ரானேபென்னூர்
ரனேபென்னுரு அல்லது ராணிபென்னுரு (Ranebennuru), தென்னிந்தியாவில் உள்ள கர்நாடகம் மாநிலத்தில் உள்ள ஆவேரி மாவட்டத்தில் உள்ள ரனேபென்னரு தாலுகாவின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்நகரம் மாவட்டத் தலைமையிடமான ஆவேரிக்கு தென்கிழக்கில் 33.7 கிலோ மீட்டர் தொலைவிலும்; பெங்களூரு நகரத்திற்கு வடமேற்கே 303.9 கிலோ மீட்டர் தொலைவிலும்; மங்களூருவிற்கு வடகிழக்கே 276.3 கிலோ மீட்டர் தொலைவிலும்; ஹூப்ளிக்கு தென்கிழக்கில் 110.2 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரம் கடல்மட்டத்திலிருந்து 605 மீட்டர் உயரத்தில் உள்ளது. ரானேபென்னரு தாலுகாவில் புல்வாய் மான்கள் சரணாலயம் உள்ளது.[2] ரானேபென்னரு தாலுகாவில் பருத்தி மற்றும் சோளம் அதிகம் விளைவிக்கப்படுகிறது.
ரானேபென்னூரு | |
---|---|
நகரம் | |
ராணிபென்னூரு | |
அடைபெயர்(கள்): பருத்தி நகரம் | |
ஆள்கூறுகள்: 14°37′00″N 75°37′00″E / 14.6167°N 75.6167°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | வார்ப்புரு:நாட்டுத் தகவல் Karnataka கர்நாடகம் |
மாவட்டம் | ஆவேரி |
பரப்பளவு | |
• மொத்தம் | 42.32 km2 (16.34 sq mi) |
ஏற்றம் | 604 m (1,982 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மொத்தம் | 1,06,365 |
• அடர்த்தி | 2,117.63/km2 (5,484.6/sq mi) |
மொழி | |
• அலுவல் மொழி | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 581115 |
தொலைபேசி குறியீடு எண் | 08373 |
வாகனப் பதிவு | KA-68 |
இணையதளம் | www |
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 31 வார்டுகளும், 21,871 வீடுகளும் கொண்ட ரனேபென்னூரு நகரத்தின் மக்கள் தொகை 1,06,406 ஆகும். அதில் ஆண்கள் 54,040 மற்றும் பெண்கள் 52,366 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 969 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 86% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,079 மற்றும் 3,821 ஆகவுள்ளனர்.
இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 71.21%, இசுலாமியர் 26.93%, சமணர்கள் 0.85, கிறித்தவர்கள் 0.67% மற்றும் பிறர் 0.33% ஆகவுள்ளனர்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Cities having population 1 lakh and above" (PDF). censusindia. The Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 17 October 2011.
- ↑ Ranibennur Blackbuck Sanctuary
- ↑ Ranibennur Population, Religion, Caste, Working Data Haveri, Karnataka - Census 2011