ராயல் என்ஃபீல்ட் (இந்தியா)

ராயல் என்ஃபீல்ட் இந்தியாவில் சென்னையை தலைமையிடமாக கொண்டு மோட்டார் சைக்கிள்களை தயாரிக்கும் நிறுவனமாகும். முற்காலத்தில் பிரித்தானிய மோட்டார் சைக்கிள், ராயல் என்ஃபீல்ட் மற்றும் மெட்ராஸ் மோட்டார்ஸ் (தற்போது எய்சர் மோட்டாரின் துணை நிறுவனம்) இவை அனைத்தும் இந்தியாவின் மோட்டார் சைக்கிள் உற்பத்தியாளர்களாக சிறந்து விளங்கின.[1] இதன் தனித்தன்மையான மோட்டார் சைக்கிள் ராயல் என்ஃபீல்ட் புல்லட், தனது தனிப்பட்ட அதிரவைக்கும் ஒலியுடன் கூடிய உயர்திறன் இயந்திரங்கள் இந்த நிறுவனத்தின் மதிப்புமிக்க மோட்டார் சைக்கிள் வகைகளில் குறிப்பிடத்தக்கது.[2]

ராயல் என்ஃபீல்ட்
வகைதுணை நிறுவனம்
நிறுவுகைஎன்ஃபீல்ட் இந்தியாவாக 1955-ல் நிறுவப்பட்டது
தலைமையகம்சென்னை, இந்தியா
தொழில்துறைமோட்டார் வாகனம்
உற்பத்திகள்புல்லட் மோட்டார் சைக்கிள்
தாய் நிறுவனம்எய்சர் மோட்டார்ஸ்
இணையத்தளம்www.royalenfield.com

வரலாறு தொகு

ராயல் என்ஃபீல்ட் மோட்டார் சைக்கிள்கள் 1949 முதல் இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டது. 1949 ஆம் ஆண்டு கே. ஆர் சுந்தரம் ஐயர் என்பவர் ராயல் என்பீல்ட் உள்ளிட்ட பிரித்தானிய மோட்டார் சைக்கிள்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து விற்பதற்காக சென்னையில் மெட்ராஸ் மோட்டார்ஸ் என்ற பெயர் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். இந்திய அரசாங்கம், காவல் துறை மற்றும் இராணுவத்துறையின் ரோந்துப் பணிக்காக புல்லட்டை தேர்வு செய்தது. அதற்காக மெட்ராஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தை இந்திய அரசு அணுகியது. இந்திய அரசாங்கம் 800 350சிசி வகை புல்லட்டை வாங்க முன்வந்தது. இது மெட்ராஸ் மோட்டர்ஸ்சுக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. பிரிட்டனில் இருந்து மிகுந்த எண்ணிக்கையில் வாகனங்களை அனுப்புவதை விட மெட்ராஸ் மோட்டர்ஸ்சுடன் இணைந்து இந்தியாவிலேயே ஆலை தொடங்க ராயல் என்பீட் நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி 1955 ஆம் ஆண்டு சென்னை திருவெற்றியூரில் ராயல் என்பீட் நிறுவனத்தின் ஆலை துவக்கபட்டது. பல்வேறு காரணங்களினால் 1971 இல் பிரிட்டனில் இருந்த ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் தாய் நிறுவனம் மூடப்பட்ட நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் நிறுவனம் இயங்கிவந்தது.

ஒரு கட்டத்தில் பொதுமக்கள் ராயல் என்பீட் வாகனத்தை வாங்குவது குறைந்து, நிறுவனம் கடும் இழப்பை சந்திக்கத் துவங்கியது. இந்நிலையில் 1994 இல் எய்சர் மோட்டார்ஸ் நிறுவனம் ராயல் என்பீட் நிறுவனத்தை வாங்கியது. நிறுவனத்தின் புதிய தலைமை நிறுவனத்தை மீண்டும் இலாபம் ஈட்டும் நிறுவனமாக மாற்றியது.[3]

புதிய வகைகள் தொகு

கடந்த சில வருடங்களாக பல்வேறு வகையான மோட்டார் சைக்கிள்கள் உலக அளவில் விற்கப்படுகின்றன.

  • புல்லட் 350 மற்றும் 500
  • புல்லட் எலக்ட்ரா
  • க்ளாசிக் டிசர்ட் ஸ்டார்ம்
  • க்ளாசிக் க்ரோம்
  • க்ளாசிக் பேட்டில் கிரீன்
  • க்ளாசிக் 350 மற்றும் 500
  • தண்டர்பேர்ட் 350 மற்றும் 500 (நீக்கப்பட்டவை)
  • மீட்டியோர் 350
  • காண்டினென்டல் ஜிடி
  • ஹிமாலயன் 411 நீக்கப்பட்டது [4]
  • காண்டினென்டல் ஜிடி 650
  • இன்டர்செப்டார் 650 [5]
  • சூப்பர் மீட்டியோர் 650 தமிழ் பிஎச்பி
  • ஹிமாலயன் 450 [6]

ராயல் என்ஃபீல்ட் 1995-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யபடுகின்றது. அமெரிக்காவில் கிடைக்கும் வகைகள்:

  • க்ளாசிக் 500
  • புல்லட் எலக்ட்ரா - எக்ஸ்
  • புல்லட் எலக்ட்ரா - க்ளாசிக்

அமைவிடம் தொகு

ராயல் என்ஃபீல்ட் தொழிற்சாலை சென்னையில் உள்ள திருவொற்றியூரில் அமைந்துள்ளது. இது உலகில் இன்றளவும் வழக்கத்தில் உள்ள மிக பழமையான மோட்டார் சைக்கிள் நிறுவனமாகும்.[1][2] 2013-ஆம் ஆண்டு மே மாதம் தனது புதிய தொழிற்சாலையை சென்னையை அடுத்த ஒரகடத்தில் நிறுவியது.[7] மூன்றாவது தொழிற்சாலையை சென்னை அருகில் உள்ள வல்லம் வடகல் பகுதியில் நிறுவியுள்ளது[8]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Varun Sinha (January 15, 2014). "Royal Enfield's success boosts Eicher Motors fortunes". என்டிடிவி.
  2. 2.0 2.1 Samanth Subramanian (Jan 4, 2014). "Royal Enfield Bullet: India's cult motorcycle takes on the world". த நியூயார்க் டைம்ஸ்.
  3. "ராயல் என்பீல்ட் மீண்ட கதை: சிஇஓ பி.கோவிந்தராஜன் சிறப்புப் பேட்டி". Hindu Tamil Thisai. 2023-05-29. பார்க்கப்பட்ட நாள் 2023-05-30.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-08-27. பார்க்கப்பட்ட நாள் 2017-10-02.
  5. "ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650 ட்வீன் & கான்டினென்டல் ஜிடி 650 ட்வீன் அறிமுகம் – EICMA 2017"[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 விற்பனைக்கு வந்தது"வார்ப்புரு:ஆட்டோமொபைல் தமிழன்
  7. De Cet, Mirco (2005). Quentin Daniel. ed. The Complete Encyclopedia of Classic Motorcycles. Rebo International. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-366-1497-9. 
  8. புதிய ராயல் என்பீல்டு ஆலை உற்பத்தி தொடங்கியது

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Royal Enfield motorcycles
என்பதில் ஊடகங்கள் உள்ளன.