ராமன் அறிவியல் மையம்

ராமன் அறிவியல் மையம் (Raman Science Centre and Raman Planetarium Complex) அல்லது ராமன் அறிவியல் மையம் மற்றும் ராமன் கோளரங்க வளாகம் இந்தியாவில் நாக்பூரில் உள்ள அறிவியல் மையம் ஆகும். இது மும்பையில் அமைந்துள்ள நேரு அறிவியல் மையத்துடன் இணைந்த ஒரு ஊடாடும் அறிவியல் மையமாகும் .[1] அறிவியல் அணுகுமுறைகளை ஊக்குவிப்பதற்கும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும், தொழில் மற்றும் மனித நலனில் அவற்றின் பயன்பாடுகளையும் சித்தரிப்பதற்கும், அறிவியல் கண்காட்சிகளை நடத்துவதற்கும் இந்த மையம் உருவாக்கப்பட்டது. இந்த மையத்திற்கு நோபல் பரிசு பெற்ற பிரபல இந்திய இயற்பியலாளரான சந்திரசேகர வெங்கட ராமன் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ராமன் அறிவியல் மையம் 1992 மார்ச் 7 ஆம் நாளன்று திறந்து வைக்கப்பட்டது. மேலும் கோளரங்கம் 5 ஜனவரி 1997 ஆம் நாளன்று தொடங்கி வைக்கப்பட்டது.[2] இந்த மையம் நாக்பூரின் மையத்தில் காந்தி சாகர் ஏரிக்கு எதிரே அமைந்துள்ளது. 1 ஏப்ரல் 2014 ஆம் நாளுக்கும் 31 மார்ச் 2015 ஆம் நாளுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த மையத்தினை 582,962 பார்வையாளர்கள் பார்வையிட்டுச் சென்றுள்ளதாக இந்த மையம் கூறுகிறது.[3] இந்த மையம் இந்தியாவின் தேசிய அறிவியல் அருங்காட்சியக கவுன்சிலின் (என்.சி.எஸ்.எம்) ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது. இது உலகின் ஒரே நிர்வாக குடையின் கீழ் அறிவியல் மையங்கள் / அருங்காட்சியகங்களைக் கொண்ட மிகப்பெரிய வலையமைப்பில் உள்ளது.[4] தேசிய அறிவியல் அருங்காட்சியகக் கவுன்சில் இந்த மையத்தை பிராந்திய மட்டம் என்ற நிலையில் மதிப்பிடுகிறது, மேலும் இதன் மொத்த தள பரப்பளவு 4333 சதுர மீட்டர் ஆகும்.[5]

ராமன் அறிவியல் மையம் மற்றும் ராமன் கோளரங்க வளாகம்
Map
நிறுவப்பட்டது1992
அமைவிடம்நாக்பூர்
வருனர்களின் எண்ணிக்கை1,44,40,963(தோராயமாக)(இன்று வரை)
வலைத்தளம்Website
நாக்பூரில் உள்ள ராமன் அறிவியல் மைய கட்டிடத்தின் முகப்பு

செயல்பாடுகள் தொகு

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை பொது மக்களிடையே பரப்புவதற்கு இந்த மையம் ஏராளமான திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த மையம் 14 பிப்ரவரி 2017 ஆம் நாள் முதல் புதுமை மையத்தைத் தொடங்கியுள்ளது. இது அறிவியலுக்காக அர்ப்பணிக்கப்பட்ட மாணவர்களுக்கு பல வாய்ப்புகளை வழங்குகிறது. உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனமான ஹிர்வாயுடன் இந்த மையம் இணைந்து பள்ளி செல்கின்ற குழந்தைகளின் மத்தியில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பச்சை விரல் விருது என்ற விருதினை வழங்கி வருகிறது.[6] ஆகஸ்ட் 2007 இல், தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப தொகுப்புப் பிரிவு திறந்து வைக்கப்பட்டது [7] அங்கு இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் இந்தியா விண்வெளி வீரர்களை விண்வெளியில் 2015 ஆம் ஆண்டிற்குள் அனுப்புவதாக அறிவித்தார்.[8] இந்த மையத்தில் தற்போது 4 வெவ்வேறு ஊடாடும் காட்சியகங்கள், ஒரு கண்டுபிடிப்பு மையம், மற்றும் 133 இருக்கைகள் கொண்ட கோளரங்கம்,[9] வேடிக்கையான அறிவியல், வரலாற்று காலத்திற்கு முந்தைய விலங்கு பூங்கா உள்ளிட்டவை அமைந்துள்ளன.[10] இந்த மையத்தில் அறிவியல் சொற்பொழிவுகள், அறிவியல் திரைப்பட நிகழ்ச்சிகள் மற்றும் முப்பரிமாண அறிவியல் காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன..[11] இந்த மையம் கிரக கண்காணிப்பு மற்றும் குடிமக்களுக்கான பிற வான நிகழ்வுகள் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு செயல்படுத்தி வருகிறது.[12]

பொதுத் தகவல் தொகு

அறிவியல் மையத்தின் அட்டவணை [2]

  • வாரத்தில் ஏழு நாட்களும்: காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை

</br> கட்டணங்கள் [2]

வருகை பொது மக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட பள்ளி குழுக்களில் மாணவர்கள்
அறிவியல் மையம் INR 25 / - INR 10 / -
கோளரங்கம் INR 50 / - INR 25 / -
ஒரு கோளத்தில் அறிவியல் INR 25 / -
3 டி தியேட்டர் INR 20 / - INR 10 / -

குறிப்புகள் தொகு

  1. "satellite units". www.nehrusciencecentre.org. Archived from the original on 17 September 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-06-06.
  2. 2.0 2.1 2.2 "General Information". www.nehrusciencecentre.org. Archived from the original on 18 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-06-06.
  3. "no. of Visitors". ncsm.gov.in. Archived from the original on 22 May 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-06-06.
  4. "ncsm.gov.in". ncsm.gov.in. Archived from the original on 22 May 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-06-06.
  5. "Units under NCSM". ncsm.gov.in. Archived from the original on 18 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-06-06.
  6. "hirwai". hirwai.org. Archived from the original on 26 July 2011. பார்க்கப்பட்ட நாள் 2008-06-06.
  7. "Information & Communication Technology". ncsm.gov.in. Archived from the original on 18 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-06-06.
  8. "India will send astronaut into space by 2015: ISRO chief". timesofindia.indiatimes.com. 3 August 2007. http://timesofindia.indiatimes.com/India/India_will_send_astronaut_into_space_by_2015_ISRO_chief/articleshow/2254060.cms. பார்த்த நாள்: 2008-06-06. 
  9. "planetarium". ncsm.gov.in. Archived from the original on 18 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-06-06.
  10. "galleries". www.nehrusciencecentre.org. Archived from the original on 18 June 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-06-06.
  11. "Shows". www.rscnagpur.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2008-06-06.
  12. "Planet observation". www.nagpurplus.com. Archived from the original on 2011-10-04. பார்க்கப்பட்ட நாள் 2008-06-08.. The centre has 1,44,94,443 visitors since 1987.

மேலும் காண்க தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராமன்_அறிவியல்_மையம்&oldid=3718291" இலிருந்து மீள்விக்கப்பட்டது