கைட்ரிடியோமைகோசிஸ்

நீர்நில வாழ்வனவற்றைத் தாக்கும் ஒரு தொற்று நோய்

கைட்ரிடியோமைகோசிஸ் (Chytridiomycosis) என்பது நீர் நிலவாழ்வனவற்றுக்கு பூஞ்சைகளால் ஏற்படும் நோய்த்தொற்று ஆகும். இது பெரும்பாலும் கைட்ரிடு எனும் பூஞ்சையால் ஏற்படுகிறது. கைட்ரிடியோமைகோசிஸ் பாதிப்பால் மேற்கு வட அமெரிக்கா, நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா, கிழக்கு ஆஸ்திரேலியா, கிழக்கு ஆப்பிரிக்கா (தன்சானியா)[1] மற்றும் கரிபியனின் டொமினிக்கா மற்றும் மொன்செராட் ஆகிய பகுதிகளில் உள்ள பெருமளவிலான நில நீர்வாழ்வன இனங்களின் அழிவுக்குக்குக் காரணமாக கருதப்படுகிறது. எதிர்காலத்தில் புதிய உலகில் இந்த நோயின் ஆபத்து மிகுதியாக உள்ளதாக கருதப்படுகிறது.[2] இந்த நோயை உருவாக்கும் பூஞ்சைகளை கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன, என்றாலும் அவை பெரிய அளவுக்கு சாத்தியமுள்ளதாக நிரூபிக்கப்படவில்லை. உலகளாவில் 30% நிலப்பகுதிகளில் இந்த நோய் பாதிப்பு உள்ளதாக அறியப்படுகிறது. உலகளாவில் நீர் நிலவாழ்வினவற்றின் எண்ணிக்கைச் சரிவுக்கான காரணியாக இந்நோய் குறிப்பிடப்படுகிறது.[3]

கைட்ரிடியோமைகோசிஸ் தொற்றுக்கு ஆளான தவளை
Chytridiomycosis in Atelopus varius—two sporangia containing numerous zoospores are visible.

இந்தப் பூஞ்சையானது நீர்நிலவாழ்விகளான தவளைகளின் தோலில் வளர்கிறது. இதனால் அவற்றின் உடலில் இருக்கும் ஈரத்தன்மையின் சமநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, அவற்றின் உடலுக்குள் உதிரப்போக்கு ஏற்பட்டு, மாரடைப்பால் இறக்கின்றன.

பரவியவிதம்

தொகு

ஆப்பிரிக்கத் தவளை (ஸெனோபஸ் லெவிஸ்) மற்றும் அமெரிக்கப் பெரிய தவளை (லித்தோபேட்ஸ் கேட்ஸ்பியன்ஸ்) ஆகியவை இந்தப் பூஞ்சானைப் பரப்பும் கடத்திகளாக உள்ளன. இந்தத் தவளை வகைகள் பூஞ்சைகளுக்கு எதிராகப் போராடும் நோய் எதிர்ப்பு ஆற்றலைக் கொண்டிருக்கின்றன. மீன்பிடித் தொழிலுக்காகப் பல நாடுகளுக்கும் அதிக அளவில் இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பூஞ்சை பாதிப்புக்கு உள்ளான இவ்வகைத் தவளைகள் வழியாக இதர நாடுகளில் உள்ள தவளைகளுக்கு இந்தப் பூஞ்சை நோய் பரவின.

கடந்த 2013 - 2015 ஆண்டுகளில் இந்தப் பூஞ்சையின் தாக்கம் பற்றி ஆராய தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களின் சில காடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ச்சியான ஆய்வுக்குப் பிறகு, தமிழக, கேரள பகுதியைச் சார்ந்த தவளை இனங்களை இந்தப் பூஞ்சை தாக்கி இருப்பது தெரியவந்துள்ளது.[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Nectophrynoides asperginis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2011.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2009. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. Olson, Deanna H.; Aanensen, David M.; Ronnenberg, Kathryn L.; Powell, Christopher I.; Walker, Susan F.; Bielby, Jon; Garner, Trenton W. J.; Weaver, George et al. (2013). Stajich, Jason E. ed. "Mapping the Global Emergence of Batrachochytrium dendrobatidis, the Amphibian Chytrid Fungus". PLoS ONE 8 (2): e56802. doi:10.1371/journal.pone.0056802. பப்மெட்:23463502. பப்மெட் சென்ட்ரல்:3584086. http://www.plosone.org/article/info%3Adoi%2F10.1371%2Fjournal.pone.0056802. 
  3. Stuart S. N.Expression error: Unrecognized word "etal". (2004). "Status and trends of amphibian declines and extinctions worldwide". Science 306 (5702): 1783–1786. doi:10.1126/science.1103538. பப்மெட்:15486254. 
  4. பிரவிண் குமார் (23 சூன் 2018). "தப்புமா தவளைகள்". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 28 சூன் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கைட்ரிடியோமைகோசிஸ்&oldid=3577057" இலிருந்து மீள்விக்கப்பட்டது