ராம்பன்
ராம்பன் (Ramban) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள ராம்பன் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். இந்நகரம் பிர் பாஞ்சால் மலைத்தொடரில் அமைந்த ஒரு மலைவாழிடம் ஆகும். செனாப் சமவெளியில், தேசிய நெடுஞ்சாலை 1எ (இந்தியா)-இல் உள்ள ராம்பன் நகரத்தில் செனாப் ஆறு பாய்கிறது. இது கடல் மட்டத்திலிருந்து 73792 அடி உயரத்தில் உள்ளது. இது ஜம்முவிலிருந்து வடக்கே 150 கிமீ தொலைவிலும்; சிறீநகரிலிருந்து 150 கிமீ தெற்கிலும் உள்ளது.
இராம்பன் | |
---|---|
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)யில் இராம்பன் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 33°15′N 75°15′E / 33.25°N 75.25°E | |
நாடு | இந்தியா |
ஒன்றிப் பகுதி | ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) |
மாவட்டம் | ராம்பன் |
ஏற்றம் | 747 m (2,451 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 3,596 |
எழுத்தறிவு | |
• நகரம் | 82.23% |
• மாவட்டம் | 54.27% |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 182144 |
தொலைபேசி குறியீடு | 01998 |
வாகனப் பதிவு | JK 19 |
ஜம்முவிலிருந்து தொலைவு | 150 கிமீ |
சிறீநகரிலிருந்து தொலைவு | 150 கிமீ |
இணையதளம் | ramban.gov.in |
மக்கள்தொகை பரம்பல்
தொகு7 வார்டுகளும், 729 வீடுகளும் கொண்ட ராம்பன் நகராட்சியின் 2011-ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் ப்டி, மொத்த மக்கள்தொகை 3,596 ஆகும். அதில் ஆண்கள் 1873 மற்றும் பெண்கள் 1723 ஆகவுள்ளனர். சராசரி எழுத்தறிவு 82.23% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 56.70%, முஸ்லீம்கள் 41.46% மற்றவர்கள் 1.84% ஆகவுள்ளனர். [1]