ராஜ்சமந்து

ராஜ்சமந்து (Rajsamand) இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் ராஜ்சமந்து மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் 17-ஆம் நூற்றாண்டில் மேவார் மன்னர் ராணா இராஜ் சிங் நிறுவிய ராஜ்சமந்து செயற்கை ஏரியால் அறியப்படுகிறது.

ராஜ்சமந்து
நகரம்
ராஜ்சமந்து is located in இராசத்தான்
ராஜ்சமந்து
ராஜ்சமந்து
இந்தியாவின் இராஜஸ்தன் மாநிலத்தில் ராஜ்சமந்து நகரத்தின் அமைவிடம்
ராஜ்சமந்து is located in இந்தியா
ராஜ்சமந்து
ராஜ்சமந்து
ராஜ்சமந்து (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°04′N 73°53′E / 25.07°N 73.88°E / 25.07; 73.88
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்ராஜ்சமந்து
தோற்றுவித்தவர்ராணா இராஜ் சிங்
பெயர்ச்சூட்டுராணா இராஜ் சிங்
ஏற்றம்547 m (1,795 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்67,798
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுRJ-30
இணையதளம்rajsamand.rajasthan.gov.in

புவியியல் தொகு

ராஜ்சமந்து நகரம் 25°04′N 73°53′E / 25.07°N 73.88°E / 25.07; 73.88 பாகையில், கடல் மட்டத்திலிருந்து 547 மீட்டர் (1749 அடி) உயரத்தில் அமைந்துள்ள்து.[2]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 36 வார்டுகளும், 13,765 வீடுகளும் கொண்ட ராஜ்சமந்து நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 67,798 ஆகும். அதில் ஆண்கள் 35,033 மற்றும் பெண்கள் 32,765 ஆக உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 8121 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 935 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 84.22 % ஆகும். மக்கள் தொகையில் இந்துக்கள் 84.17%, இசுலாமியர் 9.54%, சமணர்கள் 5.63% மற்றவர்கள் 0.66% ஆகவுள்ளனர். [3]

பொருளாதாரம் தொகு

ராஜ்சமந்து நகரத்தில் பளிங்கு மற்றும் பிற விலைமதிப்பற்ற கற்களை நாடு முழுவதும் விற்பனை செய்யும் வணிக நிறுவனங்களைக் கொண்டுள்ளது. மேலும் இங்கு துத்தநகம் வெள்ளி, மங்கனீசு போன்ற கனிமச் சுரங்கங்கள் உள்ளது.

சுற்றுலா தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Census of India Search details". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.
  2. Falling Rain Genomics, Inc - Rajsamand
  3. Rajsamand Population Census 2011

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜ்சமந்து&oldid=3618055" இலிருந்து மீள்விக்கப்பட்டது