ராணி சென்னம்மா விரைவுவண்டி

ராணி சென்னம்மா விரைவுவண்டி, இந்திய இரயில்வேயின் தென்மேற்கு தொடருந்து மண்டலத்தில் இயக்கப்படும் ஒரு விரைவுத்தொடர்வண்டி. கருநாடகத்தின் பெங்களூர் மற்றும் மகாராஷ்டிராவின் கோலாப்பூர் நகரங்களுக்கிடையே நாள்தோறும் இயக்கப்படும் இத்தொடர்வண்டி பெளகாவி, லோண்டா, ஹுப்பள்ளி, ஆவேரி, தாவண்கரே, பீருர், அர்சிகெரே, தும்கூர் உள்ளிட்ட நகரங்களினூடாகப் பயணிக்கின்றது.

ராணி சென்னம்மா விரைவுத்தொடர்வண்டி
கண்ணோட்டம்
வகைவிரைவுத்தொடர்வண்டி
நிகழ்நிலைபயன்பாட்டிலுள்ளது
நடத்துனர்(கள்)தென்மேற்கு தொடருந்து மண்டலம் (இந்தியா)
வழி
தொடக்கம்பெங்களூர் (SBC)
இடைநிறுத்தங்கள்29
முடிவுகோலாப்பூர் (CSMT)
ஓடும் தூரம்796 கி.மீ
சராசரி பயண நேரம்16 மணி 25 நிமி (மேலாக), 16 மணி 40 நிமி (கீழாக)
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
தொடருந்தின் இலக்கம்16589/16590
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)குளிர்பதன முதல்வகுப்பு, குளிர்பதன இருவரிசை, குளிர்பதன மூவரிசை, துயிலுறை வசதி வகுப்பு, ஒதுக்கப்பெறாதது
இருக்கை வசதிஉள்ளது
படுக்கை வசதிஉள்ளது
உணவு வசதிகள்இல்லை
சுமைதாங்கி வசதிகள்உள்ளது
தொழில்நுட்பத் தரவுகள்
பாதைஅகலப் பாதை
வேகம்மணிக்கு 47 கி.மீ

கிட்டூரைத் தலைமையிடமாகக் கொண்டு வடக்கு கருநாடகத்தின் பெரும்பகுதியை ஆண்ட ராணி சென்னம்மாவின் பெயரால் வழங்கப்படும் இத்தொடர்வண்டி ஏறத்தாழ பதினாறரை மணி நேரத்தில் 796 கி.மீ தொலைவைக் கடக்கிறது.

சான்றுகள் தொகு