ரஸியா பட்
ரஸியா பட் ( Razia Butt ) பாக்கித்தானைச் சேர்ந்த உருது புதின ஆசிரியரும், நாடக ஆசிரியரும் ஆவார். 1960கள் மற்றும் 1970களில் பிரபலமான புனைகதை எழுத்தாளர்களில் ஒருவரான இவர், வீட்டு வாசகர்களிடையே தனது பிரபலத்தின் காரணமாக ஆங்கில எழுத்தாளர் பார்பரா கார்ட்லேண்டுடன் அடிக்கடி ஒப்பிடப்படுகிறார். [1] [2] [3]
ரஸியா பட் | |
---|---|
பிறப்பு | வசிராபாத், பஞ்சாப், பிரித்தானிய இந்தியா | 19 மே 1924
இறப்பு | 4 அக்டோபர் 2012 லாகூர், பஞ்சாப் (பாக்கிஸ்தான்) | (அகவை 88)
தொழில் | எழுத்தாளர், நாடக எழுத்தாளர், புதின ஆசிரியர் |
தேசியம் | பாக்கித்தானியர் |
வகை | புனைகதை |
கருப்பொருள் | சோசலிசம், காதல் |
இவரது சில படைப்புகள் பானோ உட்பட தொலைக்காட்சி தொடர்களாகவும், திரைப்படங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. [4]
பின்னணி
தொகுரஸியா நியாஸ் 19 மே 1924 இல் வசிராபாத்தில் பிறந்தார் [5] தனது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை பெசாவரில் கழித்தார். [6]
தொழில்
தொகுஇவர் 1940 ஆம் ஆண்டில் தனது பதின்ம வயதில் இருந்தபோது ஒரு இலக்கிய இதழில் முதலில் எழுத ஆரம்பித்தார்.[7] பின்னர் தனது முதல் வெளியிடப்பட்ட கதையான நைலா என்ற புதினத்தை உருவாக்கினார்.[8] இவர் வானொலி நாடகங்களையும் எழுதினார். நைலா, சைக்கா போன்ற திரைப்படங்களும், சைக்கா மற்றும் தஸ்தான் போன்ற தொலைக்காட்சித் தொடர்களும் இவரது புதினங்களை அடிப்படையாகக் கொண்டவை. [2] [9]
1946 இல் திருமணம் செய்துகொண்ட ரசியா பட், சில வருட இடைவெளிக்குப் பிறகு 1950களில் மீண்டும் எழுதத் தொடங்கினார். 51 புதினங்கள் மற்றும் 350 சிறுகதைகளை எழுதியுள்ளார். [10]
இறப்பு
தொகுநீண்டகால நோயால் பாதிக்கட்டிருந்த ரஸியா பட் லாகூரில் 4 அக்டோபர் 2012 அன்று இறந்தார். [13] [14]
சான்றுகள்
தொகு- ↑ "Popularity, literary finesse and some Urdu bestsellers". dawn.com. 2021-10-19.
- ↑ 2.0 2.1 عارف وقار بی بی سی اردو ڈاٹ کام، لاہور (1 January 1970). "BBC Urdu – فن فنکار – ناول نگار رضیہ بٹ انتقال کر گئیں". Bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 21 October 2012.
- ↑ Abbas Akhtar (18 May 2008). "Writer & Novelist Razia Butt in Brunch w/ Bushra P-3/5". Vidpk.com. Archived from the original on 8 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 21 October 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Dastaan: History on TV". Express Tribune. 2011-09-24.
- ↑ "Great Urdu novelist Razia Butt passes away aged 89". Samaa Tv. பார்க்கப்பட்ட நாள் 21 October 2012.
- ↑ "Razia Butt is no more". Paklinks.com. 5 October 2012. Archived from the original on 22 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 21 October 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Rayan Khan (July 10, 2011). Rasheed Butt: The life and times of a calligrapher, தி எக்சுபிரசு திரிப்யூன்
- ↑ عارف وقار بی بی سی اردو ڈاٹ کام، لاہور (1 January 1970). "BBC Urdu – فن فنکار – ناول نگار رضیہ بٹ انتقال کر گئیں". Bbc.co.uk. பார்க்கப்பட்ட நாள் 21 October 2012.عارف وقار بی بی سی اردو ڈاٹ کام، لاہور (1 January 1970). "BBC Urdu – فن فنکار – ناول نگار رضیہ بٹ انتقال کر گئیں". Bbc.co.uk. Retrieved 21 October 2012.
- ↑ Hasan, Taneeya (September 24, 2011). "Dastaan: History on TV". தி எக்சுபிரசு திரிப்யூன்.
- ↑ "Novelist Razia Butt passes away at 89". The News Tribe. 5 October 2012. Archived from the original on 9 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 October 2012.
- ↑ "Novelist Razia Butt is no more". Dawn.Com. 5 October 2012. பார்க்கப்பட்ட நாள் 21 October 2012.
- ↑ شائستہ جلیل، کراچی (4 October 2012). "مشہور ناول نگار رضیہ بٹ انتقال کرگئیں". Urduvoa.com. பார்க்கப்பட்ட நாள் 21 October 2012.
- ↑ "Novelist Razia Butt dies at 89". The Nation. 5 October 2012. பார்க்கப்பட்ட நாள் 21 October 2012.
- ↑ "Fiction writer Razia Butt dies". Central Asia Online. 5 October 2012. பார்க்கப்பட்ட நாள் 21 October 2012.
வெளி இணைப்புகள்
தொகு- Razia Butt on IMDb