ராபர்ட் பாட்டின்சன்

ராபர்ட் டக்ளஸ் தாமஸ் பாட்டின்சன் (ஆங்கில மொழி: Robert Douglas Thomas Pattinson)[2][3] (பிறப்பு: 13 மே 1986) என்பவர் இங்கிலாந்து நாட்டு நடிகர் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு முதல் பெரிய பெருச்செலவு மற்றும் சுயாதீன திரைப்படங்களில் நடித்ததன் மூலம், உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களின் பட்டியியலில் இடம்பிடித்துள்ளார். அத்துடன் 2010 ஆம் ஆண்டில், டைம் பத்திரிகை அவரை உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக பெயரிட்டது, மேலும் அவர் ஃபோர்ப்ஸ் பிரபலங்கள் 100 பட்டியலில் இடம்பெற்றார்.

ராபர்ட் பாட்டின்சன்
MJK 08781 Robert Pattinson (Damsel, Berlinale 2018).jpg
பிறப்புராபர்ட் டக்ளஸ் தாமஸ் பாட்டின்சன்
13 மே 1986 (1986-05-13) (அகவை 36)
இலண்டன், இங்கிலாந்து
பணி
செயற்பாட்டுக்
காலம்
2004–இன்று வரை
உறவினர்கள்லிஸி பாட்டின்சன் (சகோதரி)[1]

இவர் தனது 15 வயதில் லண்டன் தியேட்டர் கிளப்பில் நடிக்கத் தொடங்கிய பிறகு, ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (2005) என்ற கற்பனைத் திரைப்படத்தில் செட்ரிக் டிகோரியாக நடித்ததன் மூலம் பாட்டின்சன் தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். அதை தொடர்ந்து தி ட்விலைட் சாகா திரைப்படத் தொடரில் (2008-2012) எட்வர்டு கலென் என்ற கதாபாத்திரத்தை சித்தரித்ததற்காக அவர் உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றார். இந்த திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் $3.3 பில்லியனுக்கு மேல் வசூலித்தது. அதை தொடர்ந்து குட் டைம் (2017) மற்றும் டெனெட்டு (2020) போன்ற பல திரைப்படங்களில்.நடித்துள்ளார். மேலும் 2022 ஆம் ஆண்டு வெளியான தி பேட்மேன் என்ற டிசி வரைகதை மீநாயகன் திரைப்படத்தில் பேட்மேன் என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இவர் நடிப்பைத் தவிர, மாதிரி நடிகராகவும் மற்றும் இசை கலைஞராகவும் உள்ளார். அத்துடன் கோ பிரச்சாரம் உட்பட பல தொண்டு நிறுவனங்களை ஆதரிக்கிறார் மற்றும் 2013 முதல் டியோர் ஹோம் என்ற வாசனையின் முகமாக இருந்து வருகிறார்.

ஆரம்பகால வாழ்க்கைதொகு

ராபர்ட் பாட்டின்சன் மே 13, 1986 ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டில் லண்டனில்[4][5] சாரணர் கிளேர் (சார்ல்டன்) மற்றும் விண்டேஜ் கார் டீலர் ரிச்சர்ட் பாட்டின்சன் ஆகியோரின் மூன்று குழந்தைகளில் இளையவரான பாட்டின்சன் பிறந்தார். இவரது தாயார் கிளேர் ஒரு மாதிரி நிறுவனத்தில் பணிபுரிந்தார், தந்தையான ரிச்சர்ட் அமெரிக்காவிலிருந்து வின்டேஜ் கார்களை இறக்குமதி செய்கிறார்.[6] இவர் எலிசபெத் (லிஸி) மற்றும் விக்டோரியா ஆகிய இரு மூத்த சகோதரிகளுடன் பார்ன்ஸில் உள்ள ஒரு சிறிய வீட்டில் வளர்ந்தார்.[7]

தொழில் வாழ்க்கைதொகு

விளம்பர நடிகர்தொகு

பாட்டின்சன் தனக்கு பனிரெண்டு வயதாகும்போது வடிவழகர் பணியில் சேர்ந்தார், ஆனால் இது நான்கு வருடங்களுக்குள்ளாகவே முடிவடைந்தது. அத்துடன் இவர் தான் ஒரு ஆண்மகன் தோற்றமுள்ள வடிவழகராக பணியாற்றத் தவறிவிட்டதாக அவர் தன்னை குற்றம்சாட்டிக்கொண்டார்.

2008 ஆம் ஆண்டில் பாட்டின்சன் இவ்வாறு விளக்கமளித்தார் "நான் முதன்முறையாக தொடங்கியபோது நான் அதிக உயரமாகவும் பெண்ணைப்போன்றும் தோன்றினேன், அதனால் எனக்கு நிறைய வேலைகள் கிடைத்தன, ஏனென்றால் அந்த காலகட்டத்தில் ஆண் போன்றும் பெண் போன்றும் தோன்றுவது சாதாரணமாக இருந்தது. பின்னர்தான் நான் ஒரு ஆணைப் போல் தோன்ற ஆரம்பித்தேன் என்று நினைக்கிறேன், இதனால் எனக்கு வேலையே கிடைக்கவில்லை. எனக்கு மிக வெற்றிகரமான மாடலிங் வாழ்க்கை அமையவில்லை என்றார்".

நடிப்புதொகு

இவர் 2004 ஆம் ஆண்டு வேனிட்டி ஃபேர் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதை தொடர்ந்து ஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (2005),[8] தி ஹாண்டட் ஏர்மேன் (2006), ட்விலைட் (2008),[9] தி ட்விலைட் சாகா: நியூ மூன் (2009),[10] தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ் (2010), தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1 (2011),[11] தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 (2012), குட் டைம் (2017) மற்றும் டெனெட்டு (2020), தி பேட்மேன் (2022)[12][13][14] உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சொந்த வாழ்க்கைதொகு

கிளாமர் நடத்திய வாக்கெடுப்பின் மூலம் அவர் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டின் மிகவும் கவர்ச்சிகரமான ஆண் என்று பீப்பிள் பத்திரிக்கையால் அறிவிக்கப்பட்டது.

மேற்கோள்கள்தொகு

  1. "Robert Pattinson: 6 Things You Need To Know About The Next Batman Actor". Cinemablend. 4 March 2020. 28 September 2020 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Getting to know the "Twilight" actors". Newsday. 2008. 20 November 2011 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 3 May 2008 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Robert Pattinson Biography". The Biography Channel UK. The Biography Channel.A&E Television Networks and Disney-ABC Television Group. 5 July 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 21 May 2013 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Monitor". Entertainment Weekly (1207): p. 29. 18 May 2012. 
  5. "Robert Pattinson". People. http://www.people.com/people/robert_pattinson. 
  6. Paul Stenning (2010). The Robert Pattinson Album. Plexus. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0859654388. https://archive.org/details/robertpattinsona0000sten. 
  7. Tibbetts, Graham (2 December 2008). "Profile of Twilight star Robert Pattinson" (in en-GB). Daily Telegraph. https://www.telegraph.co.uk/news/celebritynews/3541846/Profile-of-Twilight-star-Robert-Pattinson.html. 
  8. Sona Charaipotra (14 November 2008). "A Night Out With Robert Pattinson". The New York Times. https://www.nytimes.com/2008/11/16/fashion/16nite.html?_r=1&ref=movies. 
  9. "Before the Spotlight, Twilight's Robert Pattinson Was Intimidated by "Perfect" Role". TV Guide. 21 November 2008. 22 January 2009 அன்று மூலம் பரணிடப்பட்டது. 26 November 2008 அன்று பார்க்கப்பட்டது.
  10. "The Twilight Saga: New Moon Box Office". Box Office Mojo. https://www.boxofficemojo.com/movies/?id=newmoon.htm. 
  11. "The Twilight Saga: Breaking Dawn Part 1 Box Office". Box Office Mojo. 12 July 2013 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 21 April 2012 அன்று பார்க்கப்பட்டது.
  12. Kroll, Justin (16 May 2019). "Robert Pattinson to Play 'The Batman' for Matt Reeves and Warner Bros. (EXCLUSIVE)". Variety. 17 May 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 17 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  13. Galuppo, Mia; Kit, Borys (16 May 2019). "Robert Pattinson Frontrunner to Play Batman in Matt Reeves's DC Movie". The Hollywood Reporter. 17 May 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 17 May 2019 அன்று பார்க்கப்பட்டது.
  14. McNary, Dave (31 May 2019). "Robert Pattinson Is Officially 'The Batman'". Variety. 31 May 2019 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 31 May 2019 அன்று பார்க்கப்பட்டது.

வெளிப்புற இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராபர்ட்_பாட்டின்சன்&oldid=3431598" இருந்து மீள்விக்கப்பட்டது