ராஜா மூடா அசீஸ் சாலை 2A
ராஜா மூடா அசீஸ் சாலை அல்லது கூட்டரசு சாலை 2, 2A, 2B (ஆங்கிலம்: Persiaran Raja Muda Musa அல்லது Federal Route 2, 2A and 2B; மலாய்: Persiaran Raja Muda Musa) என்பது மலேசியா, சிலாங்கூர், கிள்ளான் பகுதியில் உள்ள ஒரு முக்கிய நெடுஞ்சாலை ஆகும். இந்தச் சாலை கிள்ளான் நகரையும் கிள்ளான் துறைமுகம் நகரப் பகுதியையும் இணைக்கிறது.
கூட்டரசு சாலை 2, 2A and 2B | |
---|---|
ராஜா மூடா அசீஸ் சாலை | |
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 18 km (11 mi) : 19.4 km (12.1 mi) : 8.4 km (5.2 mi) |
பயன்பாட்டு காலம்: | 1965 – |
வரலாறு: | கட்டி முடிக்கப்பட்டது 1967 |
முக்கிய சந்திப்புகள் | |
மேற்கு முடிவு: | கிள்ளான் துறைமுகம் |
நார்த்போர்ட் நெடுஞ்சாலை வடக்கு தெற்கு துறைமுக இணைப்பு கிம் சுவான் சாலை கிள்ளான் பந்திங் நெடுஞ்சாலை கோத்தா பாலம் | |
கிழக்கு முடிவு: | கிள்ளான் |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | பண்டமாரான் நார்த்போர்ட் தென்புள்ளி வெஸ்ட்போர்ட் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
கிள்ளான் துறைமுகம் நகரப் பகுதிக்குச் செல்லும் முக்கியப் பாதையாகவும் உள்ளது. சிலாங்கூர் சுல்தான் சர் அலாதீன் சுலைமான் ஷாவின் (Sultan Sir Alaeddin Sulaiman Shah of Selangor) தந்தை ராஜா மூடா மூசாவின் (Raja Muda Musa) நினைவாக இந்த நெடுஞ்சாலைக்குப் பெயரிடப்பட்டது.
பின்னணி
தொகுராஜா மூடா அசீஸ் 2A; 2B சாலைகளின் தொடக்கப் புள்ளிகள் கிள்ளான் துறைமுகம் நகரத்தில் அமைந்துள்ளன. இந்த ராஜா மூடா அசீஸ் சாலை; கூட்டரசு சாலை (Lebuhraya Persekutuan) மற்றும் கெசாஸ் (KESAS) சாலைகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளது.