் பிபாசா பாசு, பிரியங்கா சோப்ரா, ரியா சென், ஆர்த்தி சாப்ரியா மற்றும் ஹிமேஷ் ரேஷாமியா ஆகியோருடன் இசை கச்சேரிகளில் பங்கேற்றார். மேலும் அக்சய் குமாரின் சாந்தினி சௌக் டு சீனா (2009) திரைப்படத்தின் விளம்பர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகவும் பங்கேற்றார். 26 நவம்பர் 2008 மும்பாய் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, 2009 ஆம் ஆண்டிற்கான பல புத்தாண்டு கச்சேரிகள் இரத்து செய்யப்பட்டன. ஆனால் இவரும் கண்ட்ரி கிளப் இந்தியாவும் தங்களது நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்த திட்டமிட்டனர். ஏனெனில் இது தீவிரவாதிகளின் நோக்கத்திற்கு எதிராக அமையும் என அவர்கள் எண்ணினர்.

மனிதாபிமானப் பணி

தொகு

2004 செப்டம்பரில், விலங்குகளின் நலனுக்காக போராடும் அமைப்பான பீட்டாவுடன் அமீசா சேர்ந்தார். இது ஒரு மிருகக்காட்சிசாலையில் சிறைபிடிக்கப்பட்ட விலங்குகளின் வாழ்க்கையை முன்னிலைப்படுத்தும் ஒரு விளம்பர பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்.

2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கத்தால் பாதிக்கப்ப்ட்டவர்களுக்காக பிப்ரவரி 2005 இல், மற்ற பாலிவுட் நட்சத்திரங்களுடன் சேர்ந்து, அமீசா பட்டேல் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.[11] 2005 டிசம்பர் 24 அன்று புதுதில்லியில் இந்திரா காந்தி மையத்தில் நடைபெற்ற டெம்ப்டேஷன்ஸ் 2005 என்ற தொண்டு விழாவிலும் பங்கேற்றார். இது ஒரு ஊனமுற்றோருக்கான வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்கான தேசிய மையத்திற்கு உதவியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.[11]

நவம்பர் 2006 இல், அமீசா பட்டேல் பிளானட் ரீட் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சேர்ந்தார். இது கிராமங்களில் உள்ள மக்கள் திரைப்பட பாடல்கள் மூலம் படிக்க கற்றுக்கொள்ள உதவுகிறது.[12] அக்டோபர் 2007 இல், ஜான் ஆபிரகாம் மற்றும் கிர்ரான் கெர் ஆகியோருடன் இந்தியாவில் மனித கடத்தலைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட ஐக்கிய நாடுகள் அவையின் போதை மருந்துகள் மற்றும் குற்றங்களின் மீதான ஒருங்கிணைந்த தேசிய அலுவலகத்தில் சேர்ந்தார்.[13]

சொந்த வாழ்க்கை

தொகு

1999 ஆம் ஆண்டில், அமீசா பட்டேல் ஆப் முஜே அச்சே லக்னே லகே படத்தின் தயாரிப்பாளர் விக்ரம் பட்டைச் சந்தித்து அவருடன் உறவில் இருந்தார்.[14] பின்னர், அமீசாவின் தந்தையின் மோசமான வணிக நிர்வாகத்தால் இவர் நிதி நெருக்கடியை எதிர்கொண்டதால் இது அமீசா மற்றும் விக்ரம் பட் குடும்பங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தியது.[15][16] [17] ஜனவரி 2008 இல், இவர்கள் தங்கள் ஐந்து ஆண்டு உறவை முறித்துக் கொண்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.[18] [19]

சர்ச்சைகள்

தொகு

நியூயார்க்கில் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்பில் கலந்து கொள்ள 2006 ஆகஸ்ட் 18 அன்று மும்பை-நியூயார்க் விமானத்தில் பயனித்த அமீசா தனது தோழருக்கு முதல் வகுப்பு விமானப் பயணம் உறுதியாகாததால் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக ஏர் இந்தியா ஊழியர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.[20][21] இவர் மீதான குற்றச்சாட்டுகள் அவர் வெளிநாட்டிலிருந்து திரும்பியவுடன் விசாரிக்கப்படும் என்று காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.[22]

மேற்கோள்கள்

தொகு
  1. "All Time Earners Inflation Adjusted (Figures in Ind Rs)". Box Office India. Archived from the original on 2 November 2013. பார்க்கப்பட்ட நாள் 3 February 2007.
  2. "'Gadar 2' box office collection Day 2: Sunny Deol starrer declared a BLOCKBUSTER as film earns Rs 80.50 crore". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 14 August 2023.
  3. "Ameesha Patel to do dandiya!". Mid-day.com. Archived from the original on 2 November 2013. பார்க்கப்பட்ட நாள் 31 October 2013.
  4. Chhibber, Kavita (3 November 2003). "Amisha Patel". Archived from the original on 10 June 2024. Asha Patel says she grew up in an elite pampered atmosphere abroad and met her husband as a teenager while visiting India. For him it was love at first sight, but Asha laughs and says as a Sindhi Punjabi she was not sure that she would fit into a Gujarati family.
  5. Zee Media Bureau. "Birthday special: Ameesha Patel – then and now…". Zee News. Archived from the original on 8 July 2020. பார்க்கப்பட்ட நாள் 7 July 2020.
  6. 6.0 6.1 Verma, Sukanya (22 November 1999). "'It's unfair to have just one goal in life'". Rediff. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 29 April 2016.
  7. Savvy Gehna Mehra. "Gadar's special, very very special". Screen Weekly. Archived from the original on 11 July 2009. பார்க்கப்பட்ட நாள் 4 September 2009.
  8. "Barrister Rajni Patel Marg: Named after Cong chief close to MRS Gandhi & who nearly became CM". The Indian express. 17 May 2018.
  9. "Kucch Dil Se-Live in concert". Archived from the original on 26 February 2012. பார்க்கப்பட்ட நாள் 27 July 2009.
  10. "Bollywood hotties sizzle at scintillating 'Karzzzz' curtain raiser". Sawf News. Archived from the original on 16 October 2008. பார்க்கப்பட்ட நாள் 12 October 2008.
  11. 11.0 11.1 "Entertainment News: Latest Bollywood & Hollywood News". இந்தியன் எக்சுபிரசு. https://indianexpress.com/section/entertainment/. 
  12. "Amisha Patel joins an NGO". Bollywood Hungama இம் மூலத்தில் இருந்து 7 December 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081207234703/http://www.bollywoodhungama.com/news/2006/11/17/8235/index.html. 
  13. "Stars speak up for human dignity". தி இந்து இம் மூலத்தில் இருந்து 13 October 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071013090846/http://hindu.com/2007/10/12/stories/2007101250140200.htm. 
  14. "I want to make a film that expresses me". ரெடிப்.காம். Archived from the original on 2 December 2008. பார்க்கப்பட்ட நாள் 20 February 2009.
  15. "Amisha-Vikram's mom at war!". சிஃபி. Archived from the original on 16 July 2012. பார்க்கப்பட்ட நாள் 1 April 2004.
  16. ""My mom beat me with a slipper" – Amisha Patel". பாலிவுட் கங்காமா இம் மூலத்தில் இருந்து 11 September 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090911075810/http://www.bollywoodhungama.com/features/2005/2/21/394/index.html. 
  17. "Pushy papa's girl grows up & hits back". த டெயிலி டெலிகிராப் இம் மூலத்தில் இருந்து 20 August 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040820133812/http://www.telegraphindia.com/1040726/asp/frontpage/story_3543285.asp. 
  18. "Vikram Bhatt admits he's no longer with girlfriend of five years Ameesha Patel". மிட் டே இம் மூலத்தில் இருந்து 17 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617120911/http://www.mid-day.com/entertainment/2008/jan/909217.htm. 
  19. "Everybody is happy about my daughter's break-up". Mumbai Mirror இம் மூலத்தில் இருந்து 23 February 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120223141500/http://www.mumbaimirror.com/index.aspx?Page=article&sectname=Entertainment-Bollywood&sectid=30&contentid=200801162008011604092435910149b04. 
  20. "Amisha stopped only after CISF intervened". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 2 November 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131102112504/http://articles.timesofindia.indiatimes.com/2006-08-19/india/27827482_1_frequent-flier-airline-staff-cisf. 
  21. "Air-India to investigate Amisha's run-in with staffer". The Indian Express. Archived from the original on 1 November 2013. பார்க்கப்பட்ட நாள் 19 August 2006.
  22. "AI enquiry into Amisha incident". Mid-Day இம் மூலத்தில் இருந்து 17 June 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617121037/http://www.mid-day.com/news/2006/aug/142336.htm. 

மேலும் வாசிக்க

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ameesha Patel
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீஷா_பட்டேல்&oldid=4172559" இலிருந்து மீள்விக்கப்பட்டது