ரார்செசுடெசு ஜெயராமி

ஜெயராம் புதர் தவளை
குரலெலுப்பும் ஆண் தவளை
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ராகோபோரிடே
பேரினம்:
ரார்செசுடெசு
இனம்:
ரா. ஜெயராமி
இருசொற் பெயரீடு
ரார்செசுடெசு ஜெயராமி
பிஜூ & போசுயுத், 2009
ரார்செசுடெசு ஜெயராமியின் நேரடி வளர் முட்டைகள்.

ஜெயராம் புதர் தவளை என்று அழைக்கப்படும் ரார்செசுடெசு ஜெயராமி (Raorchestes jayarami) இந்தியாவில் தமிழ்நாட்டின் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள வால்பாறையில் காணப்படும் ராகோபோரிடே என்ற துணைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 600 முதல் 1800 மீட்டர்களுக்கு இடையில் காணப்படுகிறது.[2][3][4][1]

தோற்றம்

தொகு

ரார்செசுடெசு பேரினத்தைச் சேர்ந்த இந்தச் சிற்றினத்தின் உயிரிகள், பச்சை நிறத்திலிருந்து கரும் பச்சை, புள்ளிகள் மற்றும் சில சமயங்களில் மஞ்சள் நிற மாறுபாடுகள் வரையிலான புறத்தோற்றங்களில் காணப்படும்.[5] ரார்செசுடெசு பேரினத்தைச் சேர்ந்த தவளைகள், தலைப்பிரட்டை வளர்ச்சி நிலை இல்லாத நேரடி-உருமாற்றத்தினைக் கொண்டுள்ளது.[5]

வாழிடம்

தொகு

ஜெயராம் புதர் தவளை மனிதக் குடியிருப்புகளுக்கு இடையே காணப்படும் சிறிய காடு மற்றும் சோலைக்காடுகள் பகுதிகளில் வசிக்கின்றன. இவை தேயிலைத் தோட்டங்களிலும் காணப்படுகின்றன.

அச்சுறுத்தல்கள்

தொகு

அறிவியலாளர்கள் இந்தத் தவளை இதன் சிறிய, வாழிடத் துண்டாக்கம் காரணமாக வாழிட வரம்பில் அழிந்து வரும் நிலையில் உள்ளது என வகைப்படுத்துகின்றனர். இதன் வாழிடம் மரம் வெட்டுதல் மற்றும் விவசாயத்துடன் தொடர்புடைய காடழிப்புக்கு உட்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தவளைகளின் வாழிடத்தின் பகுதிகளில் ஆண்டுதோறும் புனித யாத்திரை நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்பவர்கள் புல்வெளிகளில் தீ மூட்டி இந்தத் தவளையைத் தொந்தரவு செய்கின்றனர்.

விஞ்ஞானிகள் காலநிலை மாற்றத்தை இந்த இனத்திற்கு அச்சுறுத்தல் என்றும் குறிப்பிடுகின்றனர். இவை அதிக உயரத்தில் வசிப்பதால், இவற்றின் வரம்பு வெப்பமடையும் பட்சத்தில் வடக்கு நோக்கி நகர முடியாத நிலையில் உள்ளன.

பாரம்பரிய மருத்துவத்தில் குழந்தைகளின் இருமல், பேசமுடியாமை, நடக்க இயலாமை போன்றவற்றுக்கு இந்தத் தவளை எப்போதாவது பயன்படுத்தப்படுகிறது.

ரார்செசுடெசு பேரினத்தில் உள்ள மற்ற தவளைகளில் பேட்ராசோகைதிரியம் டெண்ட்ரொபேடிடிசு பூஞ்சை பாதிப்பு ஏற்படுத்துவது போன்று இந்தத் தவளையிலும் கைட்ரிடியோமைகோசிசு நோயினை ஏற்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 IUCN SSC Amphibian Specialist Group. (2023). "Raorchestes jayarami". IUCN Red List of Threatened Species 2023: e.T186162A1810810. doi:10.2305/IUCN.UK.2023-1.RLTS.T186162A1810810.en. https://www.iucnredlist.org/species/186162/1810810. 
  2. Frost, Darrel R. (2014). "Raorchestes jayarami (Biju and Bossuyt, 2009)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 25 September 2014.
  3. "Raorchestes jayarami (Biju and Bossuyt, 2009)". AmphibiaWeb. University of California, Berkeley. பார்க்கப்பட்ட நாள் August 28, 2023.
  4. Biju, S. D.; Bossuyt, Franky (2009). "Systematics and phylogeny of Philautus Gistel, 1848 (Anura, Rhacophoridae) in the Western Ghats of India, with descriptions of 12 new species" (in en). Zoological Journal of the Linnean Society 155 (2): 374–444. doi:10.1111/j.1096-3642.2008.00466.x. 
  5. 5.0 5.1 Vijayakumar, S. P.; Dinesh, K. P.; Prabhu, Mrugank V.; Shanker, Kartik (2014-12-10). "Lineage delimitation and description of nine new species of bush frogs (Anura: Raorchestes, Rhacophoridae) from the Western Ghats Escarpment" (in en). Zootaxa 3893 (4): 451–488. doi:10.11646/zootaxa.3893.4.1. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. பப்மெட்:25544534. 

வெளி இணைப்புகள்

தொகு
  •   விக்கியினங்களில் Raorchestes jayarami பற்றிய தரவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரார்செசுடெசு_ஜெயராமி&oldid=4105391" இலிருந்து மீள்விக்கப்பட்டது