ராபர்ட் ஏ. ஐன்லைன்

(ராபர்ட் ஏ. ஹைன்லைன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ராபர்ட் ஏ. ஐன்லைன் அல்லது ராபர்ட் ஏ. ஹைன்லைன் (Robert A. Heinlein, ஜூலை 7, 1907 – மே 8, 1988) ஒரு அமெரிக்க ஆங்கில அறிபுனை எழுத்தாளர். அறிபுனை இலக்கியத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுபவர். இருபதாம் நூற்றாண்டின் அறிபுனை எழுத்தாளர்களும் மிகவும் பிரபலமானவர், அடுத்த தலைமுறை எழுத்தாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஆனால் அதே சமயம் பெரும் சர்ச்சைகளிலும் சிக்கியவர். ஆங்கில இலக்கிய உலகின் விளிம்பில் ஒரு குறிப்பிட்ட வாசகர் வட்டத்தில் மட்டும் வாசிக்கப்பட்டு வந்த அறிபுனை இலக்கியத்தை இலக்கிய மையத்துக்கு அழைத்து வந்த முன்னோடிகளுள் இவரும் ஒருவர். இவர் ஆங்கில அறிபுனை பாணியின் முப்பெரும் எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார். (மற்ற இருவர் - ஆர்தர் சி. கிளார்க்கும், ஐசாக் அசிமோவும்).

ராபர்ட் ஏ. ஐன்லைன்
1976ல் ஐன்லைன்
1976ல் ஐன்லைன்
பிறப்பு(1907-07-07)சூலை 7, 1907
பட்லர், மிசோரி, அமெரிக்கா
இறப்புமே 8, 1988(1988-05-08) (அகவை 80)
கார்மல், கலிபோர்னியா, அமெரிக்கா
புனைபெயர்ஆன்சன் மக்டோனால்ட், லைல் மன்ரோ, ஜான் ரிவர்சைட், காலெப் சாண்டர்ஸ், சைமன் யார்க்
தொழில்எழுத்தாளர்
வகைஅறிபுனை, கனவுருப்புனைவு

ஐன்லைன் தனது அறிபுனைப் படைப்புகளில் பல சமூகம், அரசியல் சார்ந்த விஷயங்களையும் விரிவாக அலசியுள்ளார். இவரது படைப்புகள் பெரும்பாலும் தனிமனித சுதந்திரம், தன்னிறைவு போன்ற கருத்துகளை முன்வைக்கின்றன. இவரது படைப்புகளில் ராணுவ ஆட்சி முறையையும், பாசிசத்தையும் சமூகத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வுகளாக முன்வைக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. அறிபுனை எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுள் மிக உயரியதான ஹூகோ விருது இவருக்கு நான்கு முறை வழங்கப்பட்டுள்ளது. வெளியாகி ஐம்பது வருடங்களாகியும் இவரது புத்தகங்கள் அறிபுனை வாசகர்களிடம் இன்றும் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளன.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_ஏ._ஐன்லைன்&oldid=2917207" இலிருந்து மீள்விக்கப்பட்டது