ராசேந்திர குமார் பச்சோரி
ராசேந்திர குமார் பச்சோரி (Rajendra Kumar Pachauri, பிறப்பு: ஆகஸ்ட் 20, 1940) ஆற்றல் மற்றும் வள மூலங்களுக்கான நிறுவனத்தின் (TERI) தலைமை-நிர்வாகியாகவும், பருவநிலை மாறுதல்களுக்கான பன்னாட்டுக் குழுவின் (IPCC) தலைவராகவும் உள்ளார். மேலும் ஆற்றல் மற்றும் வளமூலங்களுக்கான நிறுவன டெரி பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் உள்ளார்.
ராசேந்திர குமார்பச்சோரி | |
---|---|
பிறப்பு | ஆகத்து 20, 1940 நைனித்தால், உத்தராகண்ட், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | தலைவர், ஐ.பி.சி.சி. |
சமயம் | இந்து |
2007 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, பச்சோரி தலைமை வகிக்கும் IPCC மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் முன்னாள் துணைத்தலைவரான அல் கோருக்கு இணைந்து வழங்கப்பட்டது. சனவரி 2008ஆம் ஆண்டு பதும விபூசண் விருது பெற்றார்.
விருதுகளும் பெருமைகளும்
தொகு- 2000 - ஆயிரவாண்டு முன்னோடி விருது – உலக புதுப்பிக்கவல்ல ஆற்றல் பிணையம்.
- 2006 - "Officier de La Legion d'Honneur", பிரெஞ்சு தூதரிடமிருந்து.
- 2006 - சவகர்லால் நேரு பிறந்த நூற்றாண்டு விருது.
- 20 டிசம்பர் 2007 - ஜப்பான், கியோத்தோவில் உள்ள Ritsumeikan பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம்.
- 2007 - NDTV வழங்கிய உலகளாவிய இந்தியர் விருது.
- 2007 - அமைதிக்கான நோபல் பரிசு IPCC மற்றும் அல் கோர் ஆகியோருக்கு.
- 2008 - பத்ம விபூசண்.
- 26 மே 2008 - அமெரிக்காவிலுள்ள யேல் பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம்.
- 6 சூன் 2008 - IIFA Global Leadership Awar.
- 17 சூலை 2008 - கிழக்கு ஆங்லியா பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம்.