ரேச்சேல் கார்சன்

(ராச்சேல் கார்சன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ராச்சல் லூயி கார்சன் ( Rachel Louise Carson) (மே 27, 1907 – ஏப்ரல் 14, 1964) ஓர் அமெரிக்க கடல்சார் உயிரியலாளர் மற்றும் உலகின் சுற்றுச்சூழல் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல உதவிய இயற்கை குறித்த எழுத்தாளர்.

ராச்சல் கார்சன்
ராச்சல் கார்சன், 1940 ஐக்கிய அமெரிக்காவின் மீன் மற்றும் வனவாழ்வுயிர் சேவை அதிகாரியாக ஒளிப்படம்
ராச்சல் கார்சன், 1940
ஐக்கிய அமெரிக்காவின் மீன் மற்றும் வனவாழ்வுயிர் சேவை அதிகாரியாக ஒளிப்படம்
பிறப்புரேச்சேல் லூயி கார்சன்
(1907-05-27)மே 27, 1907
இசுபிரிங்டேல், பென்சில்வேனியா, ஐக்கிய அமெரிக்கா
இறப்புஏப்ரல் 14, 1964(1964-04-14) (அகவை 56)
சில்வர் இசுபிரிங், மேரிலாந்து, ஐக்கிய அமெரிக்கா
தொழில்கடல்சார் உயிரியலாளர், எழுத்தாளர்
தேசியம்அமெரிக்கர்
காலம்1937–1964
வகைஇயற்கை எழுத்தாளர்
கருப்பொருள்கடல்சார் உயிரியல், சூழ்நிலையியல், பூச்சிக்கொல்லிகள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்சைலண்ட் இசுபிரிங் (Silent Spring)

கார்சன் ஐக்கிய அமெரிக்க நாட்டின் மீன் மற்றும் வனவாழ்வுயிர் சேவையில் உயிரியலாளராக தமது பணிவாழ்வைத் தொடங்கினார். 1950களில் முழுநேர இயற்கை எழுத்தாளராக மாறினார். 1951ஆம் ஆண்டு வெளியான அவரது புத்தகம் த சீ அரௌண்ட் அஸ் (The Sea Around Us)-நம்மைச் சுற்றியுள்ள கடல், அவருக்கு புகழையும் பணத்தையும் பெற்றுத் தந்தது. பிறவி எழுத்தாளராக காணப்பட்ட அவரது அடுத்த நூல், அண்டர் த சீவின்ட் - கடற்காற்றின் கீழேயும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நூல்கள் கடல்வாழ் உயிரினங்கள்,கடற்கரையிலிருந்து மேற்கடல்,ஆழ்கடல் வரை, பற்றிய தகவல்களை ஆராய்ந்தது.

1950களில் கார்சன் இயற்கை பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் குறித்தும் செயற்கை பூச்சிக்கொல்லிகளின் தீந்தாக்கம் குறித்தும் கவனம் செலுத்தலானார். இதன் அடிப்படையில் அவர் எழுதிய சைலண்ட் இசுபிரிங் - மௌன வசந்தம் என்ற நூல் அமெரிக்கர்களிடம் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இதனால் தேசிய பூச்சிக்கொல்லிகள் குறித்த கொள்கைகள் மீளாய்வு செய்யப்பட்டு டி.டி.டீயும் பிற பூச்சிக்கொல்லிகளும் தடை செய்யப்பட்டன. மேலும் இந்நூலின் தாக்கத்தால் ஐக்கிய அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை ஏற்படுத்தப்பட்டது.

குடியரசுத் தலைவர் ஜிம்மி கார்டர் விடுதலைக்கான குடியரசுத் தலைவர் பதக்கத்தை மறைவிற்குப் பிறகு அவருக்கு வழங்கினார்.

வாழ்க்கை மற்றும் பணி

தொகு

இளமையும் கல்வியும்

தொகு

ரேச்சேல் கார்சன் அவர்கள் ஐக்கிய அமெரிக்க மாநிலமான பென்சில்வேனியாவில், ஸ்பிரிங்டேல் (Springdale) எனும் இடத்தில் 1907 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி ஒரு விவசாயக்குடும்பத்தில் பிறந்தார்.[1] இவர் பிட்ஸ்பர்கின் அருகிலுள்ள அல்லேக்கேனி நதிக்கு (Allegheny River) அண்மித்த இடத்திலேயே இவர்களது குடும்பம் வாழ்வாதாரம் செய்தது. கார்சன் சிறுவயதிலேயே வாசிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தார், வாசிப்பதை பெரிதும் விரும்பினார். அதுமட்டுமன்றி கார்சன் இளம் வயதிலேயே ஒரு திறமையான எழுத்தாளராகக் காணப்பட்டார்.

கார்சன் தனது 65 ஏக்கர் வயலை ஆய்வு செய்வதிலேயே அதிக நேரத்தை செலவழித்தார். அவர் எட்டு வயதிலேயே மிருகங்களுடன் சம்பந்தப்பட்ட சிறு சிறு கதைகளையெல்லாம் எழுதியுள்ளார், அத்துடன் அவருடைய முதல் கதை அவர் பதினொருவயதில் இருக்கும் போதே வெளியிடப்பட்டது. கார்சன் தனது முதல் கதை வெளிவந்த St. Nicholas எனும் சஞ்சிகையை விரும்பி வாசிக்கத் தொடங்கினார். கார்சன் உயர் பள்ளியில் நாற்பத்து நான்கு மாணவர்களிலும் முதல் இடம் வகித்து பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

அவர் பெண்களுக்கான பென்சில்வேனியாப் பல்கலைகழகத்தில் ஆங்கிலத்தைத்தான் கற்றார், எனினும் அவருடைய விருப்பமான பாடமான உயிரியலை கறக விரும்பி 1928 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் உயிரியலுக்கு மாறினார். பள்ளி மாணவர்களுக்கான பத்திரிகையில் தனது ஆக்கங்களையும் வெளியிட்டார். இவ்வாறு அவரது கல்வி வாழ்க்கை முடிந்தது.

உயிரியலாளராக தொழில் செய்யும் போது

தொகு

கார்சன் கல்வி கற்ற உயர்பள்ளியில் உயிரியல் பாடம் கற்பித்த ஆசிரியரின் உதவியுடன் அமெரிக்கக் கடற்றொழில் பணியகத்தில் பகுதி நேர வேலையில் ஈடுபட்டார். இங்கு இவர் கல்வியோடு சம்பந்தப்பட்ட விடயங்கை ஒலிபரப்பும் வானொலி நிலையத்தில் Romance Under the Waters எனும் ஒரு கட்டுரையை வெளியிட்டார். அது ஒரு வருடத்தில் ஒவ்வொரு வாரமும் ஏழு நிமிட நிகழ்ச்சியாக ஓடியது. அந்நிகழ்ச்சி நீர்நிலை வாழ்வைப்பற்றியதாகும். (மீன்களைப் பற்றிய). அந்நிகழ்ச்சியை கார்சன் அவர்கள் மக்கள் மத்தியில் மீன்களைப் பற்றிய அறிவை கூட்டவேண்டும் எனும் நோக்கிலேயே வெளியிட்டார். அமெரிக்கக் கடற்றொழில் பணியகத்தில் கார்சன் செய்யும் வேலையை முன்னிருந்தவர்களால் அவ்வளவு நன்றாகச் செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் marine life in the Chesapeake Bay எனும் தலைப்பில் கட்டுரைகளை உள்ளூர் பத்திரிகைகளுக்கும் இதழ்களுக்கும் வழங்கினார்.

கார்சன் தொழில் புரிந்த அமெரிக்கக் கடற்றொழில் பணியகத்தின் தலைவர் கர்சனின் சேவையை எண்ணி வியந்தார், பின்பு கடற்றொழில் பணியகத்தைப்பற்றிய ஒரு அறிமுகக் கையேடு ஒன்றை வெளியிடுமாறு கோரினார். அத்துடன் கார்சனும் முழு நேர வேலையையும் செய்ய அனுமதித்தார். அவர் சிவில் சேவைத் தேர்வை மற்றைய விண்ணப்பதாரர்களை விட அதிக புள்ளிகளைப் பெற்றார். 1936 ஆம் ஆண்டில் அவர் அமெரிக்கக் கடற்றொழில் பணியகத்தில் முழுநேர வேலைக்கு அனுமதிக்கப்படும் இரண்டாவது பெண்மணியானார். இவ்வாறாக கார்சன் 15 வருடங்கள் அமெரிக்கக் கடற்றொழில் பணியகத்தில் பணிபுரிந்தார்.

இறப்பு

தொகு

கார்சன் 56 ஆம் வயதில் 1964 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதினான்காம் திகதி மார்பகப் புற்றுநோயால் இறந்தார்.

படைப்புகளின் பட்டியல்

தொகு

உசாத்துணை

தொகு
  1. Cullen, Katherine E. 2009 Infobase Publishing Encyclopedia of Life Science page 151

வெளியிணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Rachel Carson
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேச்சேல்_கார்சன்&oldid=3361935" இலிருந்து மீள்விக்கப்பட்டது