தி ட்விலைட் சாகா (திரைப்படத் தொடர்)

தி ட்விலைட் சாகா என்பது அமெரிக்க எழுத்தாளர் ஸ்டீபனி மேயரின் நான்கு நாவல்களை அடிப்படையாகக் கொண்டு சும்மிட் என்டேர்டைன்மென்ட் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட ஐந்து காதல் கனவுருப்புனைவுத் திரைப்படங்களின் தொடர் ஆகும். இந்த திரைப்படத்தொடரில் கிறிஸ்டென் ஸ்டீவர்ட், ராபர்ட் பாட்டின்சன் மற்றும் டெய்லர் லாட்னர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்தத் தொடர் உலகலாவிய ரீதியாக 3 3.3 பில்லியனுக்கு அதிகமாக வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தி ட்விலைட் சாகா
இயக்கம்கேத்தரின் ஹார்ட்விக் (1)
கிறிஸ் வீட்ஸ் (2)
டேவிட் ஸ்லேட் (3)
பில் காண்டன் (4–5)
தயாரிப்புவிக் காட்ஃப்ரே (1–5)
மார்க் மோர்கன் (1)
கிரெக் மூராடியன் (1)
கரேன் ரோசன்பெல்ட் (2–5)
ஸ்டீபனி மேயர் (4–5)
மூலக்கதைட்விலைட்
ஸ்டீபனி மேயர்
திரைக்கதைமெலிசா ரோசன்பெர்க் (1–5)
இசைகார்ட்டர் பர்வெல் (1, 4–5)
அலெக்ஸாண்ட்ரே டெஸ்ப்ளாட்(2)
ஹோவர்ட் ஷோர் (3)
நடிப்பு
ஒளிப்பதிவுஎலியட் டேவிஸ் (1)
ஜேவியர் அகுயிரேசரோப் (2–3)
கில்லர்மோ நவரோ (4–5)
படத்தொகுப்புநான்சி ரிச்சர்ட்சன் (1, 3)
பீட்டர் லம்பேர்ட் (2)
ஆர்ட் ஜோன்ஸ் (3)
வர்ஜீனியா காட்ஸ் (4–5)
இயன் ஸ்லேட்டர் (5)
கலையகம்டெம்பில் ஹில் என்டேர்டைன்மெண்ட் (1–5)
மேவரிக் பிலிம்ஸ் (1, 3)
இம்ப்ரின்ட் என்டேர்டைன்மெண்ட்
(1–3)
சன்ஸ்வெப் என்டர்டெயின்மென்ட் (2–5)
விநியோகம்சும்மிட் என்டேர்டைன்மென்ட் (1–5)
வெளியீடு2008–2012
ஓட்டம்607 நிமிடங்கள் (1–5, ஒருங்கிணைந்த நாடக வெட்டுக்கள்)
634 நிமிடங்கள் (1–5, ஒருங்கிணைந்த நீட்டிக்கப்பட்ட பதிப்புகள்)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுமொத்தம் (5 திரைப்படங்கள்):
$385 மில்லியன்
மொத்த வருவாய்மொத்தம் (5 திரைப்படங்கள்):
$3.346 மில்லியன்

இந்த திரைப்படத்தின் பதிப்புரிமை 2004 முதல் பாரமவுண்ட் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்திடம் இருத்தது.[1][2] மற்றும் இந்த திரைத்தொடரின் கதை டுவிலைட் நாவலிலிருந்து கணிசமான வேறுபாடுகளுடன் எழுதபப்ட்டது. மூன்று வருடங்கள் கழித்து இதன் பதிப்புரிமையை சும்மிட் என்டேர்டைன்மென்ட் என்ற நிறுவனம் கைப்பற்றியது.[3] இந்த திரைப்படத்தின் முதல் தொடரின் முதல் வசூல் $35.7 மில்லியன் ஆகும்.

முதல் பாகமான டுவிலைட் என்ற திரைப்படம் நவம்பர் 21, 2008 ஆம் ஆண்டில் வெளியானது.[4] இரண்டாம் பாகம் தி டுவிலைட் சாகா: நியூ மூன் நவம்பர் 20, 2009 இல் வெளியாகி முதல் நாள் $72.7 மில்லியன் வசூல் செய்து சாதனை படைத்தது.[5] மூன்றாம் பாகமான தி டுவிலைட் சாகா: எக்லிப்ஸ் ஜூன் 30, 2010 இல் வெளியானது மற்றும் ஐமாக்ஸ் இல் வெளியான முதல் டுவிலைட் திரைப்படமும் இதுவாகும்.[6][7] இதன் நான்காம் பாகம் பகுதி 1 மற்றும் பகுதி 2 என்ற வடிவில் தி டுவிலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1 என்ற முதல் பகுதி நவம்பர் 18, 2011ஆம் ஆண்டில் மற்றும் இரண்டாம் பகுதி தி டுவிலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 என்ற திரைப்படம் நவம்பர் 16, 2012 இல் வெளியானது.

நடிகர்கள் தொகு

திரைப்படங்கள் தொகு

டுவிலைட் (2008) தொகு

டுவிலைட் திரைப்படத்தை கேத்தரின் ஹார்ட்விக் என்பவர் இயக்க, மெலிசா ரோசன்பெர்க் என்பவர் எழுதியிருந்தார். பதினேழு வயதான இளம்பெண் “பெல்லா” என்ற மனித இனப்பெண்ணும். 108 வயதான எட்வர்டு கலென் என்ற காட்டேரி இணைப் பையனும் ஒன்றாக கல்லுரியில் படிக்கும் போது இருவரும் காதல் வசப்படுகின்றனர். ஆனால் பெல்லாவுக்கு எட்வர்டின் நடவடிக்கை மீது சந்தேகம் வர தொடர்ந்து இதனை வெகுநாள் ஆராய்ச்சி செய்த பின் கடைசியாக, எட்வர்டு ஒரு ரத்தக் காட்டேரி என்பதையும், ஆனாலும் அவன் மிருக ரத்தத்தை மட்டுமே அருந்துகிறான் என்பதையும் பெல்லா கண்டுபிடிக்கிறாள். கடைசியில் எட்வர்டு தனது காட்டேரி குடும்பத்தாரிடம் அறிமுகம் செய்து வைக்கிறான். நாடோடி காட்டேரியான ஜேம்ஸ், ஒரு மனிதப் பெண்ணை எட்வர்டு ஏன் பாதுகாக்கிறான் என்பதில் குழப்பமடைகிறான். பெல்லாவை வேட்டையாட அவன் விரும்புகிறான். எட்வர்டும் அவனது குடும்பத்தாரும் தங்களது உயிரைப் பணயம் வைத்து அவளைப் எப்படி பாதுகாக்கிறார்கள் என்பது தான் கதை.

ட்விலைட் திரை அரங்குகளில் நவம்பர் 21, 2008 அன்று திரையிடப்பட்டது. இப்படம் தனது துவக்க தினத்திலேயே 35.7 மில்லியன் அமெரிக்கடாலர் வசூலைக் குவித்தது. உலக அளவில் இந்த படம் 384,997,808 அமெரிக்க டாலர்களுக்கு திரையரங்கு வசூலை குவித்திருக்கிறது.

தி ட்விலைட் சாகா: நியூ மூன் (2008) தொகு

தி ட்விலைட் சாகா: நியூ மூன் என்ற திரைப்படத்தை கிறிஸ் வீட்ஸ் என்பவர் இயக்க, மெலிசா ரோசன்பெர்க் என்பவர் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த திரைப்படம் முதல் பகுதியின் தொடர்சியாக பெல்லாவின் பிறந்தநாள் விழாவில் கில்லன் குடும்பத்தால் வரும் அசம்பாவிதத்திற்கு பிறகு எட்வர்ட் பில்லாவை விட்டு பிரிகின்றான். இதனால் மனச்சோர்வுக்குள்ளாகும் பெல்லா. அதே தருணம் தனது நண்பனான ஓநாய் மனிதன் ஜேக்கப் பிளாக் உடன் இவரின் நட்பும் வலுவடைகிறது. பெல்லாவை விக்டோரியாவிலிருந்து காப்பாற்றுவதற்காக தனது உயிரை விட முடிவெடுக்கும் எட்வர்ட், இதை அறிந்து அவனை தேடி செல்லும் பெல்லா. கடைசியில் காட்டேரியின் தலைவரிடம் எட்வர்ட் பெல்லாவிடம், அவரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டால் அவளை ஒரு காட்டேரியாக மாற்றுவார் என்று கூறுகிறார்.

நவம்பர் 20, 2009 இல் வெளியாகி முதல் நாள் $72.7 மில்லியன் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ் (2010) தொகு

தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ் என்ற திரைப்படத்தை டேவிட் ஸ்லேட் என்பவர் இயக்க, மெலிசா ரோசன்பெர்க் என்பவர் திரைக்கதை எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தில் காட்டேரி எட்வர்ட் பெல்லாவை திருமணம் செய்வதில் உள்ள சிக்கல்கள் மற்றும் அதில் வரும் ஆபத்துக்களை விளக்குகின்றது. புதிதாக உருவாகும் ரத்தக்காட்டேரிகளால் பெல்லாவுக்கு ஆபத்து வருவதை உணர்த்த கெலன் குடும்பத்தினர் அவளை பாதுகாக்க ஓநாய் மனிதர்களிடம் உதவி கேட்டு அவளை பாதுக்காக்க முயற்சிக்கின்றனர். திருமணத்தில் உள்ள பிரச்சனைகளை பெல்லாவுக்கு புரியவைக்கும் முயற்சியில் நண்பன் ஜேக்கப் பிளாக். ஆனால் காதலனையும் விடமுடியாமல் நன்பனையும் விடமுடியாமல் தவிக்கும் பெல்லாவின் கதையை சொல்லுகின்றது இக் கதை. கடைசியில் இவர்களின் திருமணத்திற்கு எட்வர்ட் சம்மதம் தெரிவிக்கின்றார்.

இந்த திரைப்படம் ஜூன் 30, 2010 அன்று திரையரங்கில் வெளியிடப்பட்டது, இது ஐமாக்ஸில் வெளியிடப்பட்ட முதல் ட்விலைட் படமும் ஆகும். பாக்ஸ் ஆபிஸ் வரலாற்றில் உள்நாட்டில் (அமெரிக்கா மற்றும் கனடா) வில் மிகப் பெரிய சாதனையை இது உருவாக்கியது, இது 4,000 திரையரங்குகளில் $30 மில்லியன் டாலர்களை வசூலித்தது.

தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1 (2011) தொகு

தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1 திரைப்படத்தை பில் காண்டன் என்பவர் இயக்கியுள்ளார். முதல் பகுதிகளுக்கு திரைக்கதை எழுதிய மெலிசா ரோசன்பெர்க் என்பவரை இந்த திரைப்படத்திற்கும் எழுதியுள்ளார். பெல்லா மற்றும் எட்வர்ட் இருவரும் திருமணம் செய்துகொண்டு பெல்லா கர்ப்பமாகிறது. இதனால் மனித இனத்திற்கு ஆபத்து என்று அந்த குழந்தையை அழிக்க முடிவெடுக்கும் ஓநாய் மனிதர்கள் அவர்களை எதிர்த்து பெல்லாவுக்கு ஆதரவு கொடுக்கும் நண்பனான ஓநாய் மனிதன். இந்த கர்ப்பத்தால் பெல்லா கிட்டத்தட்ட இறப்பதற்கும் அவள் போராடுவதையும் அவர்கள் எப்படி அதை கையாளுகிறார்கள் என்பதுதான் கதை.

தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 (2012) தொகு

இந்த இரண்டாம் பாகத்தில் பெல்லாவுக்கு குழந்தை பிறந்தவுடன் அவள் எட்வர் ட்டால் மாற்றப்படுகின்றாள். அதே தருணம் இவர்களின் அரை மனித அரை காட்டேரி மகளால் காட்டேரி இனத்திற்கு ஆபத்து வரும் என் எண்ணி அந்த குழநதையை கொலை செய்ய வரும் காட்டேரிகள் அவர்களிடமிருந்து மகளை காப்பாற்ற ஒரு குழுவை உருவாக்கும் கேலன் குடும்பத்தினர். கடைசியில் எப்படி மகளை காப்பாற்றுகிறார்கள் என்பது தான் கதை.

மொத்த வருவாய் தொகு

படம் அமெரிக்கா வெளியீட்டு தேதி உற்பத்தி செலவு வசூல் வருவாய்
வட அமெரிக்கா பிற
பிரதேசங்கள்
உலகளவில்
டுவிலைட் நவம்பர் 21, 2008 $37,000,000 $192,769,854 $214,417,861 $407,187,715
தி டுவிலைட் சாகா: நியூ மூன்[8] நவம்பர் 20, 2009 $50,000,000 $296,623,634 $413,087,374 $709,711,008
தி டுவிலைட் சாகா: எக்லிப்ஸ்[9] ஜூன் 30, 2010 $68,000,000 $300,531,751 $397,959,596 $698,491,347
தி டுவிலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1[10] நவம்பர் 18, 2011 $110,000,000 $281,287,133 $430,918,723 $712,205,856
தி டுவிலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 [11] நவம்பர் 16, 2012 $136,000,000 $292,325,737 $537,422,083 $829,746,820
மொத்தம்[12] $401,000,000 $1,365,922,346 $1,980,234,710 $3,359,727,983

மேற்கோள்கள் தொகு

 1. Nicole Sperling (2008-07-10). "'Twilight': Inside the First Stephenie Meyer Movie". Entertainment Weekly (Time Inc). http://www.ew.com/ew/article/0,,20211840,00.html. பார்த்த நாள்: 2008-07-26. 
 2. Christina Radish (2008-09-17). "Twilight's Author and Director Talk About Bringing The Film To Life". MediaBlvd Magazine. Archived from the original on 2008-10-21. பார்க்கப்பட்ட நாள் 2008-10-31.
 3. Rich, Joshua (2008-11-22). "'Twilight' grosses $35.7 mil on Friday". EW.com (Entertainment) இம் மூலத்தில் இருந்து 2009-11-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091107125455/http://hollywoodinsider.ew.com/2008/11/22/twilight-friday/. பார்த்த நாள்: 2010-09-24. 
 4. Anne Thompson (2008-08-15). "'Twilight' moves into 'Potter's' place". Variety (Reed Business Information) இம் மூலத்தில் இருந்து 2019-03-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190324061918/https://filmylabs.blogspot.com/2019/02/captain-marvel-superhero-film-upcoming.html. பார்த்த நாள்: 2008-10-13. 
 5. Anthony D'Alessandro (2009-11-21). "'New Moon' takes opening day record". Variety (Reed Elsevier Inc.). https://variety.com/2009/film/box-office/new-moon-takes-opening-day-record-1118011716/. பார்த்த நாள்: 2009-11-21. 
 6. Joshua Rich (2009-02-20). "'Twilight': Third film in series, 'Eclipse,' set for June 2010". Entertainment Weekly. Archived from the original on 2009-02-23. பார்க்கப்பட்ட நாள் 2009-02-20.
 7. Dave McNary (2009-12-09). "'Eclipse' sets IMAX release". Variety. பார்க்கப்பட்ட நாள் 2009-12-31.
 8. "The Twilight Saga: New Moon (2009)". பாக்சு ஆபிசு மோசோ. IMDb.com, Inc. பார்க்கப்பட்ட நாள் 2009-11-18.
 9. "The Twilight Saga: Eclipse (2010)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 2012-07-11.
 10. "The Twilight Saga: Breaking Dawn – Part 1 (2011)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 2012-07-11.
 11. "The Twilight Saga: Breaking Dawn – Part 2 (2012)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் 2012-12-03.
 12. "Twilight Moviesat the Box Office". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் July 15, 2014.