ராகேஷ் சர்மா

(ராகேஷ் ஷர்மா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ராகேஷ் சர்மா என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

ராகேஷ் ஷர்மா (Rakesh Sharma, பிறப்பு: சனவரி 13, 1949) விண்வெளியில் பறந்த முதல் இந்தியராவார். இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலா என்னும் ஊரில் பிறந்தவர். ராகேஷ் ஷர்மா விண்வெளிக்குச் சென்ற 128-வது மனிதராவார். இவர், 7 நாள் 21 மணி நேரம் 40 நிமிடங்கள் விண்வெளியில் தங்கியிருந்தார்.

ராக்கேசு சர்மா
Rakesh Sharma
தேசியம்இந்தியர்
நிலைActive
பிறப்பு13 சனவரி 1949 (1949-01-13) (அகவை 75)
பட்டியாலா, பஞ்சாப், இந்தியா
வேறு பணிகள்
இந்திய வான்படையின் சோதனை வானோடி
விண்வெளி நேரம்
7நா 21 40நி
தெரிவு1982
பயணங்கள்சோயுசு T-11 / சோயுசு T-10
திட்டச் சின்னம்
விருதுகள் அசோகச் சக்கர விருது
சோவியத் வீரர்
இராணுவப் பணி
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்திய வான்படை
தரம் விமானச்சிறகத் தலைவர்
துணை(கள்)மது
பிள்ளைகள்இருவர், கார்த்திகா, கபில்

கல்வி

தொகு

பிறந்தது பஞ்சாப் என்றாலும் தனது பள்ளிப் படிப்பை ஐதராபாத்தில் உள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் முடித்தார். அதன்பின்னர் 1966-இல் அவர் தேசிய இராணுவப் பள்ளியில் விமானப் படைப் பிரிவில் மாணவராக சேர்ந்து, படிப்பை முடித்தார்.

விமானப்படை வீரராக

தொகு

இவர் 1970இல் இந்திய விமானப் படையில் பயிற்சி விமானியாக பணியாற்றினார். 1984ஆம் ஆண்டில் விமானப் படைப்பிரிவின் ஒரு குழுவுக்கு ராகேஷ் தலைவராக நியமிக்கப்பட்டார்.

விண்வெளி வீரராக

தொகு

நூற்றுக்கும் மேற்பட்டோர் விண்வெளிப் பயணத்திற்கு விண்ணப்பத்தில் ராகேஷ் 1982ஆம் ஆண்டு செப்தம்பர் 20 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் ஒன்றரை ஆண்டுகள் அவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 2 அன்று அவர் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். அவருடன் ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவரும் சோயுஸ் டி 11 விண்கலத்தில் பயணம் மேற்கொண்டனர். சல்யூட் 7 என்ற விண்வெளி மையத்தில் அவர் தங்கி இருந்தார். அங்கே பல அறிவியல் ஆய்வுகளை இந்தக் குழு மேற்கொண்டது.

விருதுகள்

தொகு

ராகேஷ் சர்மாவுக்கு அவரது பணிகளை பாராட்டி அசோகா சக்ரா விருது கிடைத்தது. சோவியத் ரஷ்யாவின் நாயகன், ஆர்டர் ஆப் தி லெனின் ஆகிய விருதுகளைப் பெற்றார்.[1]

குறிப்புகள்

தொகு
  1. தி இந்து தமிழ், வெற்றிக் கொடி இணைப்பு,13.1.2015
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராகேஷ்_சர்மா&oldid=4018403" இலிருந்து மீள்விக்கப்பட்டது