ரதி பாண்டே
ரதி பாண்டே (Rati Pandey) ஒரு இந்திய நடிகை மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆவார். இவர் போரஸ், ஹிட்லர் தீதி, மிலே ஜப் ஹம் டம், பெகுசராய், ஹர் கர் குச் கெஹ்டா ஹை மற்றும் ஷாதி ஸ்டிரீட் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததின் மூலமாக அறியப்படுகிறார்.
ரதி பாண்டே | |
---|---|
பிறப்பு | அசாம், இந்தியா |
இருப்பிடம் | மும்பை, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | மிராண்டா ஹவுஸ், தில்லி பல்கலைக்கழகம் |
பணி | நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர், பாடகி |
செயற்பாட்டுக் காலம் | 2006-முதல் தற்போது வரை |
அறியப்படுவது | மிலே ஜப் ஹம் டம் ஹிட்லர் தீதி போரஸ் |
இளமைப்பருவம்
தொகுரதி பாண்டே, அசாம் மாநிலத்தில் பிறந்தார். அசாமில் ஏழு வருடங்கள் வாழ்ந்து தன் ஆரம்பக் கல்வியை முடித்தார். பிறகு பட்னாவில் படித்தார். தனது உயர் கல்வியை புது தில்லி, சாதிக் நகரிலுள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படித்தார். ரதி பாண்டே, மிராண்டா ஹவுஸ், தில்லி பல்கலைக்கழகத்தில் வணிகவியல் படித்து பொருளாதாரத்தில் நிபுணத்துவம் பெற்றார்.[1]
தொழில்
தொகுரதி 2006இல், "ஐடியா ஜீ சினிஸ்டார்ஸ் கி கோஜ்" தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும், இவர் சோனி தொலைக்காட்சித் தொடரான "சி. ஐ. டி." மற்றும் சகாரா ஒன்னின் திகில் நிகழ்ச்சியான "ராத் ஹோன் கோ ஹை"யில் நடித்துள்ளார்.[2] சாம்பியன்ஸ் அப்ளையன்சஸ் தொலைக்காட்சியில் தொலைக்காட்சி விளம்பரங்களில் இவர் தோன்றியுள்ளார். அதைத் தொடர்ந்து, ஸ்டார் ஒன் தொலைக்காட்சியில் தீப்தி பட்னாகரின் "ஷாதி ஸ்டிரீட்" தொடரில் நந்தினி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பின்னர், ஜீ தொலைக்காட்சியில், பிரார்த்னா தக்ராலின் தொடரான "ஹர் கர் குச் கெஹ்டா ஹை"யில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தத் தொடரை "ஷ்ரெயா கிரியேஷன்ஸ்" தயாரித்துள்ளது.
2008 இல், மிலே ஜப் ஹம் டம் நிகழ்ச்சியில் நுபுர் பூஷனின் பாத்திரத்தில் நடித்தார். நுபுர் ரசிகர்களுடன் பிரபலமாக இருந்த ஒரு இளம்பெண். தயாரிப்பாளர்கள் நிகழ்ச்சியின் பாத்திரத்தை வெளியிட்டபோது, நிகழ்ச்சியின் ரசிகர்கள் அவர்கள் நிகழ்ச்சியில் நுபுர் திரும்புவதற்கு அனுமதித்தனர்[3]
குறிப்புகள்
தொகு- ↑ "Rati Pandey Info- Biographia" (in en-US). Biographia. 2017-01-16 இம் மூலத்தில் இருந்து 2017-08-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170815174658/http://www.biographia.co.in/rati-pandey-wiki-biography-age-weight-height-profile-info/.
- ↑ "'Hitler Didi' Rati Pandey happy with appreciation". Archived from the original on 2014-10-19. பார்க்கப்பட்ட நாள் 2019-03-09.
- ↑ "Nupur Bhushan is back in Miley Jab Hum Tum".