ராம்லா

இசுரேல் நாட்டில் உள்ள ஒரு நகரம்

ராம்லா (Ramla) (எபிரேயம்: רַמְלָה‎, Ramla; அரபு மொழி: الرملة‎, ar-Ramlah) வட்டார வழக்கில் இந்நகரை ராம்லே அல்லது ரெம்லே அல்லது ராமா என்றும் அழைப்பர். [2] இந்நகரம் இஸ்ரேல் நாட்டின் நடுப்பகுதியில், மத்திய மாவட்டத்தில் அமைந்துள்ளது.

ராம்லா
  • רַמְלָה
  • الرملة
நகரம்
எபிரேயம் transcription(s)
 • ISO 259ராம்லா
 • வட்டார வழக்கில்ராம்லே
2013-இல் இராம்லா நகரத்தின் கழுகுப் பார்வை
2013-இல் இராம்லா நகரத்தின் கழுகுப் பார்வை
Official logo of ராம்லா
ராம்லா நகரத்தின் இலச்சினை
ராம்லா is located in இசுரேல்
ராம்லா
ராம்லா
நடு இஸ்ரேலில் ராம்லா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 31°55′39″N 34°51′45″E / 31.92750°N 34.86250°E / 31.92750; 34.86250
நாடு இசுரேல்
மாவட்டம்மத்திய மாவட்டம்
நிறுவிய ஆண்டுகிபி 705–715
அரசு
 • மேயர்மைக்கேல் விடால்
பரப்பளவு
 • மொத்தம்9.993 km2 (3.858 sq mi)
மக்கள்தொகை
 (2014)[1]
 • மொத்தம்72,293
 • அடர்த்தி7,200/km2 (19,000/sq mi)

ராம்லா நகரம், தற்கால இஸ்ரேல் நாட்டில் உமையா கலீபகம் ஆட்சியின் போது, கிபி 8-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நிறுவப்பட்டது. இந்நகரம் எகிப்தின் கெய்ரோ நகரத்தையும், சிரியாவின் டமாஸ்கஸ் நகரத்தையும் இணைக்கும் வகையில் நிறுவப்பட்டது. இராம்லா நகரததுடன் கிழக்கில் மத்திய தரைக் கடலின் ஜாப்பா துறைமுகம் மற்றும் மேற்கில் ஜெருசலம் நகரங்களை இணைக்கும் சாலைகள் உள்ளது.[3]

துவக்கத்தில் ராம்லா நகரத்தில் பாலஸ்தீனர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தனர். 1948 அரபு இஸ்ரேலியப் போருக்குப்[4]பின் இஸ்ரேலிய அரசு, ராம்லா நகரத்தில் யூதர்களை அதிக அளவில் குடியேற்றினர். 2019-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி, ராம்லா நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் யூதர்கள் 76% ஆகவும்; பாலஸ்தீனர்கள் 24% ஆகவும் இருந்தது.

தொல்லியல்

தொகு

விவிலியம் நூலின் படி, ராம்லா நகரம் முன்னர் பிலிஸ்தியர்களின் காத் எனும் நகரமாக இருந்தது. [5][6] அகழ்வாய்வின் போது இப்பழைய நகரம் ராம்லா நகரத்திற்கு வெளியே தெற்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.[7]

அகழாய்வு வரலாறு

தொகு

ராம்லா நகரத்தில் 1992-1993-ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.[8] பின்னர் 2010 முதல் ராம்லா நகரத்தில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.[9]

நியண்டர்தால் மனிதனுக்கு முந்தைய மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

தொகு

2021-ஆம் ஆண்டில் ராம்லா நகரத்தின் வெளிப்புறத்தில் நடத்தப்பட்ட அகழாய்களில் நியண்டார்தல் மனிதனுக்கு முந்தைய காலத்திய, சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஆண்டுகள் மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த நபர் ஒருவரின் பகுதி அளவு மண்டை ஓடு மற்றும் தாடை எலும்பு மற்றும் கற்கால கருவிகளும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.[10][11][12][13]

மக்கள் தொகை பரம்பல்

தொகு
கால வாரியாக மக்கள் தொகை
ஆண்டும.தொ.ஆ. ±%
194515,300—    
197234,000+3.00%
200162,000+2.09%
200463,462+0.78%
200965,800+0.73%
201472,293+1.90%

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 2014 populations Israel Central Bureau of Statistics
  2. King, Edmund (2004) "Stephen (c.1092–1154)" Oxford Dictionary of National Biography Oxford University Press, Oxford, England, online edition accessed Oct 27, 2009
  3. University of Haifa பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் Excavation in Marcus Street, Ramala; Reports and studies of the Recanati Institute for Maritime Studies and Excavations, Haifa 2007
  4. Pilger, 2011, p. 194
  5. Ishtori Haparchi, Kaphtor u'ferach, vol. II, chapter 11, s.v. ויבנה בארץ פלשתים, (3rd edition) Jerusalem 2007, p. 78 (Hebrew)
  6. B. Mazar (1954). "Gath and Gittaim". Israel Exploration Journal 4 (3/4): 227–235. 
  7. Ramla: Excavations and Surveys in Israel (2009)
  8. "Vincenz : Ramla | The Shelby White – Leon Levy Program for Archaeological Publications". Fas.harvard.edu. Archived from the original on September 6, 2008. பார்க்கப்பட்ட நாள் May 6, 2009.
  9. Israel Antiquities Authority, Excavators and Excavations Permit for Year 2010, Survey Permit # A-5947, Survey Permit # A-6029, Survey Permit # A-6052, and Survey Permit # A-6057
  10. ஆதிமனித வரலாறு: ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதி மனித இனம் -மண்டை ஓட்டில் வெளியான ரகசியம்
  11. Meet Nesher Ramla Homo - new early human discovered at Israeli cement site
  12. Nesher Ramla Homo: New form of ancient human unearthed in Israel
  13. A Middle Pleistocene Homo from Nesher Ramla, Israel

ஆதார நூற்பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்லா&oldid=3656588" இலிருந்து மீள்விக்கப்பட்டது