ராகினி

இந்திய நடிகை

ராகிணி (1937-1976), தென்னிந்திய நடிகை, பரதக் கலைஞர். திருவிதாங்கூர் சகோதரிகளில் (லலிதா,பத்மினி) ராகினி இளையவர்.[1] 1950களில் இவர் தம் திரைப்பயணத்தைத் தொடங்கினார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் தம் முத்திரையைப் பதித்தார். தென்னிந்திய நடிகையாக இருந்த போதிலும் மலையாளத்திலும் இந்தி திரைப்படங்களிலும் அதிகம் நடித்துள்ளார்.

ராகினி
ராகிணி ஒரு மலையாளத் திரைப்படத்தில்
பிறப்பு7 ஏப்ரல் 1939
திருவனந்தபுரம், திருவிதாங்கூர்
இறப்பு30 திசம்பர் 1976
சமயம்இந்து
பெற்றோர்தங்கப்பன், சரஸ்வதி
வாழ்க்கைத்
துணை
மாதவன் தம்பி
பிள்ளைகள்லட்சுமி, பிரியா
உறவினர்கள்லலிதா, பத்மினி, சந்திரசேகர்

வாழ்க்கைக் குறிப்புகள்

தொகு

இவர் திருவனந்தபுரத்தில் பூஜாப்புர பகுதியில் பிறந்தார். இவரது பெற்றோர் தங்கப்பன், சரஸ்வதி ஆவர். இவரது மூத்த சகோதரி லலிதா, இரண்டாமவர் பத்மினி இருவரும் புகழ்பெற்ற நாட்டிய நடிகைகள். இவர்கள் திருவிதாங்கூர் சகோதரிகள் என அழைக்கப்பட்டனர். மூவரும் பரதக்கலையை குரு.கோபிநாத், மற்றும் குரு.மகாலிங்கம் பிள்ளையிடம் கற்று நன்கு தேர்ச்சி பெற்றனர். இவர்களது சகோதரர் பெயர் சந்திரசேகர் ஆகும். ராகினி, மாதவன் தம்பி என்பாரை மணந்து கொண்டார். இவர்கட்கு லட்சுமி, பிரியா என இரு மகள்கள் உள்ளனர்.[2]

திரைப்பயணம்

தொகு

இந்தி மொழியில் நாட்டியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திய பெருமை ராகிணி உள்ளிட்ட தென்னிந்திய நடிகைகளையே சாரும்.[3]

இவர் நடித்த திரைப்படங்கள்

தமிழ்த் திரைப்படங்கள்

தொகு

மலையாளத் திரைப்படங்கள்

தொகு
  • ஆலிங்கனம்(1976)......(கதாபத்திரம்:விமலா)
  • லக்‌ஷ்யம்(1972)
  • அரோமலுன்னி(1972)
  • நடன் பிரேமம்(1972)
  • எர்ணாகுளம் ஜங்க்‌ஷன்(1971).....(கதாபாத்திரம்:மாலதி)
  • லங்கா தகனம்(1971) .... (கதாபாத்திரம்:மகேஸ்வரி)
  • பஞ்சவடி காடு(1971)
  • பூம்பட்டா(1971).... (கதாபத்திரம்:சுசீலா)
  • முத்தச்சி(1971)
  • கங்கை சங்கமம்(1971)
  • அச்சன்டே பார்யா(1971) .... (கதாபத்திரம்:தங்கம்மா)
  • அரநாழிகநேரம்.... (கதாபத்திரம்:தீனம்மா)
  • துறக்காத வாதில் (1970).... (கதாபத்திரம்:சுலேகா)
  • ஒதேனன்றே மகன் (1970)
  • சபரிமலை சிறீ தர்ம சாஸ்தா (1970)
  • மணவாட்டி(1964)
  • ஸ்கூல் மாஸ்டர்(1964)..... (கதாபத்திரம்: சரளா)
  • அண்ணா(1964)
  • ஆட்டம் பாம் (1964)
  • காளையும் காமினியும்(1963)
  • சிலம்பொலி (1963)
  • நித்ய கன்யகா (1963)
  • பார்யா (1962)
  • வியார்ப்பின்டே விலா (1962)
  • கால்படுகல் (1962)
  • விதி தன்ன விளக்கு (1962)
  • வேலுதம்பி தலாவா (1962)
  • பாலாட்டு கோமன் (1962)
  • புதிய ஆகாசம் புதிய பூமி (1962) ..... (கதாபத்திரம்: பொன்னம்மா)
  • உண்ணியர்ச்சா (1961)
  • உம்மினி தன்கா(1961) .... (கதாபத்திரம்: ஆனந்தம்)
  • கிருஷ்ண குசேலா(1961)
  • நாயரு பிடிச்ச புலிவால்(1958).... (கதாபத்திரம்: தங்கம்)
  • தச்கரா வீரன் (1957)
  • பிரசன்னா (1950)

இந்தித் திரைப்படங்கள்

தொகு
  • ஜெய் ஜகத் ஜனனி(1976)
  • ஆதி ராத் கே பாத்(1965)
  • யே தில் கிஸ்கோ தூன்(1963)
  • கஹரா தாக்(1963)
  • நாக் ராணி(1963)
  • சிகாரி(1963)
  • ஆய் பிர்சே பாஹர்(1960)
  • கல்பனா(1960)
  • அமர சாஹீத்(1959)
  • அமர தீப்(1958)(1958)
  • முஜ்றிம்(1958)
  • ஸிதாங்கர்(1958)
  • மிஸ்டர் எக்ஸ்(1957)
  • பாயல்(1957)
  • ஃகைதி(1957)

இறப்பு

தொகு

திசம்பர் 30, 1976ஆம் ஆண்டு புற்றுநோயால் காலமானார்.

மேற்சான்றுகள்

தொகு
  1. Pandya, Haresh (2 October 2006). "Padmini Ramachandran, 74, Actress and Dancer". The New York Times. http://query.nytimes.com/gst/fullpage.html?res=980DE2DF1430F931A35753C1A9609C8B63. பார்த்த நாள்: 07-12-2009. 
  2. http://malayalam.webdunia.com/entertainment/film/profile/0712/31/1071231067_1.htm
  3. Gulzar; Nihalani, Govind; Chatterjee, Saibal (2008). Encyclopaedia of Hindi cinema. Encyclopaedia Britannica (India) Pvt. Ltd.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகினி&oldid=2922928" இலிருந்து மீள்விக்கப்பட்டது