ராய்காஞ்ச் பறவைகள் சரணாலயம்

ராய்காஞ்ச் பறவைகள் சரணாலயம் (Raiganj Wildlife Sanctuary) குலிக் பறவைகள் சரணாலயம் எனும் பெயரால் பரவலாக அறியப்படுகிறது. இது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உத்தர தினஜ்பூர் மாவட்டத்தில் ராய்காஞ்ச் எனும் இடத்தில் அமைந்துள்ளது. ஆசியாவின் இரண்டாவது பெரிய சரணாலயாக இது அறியப்படுகிறது.[1] இச்சரணாலயத்தில் 164 வகையான பறவைகள் உள்ளன.[2][3] மேலும் 70,000 முதல் 80,000 பறவைகள் புலம் பெயர்ந்து வருடந்தோறும் இங்கு வந்து செல்கின்றன.[4] இச்சரணாலயம் 1985 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இப்பறவைகள் சரணாலயம் 1.3 சதுர கிலோமீட்டர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது.

ராய்காஞ்ச் பறவைகள் சரணாலயம்
குலிக் பறவைகள் சரணாலயம்
Map showing the location of ராய்காஞ்ச் பறவைகள் சரணாலயம்
Map showing the location of ராய்காஞ்ச் பறவைகள் சரணாலயம்
அமைவிடம்மேற்கு வங்காளம், இந்தியா
கிட்டிய நகரம்ராய்காஞ்ச்
பரப்பளவு1.3 சதுர கிலோமீட்டர்கள்
நிறுவப்பட்டது1985
நிருவாக அமைப்புவனத்துறை அமைச்சு மற்று மேற்கு வங்க அரசு.

அமைவிடம்தொகு

இந்தப் பறவைகள் சரணாலயம் ராய்காஞ்ச் நகரிலிருந்து 4 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளது. ராய்காஞ்ச் நகரானது கொல்கத்தாவிலிருந்து 425 கிலோமீட்டர்கள் தொலைவிலும், சிலிகுரி நகரிலிருந்து 181 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்துள்ளது. [5]

காலநிலைதொகு

இச்சரணாலயத்தின் வெப்பநிலை கோடைக்காலத்தில் 38° முதல் 21° வரையிலும், குளிர்காலத்தில் 23° முதல் 6° வரையிலும் இருக்கும்.[5] வருடாந்திர சராசரி மழையளவு (ஜூலை முதல் செப்டம்பர் வரை) 1,550 மில்லிமீட்டர்கள் ஆகும்.[5]

வெளி இணைப்புகள்தொகு

மேற்கோள்கள்தொகு

  1. http://www.hoparoundindia.com/west-bengal/raiganj-attractions/raiganj-wildlife-sanctuary.aspx
  2. "The Asian Open-billed Stork thrives in the Kulik Bird Sanctuary". ecologyasia.com. பார்த்த நாள் 2008-02-05.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Sharma, Arunayan. "A winged heritage site". The Statesman, 3-4 August 2007. பார்த்த நாள் 2008-02-05.[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Place of tourist interest in Raiganj". Indian Tourist Guide. indiantouristspots. பார்த்த நாள் 2008-02-05.
  5. 5.0 5.1 5.2 "Welcome to North Dinajpur district". 638387.org, an Indian NGO initiative. பார்த்த நாள் 2008-02-05.