ராம்குமார் ராமநாதன்

இந்திய டென்னிஸ் வீரர்

ராம்குமார் ராமநாதன் (Ramkumar Ramanathan) 1994 நவம்பர் 8இல் பிறந்த ஒரு தொழில்முறை இந்திய டென்னிசு வீரர் ஆவார்.[2] ஏ.டி.பி. உலக சுற்றுப்பயணத்தில் சோம்தேவ் தேவ்வர்மனுடன் இறுதிக்குச் சென்ற முதல் இந்திய வீரர் ஆவார். அவர் 2018 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி உலகத் தர வரிசையில் 111 வது இடத்தில் இருந்தார். அவர் டேவிஸ் கோப்பையில் இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்துகிறார்.

Ramkumar Ramanathan
நாடு இந்தியா
வாழ்விடம்பார்செலோனா &
சென்னை
பிறப்பு8 நவம்பர் 1994 (1994-11-08) (அகவை 29)
சென்னை, India
உயரம்1.88 m (6 அடி 2 அங்) (6 அடி 2 அங்)
விளையாட்டுகள்Right-handed (two-handed backhand)
பயிற்சியாளர்Juan Balcells &
Sergio Casal
பரிசுப் பணம்$575,436
ஒற்றையர் போட்டிகள்
சாதனைகள்20–24 (45.45% in ATP World Tour and Grand Slam main draw matches, and in டேவிசுக் கோப்பை)
பட்டங்கள்0
0 Challenger, 16 ITF
அதிகூடிய தரவரிசைNo. 111 (30 July 2018)
தற்போதைய தரவரிசைNo. 136 (4 March 2019)[1]
பெருவெற்றித் தொடர்
ஒற்றையர் முடிவுகள்
ஆத்திரேலிய ஓப்பன்Q3 (2018)
பிரெஞ்சு ஓப்பன்Q2 (2015)
விம்பிள்டன்Q2 (2016)
அமெரிக்க ஓப்பன்Q2 (2015, 2017)
இரட்டையர் போட்டிகள்
சாதனைகள்2–6 (25% in ATP World Tour and Grand Slam main draw matches, and in டேவிசுக் கோப்பை)
பட்டங்கள்0
1 Challenger, 15 ITF
அதியுயர் தரவரிசைNo. 214 (17 October 2016)
தற்போதைய தரவரிசைNo. 239 (4 March 2019)
இற்றைப்படுத்தப்பட்டது: 8 March 2019.

தனிப்பட்ட மற்றும் ஆரம்ப வாழ்க்கை தொகு

ஐந்தாவது வயதில் டென்னிசு விளையாடுவதை ராமநாதன் துவங்கினார். இவரது தந்தை ராமநாதன் இவ்விளையாட்டிற்கு இவரை அறிமுகப்படுத்தினார். அவரது தாயின் பெயர் அழகம்மை மற்றும் சகோதரியின் பெயர் உமா என்பதாகும். அவரது பெற்றோர் இருவரும் துணி வியாபாரத்தில் உள்ளனர். அவர் ஆங்கிலம், ஸ்பானிஷ் மற்றும் தமிழ் பேசுகிறார். அவர் ஸ்பெயினின் பார்சிலோனாவின் சான்செஸ்-காசல் அகாடமியில் பயிற்சி பெற்றார்.[3]இலயோலாக் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.[4]

தொழில் தொகு

2014-2016: ஆரம்பகால வாழ்க்கை தொகு

சென்னை ஓபன் டென்னிசு தொடரின் முதல் சுற்றில் முதல் தர இந்திய வீரர் சோம்தேவ் தேவ்வர்மனை வென்று காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.[5][6][7] பின்னர், அவர் இரண்டாவது சுற்றில் மார்செல் கிரானோலஸிடம் தோற்றார்.

2015 ஆம் ஆண்டில், ராமநாதனின் விளையாட்டு பெரும்பாலும் கடினமாகவே இருந்தது. ஏப்ரல் மாதம், அவர் சென்னை ஓபன் போட்டிகளில் டட்சுமா இடோ உடன் நேர் செட்களில் தோல்வியுற்றார்.[3] சவால் நிறைந்த துருக்கியின் மெர்சின் கோப்பை போட்டியில் தனது முதல் இரட்டையர் இறுதிப் போட்டியை அடைந்தார். ரிக்கார்டோ கெடின் உடன் இணைந்து, விளையாடிய இந்த இணை இறுதிப் போட்டியில் மேட் பவிக் மற்றும் மைக்கேல் வீனஸ் ஆகியோரிடம் தோற்றது.[8] கோலாலம்பூரில் நடைபெற்ற மலேசிய ஓபன் தொடரில் தனது இரண்டாவது ஏடிபி உலக சுற்றுப்பயணத்தில், அங்கு அவர் முதல் சுற்றில் மிக்கேல் குகுஷ்கினை வீழ்த்தினார்.[3]

2017: சாதனை மற்றும் வெற்றிகள் தொகு

ஏப்ரல் மாதத்தில், ராமநாதன் தனது முதல் ஒற்றையர் போட்டியின் இறுதிப் போட்டியில் தாலஹாசியை சந்தித்தார். ஸ்லோவேனியாவின் பிளேஸ் ரோலாவிடம் இறுதிப் போட்டியில் ரன்னர்-அப் ஆக முடித்தார்.[9]

2018: முதல் ஏடிபி உலக சுற்றுப்பயண இறுதிப்போட்டி தொகு

2018இல் மகாராஷ்டிரா ஓபனில் வைல்டு கார்டு மூலம் நுழைந்தார். அதில் இரண்டாவது சுற்றுகளில் மாரின் கிளிக் என்பவரிடம் நேர் செட்களில் தோல்வியடைந்தார்.[10] பின்னர் அவர் ஆஸ்திரேலிய ஓபனுக்கு தகுதிபெற்றார், அங்கு அவர் வாசெக் போஸ்பிசில் என்பவரிடம் இறுதிப் போட்டியில் தோற்றார்.[11]

குறிப்புகள் தொகு

  1. ATP Profile
  2. "Ramkumar RAMANATHAN". itftennis.com. Archived from the original on 10 நவம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 25 January 2014.
  3. 3.0 3.1 3.2 "Ramakumar Ramanathan - ATP Profile". atpworldtour. பார்க்கப்பட்ட நாள் 16 August 2017.
  4. "A day to remember for Ramkumar". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-sports/a-day-to-remember-for-ramkumar/article4096680.ece. பார்த்த நாள்: 16 August 2017. 
  5. "Chennai Open: Yuki Bhambri wins opener, Somdev Devvarman loses to Ramkumar Ramanathan". sports.ndtv.com. Archived from the original on 3 ஜனவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 25 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Chennai Open: After beating Somdev Devvarman in round 1, 19-year-old R Ramanathan hopes to break into top-200 by end of 2014". dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 25 January 2014.
  7. "Ramkumar Arrives With a Bang". newindianexpress.com. Archived from the original on 21 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 25 January 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Draw PDF" (PDF). பார்க்கப்பட்ட நாள் 17 August 2017.
  9. "Paes-Lipsky win Tallahassee Challenger title". http://timesofindia.indiatimes.com/sports/tennis/top-stories/paes-lipsky-win-tallahassee-challenger-title/articleshow/58444922.cms. 
  10. Judge, Shahid (4 January 2018). "Maharashtra Open: Clinical Marin Cilic gives Ramkumar Ramanathan a schooling". IndianExpress. http://indianexpress.com/article/sports/tennis/maharashtra-open-clinical-marin-cilic-gives-ramkumar-ramanathan-a-schooling-5010607/. பார்த்த நாள்: 4 January 2018. 
  11. Tirkey, Joy (14 January 2018). "Yuki Bhambri Qualifies For Australian Open, Ramkumar Ramanathan Misses Out". NDTV. https://sports.ndtv.com/tennis/australian-open-yuki-bhambri-qualifies-ramkumar-ramanathan-misses-out-1799870. பார்த்த நாள்: 15 January 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்குமார்_ராமநாதன்&oldid=3625993" இலிருந்து மீள்விக்கப்பட்டது